Monday, 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பதினொன்று


மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பதினொன்று
******************************************************
Irakasiya Thedal : - அன்பரின் பல வினாக்களுக்கான பதில்
இரண்டு நிமிடங்களில் சிரமப் பட்டு மலை ஏற இன்னும் ஒரு மாத காலம் ஆகும்.. மிக மிக யதார்த்தமாக மூச்சு இளைப்பு சிறிதும் இன்றி சுலபமாக இரண்டு நிமிடங்களில் மலையேற நிர்ணயக்கப் பட்ட காலம் டிசம்பர் 31.. பின் தான் சூட்சம தேக தீவிர பயிற்சி தரப் படும்.. தடி கூத்தின் மூலம் விண்ணக சக்தியை பெற பயிற்சி தரப் படுகிறது.. புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான இந்த விண்ணக சக்தி ( Lavitational force ) மூலம் ஒரு பறவைக்கான விசேச ஆற்றல் கிடைக்கும்... இயக்கத்தில் 80 கிலோ எடைகொண்ட தேகம் இந்த விண்ணக சக்தியால் 30 கிலோ எடையாக நொடி பொழுதில் மாறி இருக்கும் வேளையில் தங்கள் செயல் திறனில் பெருந்த உயர் மாற்றம் காண முடியும்.. இப்பொழுது எல்லா அன்பர்களும் மிக குறைந்த இளைப்போடு நிற்காமல் மலை ஏற்றத்தை 7 நிமிடம் முதல் 12 நிமிடத்திற்குள் முடிக்கின்றனர்.. அதுவும் இரவு முழுவதும் விழித்திருந்து பின் காலையில் செய்கிறார்கள்.. அதுவே இரவு நன்கு தூங்கி காலையில் எப்பொழும் போல செய்தானர்களானால் 5 நிமிடத்திற்கு குறைவாக முடிப்பார்கள் என நம்பலாம்..
உடன் பாடு சுவாசம் மேன்மை அடைந்தால் மட்டுமே கதி பயிற்சி சொல்லி தரப் படும்.. காரணம் இளைபாறுதல் ஆற்றல் ஈடு கட்டுதல் போன்றவைகள் யதார்த்த உடன்பாடு சுவாசத்தில் மட்டுமே உள்ளது.. கதி என்பது சக்தியை முறையாக செலவு செய்து பெருத்த இலாபம் ஆதாயம் தேடும் வழி.. கதி என்பது சக்தியை செலவு செய்யும் நிர்வாகம்.. ஆகையால் கதி சுவாச ஒழுங்கிற்கிற்கு எந்த வகையிலும் ஈடு ஆகாது... முறையற்ற செலவால் இயக்கத்தில் குறை ஏற்படாமல் தடுக்கவே கதி சுவாசமும் அதில் உள்ள எட்டு வகை கூத்தும்... மனிதன் முறையற்ற சக்தி செலவால் தான் மிகுந்த நஷ்டம் அடைந்து முடிவில் மரணத்தை ஏற்கின்றான்.. சங்கரர் விவேகானந்தர் போன்றோர்கள் மரணத்தை முடிவில் ஏற்றாலும். தங்கள் பிறவியில் மிக உன்னத காரியங்களை இந்த கூத்துகளின் மூலம் செய்ய முடிந்தது... என் முடிவான பதில் இதுவே உடன்பாடு சுவாசத்தில் மேன்மை அடைந்தால் மட்டுமே கதி சுவாசத்திற்கான வாசல் திறக்கப் படும்.. அப்படி இல்லாத கதி சுவாசம் பொய்யான கதியாய் மாறி தீங்கு மிக செய்யும்.. சில அன்பர்கள் விண்ணக சக்தியை சற்று உணர்வதாக கூறுகிறார்கள்..

மடி கூத்து என்பது தூங்காமல் தூங்கும் பயிற்சி.. நெருப்பில் நடக்கும் போது ஒரு மனிதன் தூங்க முடியுமா ? தூங்க முடியும் என்பது மடி கூத்து பயில்பவர்களுக்கு மட்டுமே புரியும்... மடி கூத்து பயில்பவர்கள் எந்த ஒரு அரிய காரியத்தையும் மிக யதார்த்த நிலையில் செய்யும் திறன் உடையவர்கள் ஆவார்கள்... மிகுந்த ஓய்வினை கடுமையான பயிற்சியின் நடுவே பெற்றுக்கொள்ளும் நுணுக்கங்களை உடையது.. புருஸ் லீ பல தடவை சொன்னான்.. என்னவென்றால் எனது இரண்டு மிக பலமான குத்துக்களிடையே நான் எடுத்துக் கொள்ளும் அந்த அரை வினாடி ஓய்வின் மூலம் மட்டுமே அந்த அசாதரண காரியம் சாத்தியமாகிறது என்பது தான்.. கடுமையான பாரத போரின் நடுவே மிகுந்த அமைதியில் சொல்லப் படவேண்டிய பகவத் கீதை உருவானது இந்த மடி கூத்தின் மூலம் தான்.. சுவாச ஒழுங்கில் மேன்மை அடைந்த அன்பர்கள் அனைவருக்கும் கதி சுவாசப் பயிற்சி நிச்சயம் உண்டு.. அன்பர்களுக்கு பொறுமையும் காத்திருக்கும் பண்பும் தேவை... பொறுமையும் காத்திருத்தலும் ஒரு சிறந்த யோகம் என்பதை உணர்ந்தவர்களின் திடமான நம்பிக்கை.... முறையற்ற கதி பயிற்சியில் ஆர்வ கோளாரினால் பாதிக்கப் பட்ட மனித வர்க்கத்திற்கு நமது முறையான கதி சுவாச பயிற்சி அவசியம் தேவை... பயின்ற அன்பர்கள் பல கிளைகளாக பிரிந்து பாதிக்கப் பட்டவர்களுக்கு கற்று தருவார்கள்..

மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பத்து


மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பத்து
***********************************************************************
திரு கூத்தன் நிலை
சுவாசம் என்பதின் உண்மையான பொருள் சுவர்க்க வாசம்.. முறையான சுவாசம் அல்லது சுவாச ஒழுங்கு நம்மை இந்த பூவுலகிலேயே சுவர்க்கத்தில் வாசம் செய்வதற்கு இணையான அனுபவத்தை தரவல்லது.. அப்படியான சுவாசத்தை நரக வாசம் ஆக்கிய பெருமை (!!!! ???? ) நம் மனதிற்கே உண்டு.. மனம் கெடுத்தவிட்ட, பாழ் படுத்திய சுவாசத்தை ஒழுங்கு படுத்த முனையும் போது, அந்த சுவாசம் சு (சுவர்க்க) வாசமாக நிச்சயம் மாறும்.. இந்த சுவாசம் தன் இயல் நிலையான இன்பநிலையை அடைய நான்கு வகையான சுவாச நிலைகளில் மேன்மை அடைகிறது..
1) இயல்பான சுவாசம்:--- இயல்பான நிலையில் விலங்குகளும், சற்று மேன் பட்ட நிலையில் உள்ள மனித சுவாசம். இது பூமியில் புவி ஈர்ப்பு எதிராகவும் உள்ளே மொத்தமாக ஒடுங்கி போகாமல் உள் இருந்து சதா காலமும் ஓங்க செய்ய அண்ட ஆற்றலின் தூண்டலால் வெளிக் காற்றின் மூலம் நடை பெறுவது.. இதில் மட்டுமே வாழும் மனிதன் அவனவன் விதி பிரகாரம் வாழ்வியலை நடத்தலாம்... ஆனால் முதல் நிலையான இந்த இயல்பான சுவாசத்தில் அரை குறையான அண்ட ஆற்றலையே மனிதன் பெறுகிறான்...
2) சுவாச ஒழுங்கு:--- இயல்பான சுவாசத்தில் இயங்கும் மனிதன் தன் விழிப்பு நிலையை பெருக்குவதின் மூலம் தன் சுவாசத்தின் மூலம் அதிகமான அண்ட ஆற்றலை மனித தரத்தில் உயர்வாக பெற முடியும்.. இதில் சுவாசத்தை முழுமையாக பயன் படுத்தி சுவாச ஒழுங்கினை தன்னில் நிறுவி மனித தரத்தின் உச்சிக்கு செல்ல முடியும்.. காற்றை ஊடகமாக, ஒரு வாகனமாக வைத்து, அதில் கிடைக்கும் அண்ட ஆற்றலை முழுமையாக உள் வாங்குகிறான் யோகி..
3) கதி சுவாசம்:-- கதி சுவாசத்தை அறியும் முன் சுவாசிக்கும் காற்றின் தன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.. அண்ட ஆற்றலை தாங்கி வரும் காற்று உடலில் உட் புகுந்து வெளி வரும் போது, உடலில் உள்ள வெப்பத்தையும் அபகரித்து வெளியே வருகிறது.. அதனால் விளையும் தேக ஆற்றல் இழப்பு மிகவும் அதிகமானது.. அந்த வெப்பத்தோடு மனமும் வெளியே செல்லத் துடிக்கிறது... கரும் புகையை கக்கும் பெட்ரோல் வண்டி குறைந்த மைலேஜ் தருவது போல் நம் சுவாசத்தால் நாம் சரியான அளவில் அண்ட ஆற்றலை பெற இயலவில்லை... இதை மையப் படுத்தியே நம் தமிழ் சித்தர்கள் சுவாசத்தில் அதி கனல் பெற கதி சுவாசத்தை கண்டு பிடித்தனர்.. கதி என்பதை பிரித்தால் க்+ அதி எனலாம்.. இதில் 'க்' என்பது கனல் என்ற கடவுள் ஆற்றல் ஆகும்... இதில் காற்றின் துணையை வெகுவாக குறைத்துக் கொண்டு கனலை அதிகமாக வாங்கும் திறனை பெறலாம்.. ஆனால் இன்றைய சித்த வித்தியார்த்திகள் கதி என்று கூறிக்கொண்டு அதிகமான வெப்பத்தை வெளியே விட்டு ஜீவ சக்தியை தவறான சுவாசத்தால் கனல் மிக குறைவாகப் பெற்று, தங்கள் மரணக்குழியை தாங்களே விரைவாக தேர்வு செய்யும் அவல நிலைக்கு செல்லுகிறார்கள்.. இந்த கதி சுவாசம் நேரடி பயிற்சி மூலம் மட்டுமே தரப் பட வேண்டும்... கதி சுவாசம் பயிலுகிறவர்கள் மாமனித தரத்திற்கு செல்லும் தகுதியை பெறுகிறார்கள்...
இந்த கதி சுவாசத்தில் தான் எட்டு வகையான கூத்துகள் என்ற கதி சுவாச வகைகள் உள்ளன.. அவைகளின் மூலம் கனலை முறையாக திறமையாக பயன் படுத்தி யோக கலைகள் தற்காப்பு கலைகள் மருத்துவ கலைகள், அஷ்டமா சித்து கலைகள் போன்றவைகளை பெறலாம்... அடி கூத்து, தடி கூத்து, படி கூத்து, மடிகூத்து, இடிகூத்து, பரகூத்து, மற்ற இரண்டு உள் அடங்கிய மறை கூத்து போன்ற எட்டு வகை கூத்துக்கள்.. பிரம்மவஸ்திரம் போன்ற மிக பயங்கரமான சக்திகளை இயக்கக்கூடிய கூத்துக்கள் அந்த மறை கூத்தில் உள்ளது... அப்படி எட்டு வகை கூத்துகளில் செயல் பாட்டை மேன் படுத்த நடு நாயகமாக விளங்கும் சிவ கலப்பு ஒன்று இல்லையேல் எல்லாமே கேலி கூத்து ஆக மாறி விடும்.. அப்படி சிவ கலப்பு துணை புரியாத எந்த கூத்தும் சிறு பலனை கூட தராது.. கலப்பு திறனை பெருக்க உதவக்கூடிய சிவகலப்பு தந்த நம் சித்தர் மக்களின் கருணை உள்ளத்திற்கு நாம் எந்த விதத்திலும் நன்றி கடன் செலுத்த முடியாது..
கதி என்ற சொல்லுக்கு இன்னொரு விளக்கம் கலப்பு -க- திறன் -தி- என சொல்லப் படுகிறது..
கலப்பு திறன் தரும் சிவ கலப்பு இன்றி செய்யும் எதுவும் சவமாய் பலன் இன்றியே போகும்.. சிவ கலப்போடு எட்டு கூத்தக்களை ஆடும் சிவனை தான் திரு கூத்தன் என்றார்கள்.. அந்த எட்டு கூத்துகளோடு சிவ என்ற இரண்டு பூதங்களை சேர்த்து பத்தாகி நின்ற நிலையை அடைய முடியாததால் எட்டு இரண்டு கூட்டி எண்ணவும் அறியாது இருக்கின்றீர் பித்த உலகினரே என்றார் வள்ளலார்.. பத்து என்ற சொல்லை பிரித்தால் ப் + அத்து எனலாம்.. ஏகம் என்ற வடமொழி சொல்லே தமிழில் அத்து என்பது... து என்பது துவைதம் என்ற இரண்டு நிலை.. அத்து என்பது இரண்டு அற்ற அத்துவைத நிலையாகிய ஏக நிலை.. பத்து என்பது, இறை நிலையும் உயிரின நிலையும் ( ப் என்பது) ஒன்றாகி இரண்டு அற ( அற்று ) கலந்து ஒன்றாய் நின்ற ஏக நிலையாம்..
4) கனல் சுவாசம் என்பது வெளிக்காற்றின் துணை சிறிதும் இன்றி, கனலை மட்டுமே உள் வாங்கி ஆதி சக்தியை இறைவனுக்கு சமமாக பெற்று சமாதி ( சம ஆதி ) நிலையில் நிறை நிலை மனிதனாய் கருணை வடிவாய் நீதிமானாய் நீதியை நிலை நாட்டுபவனாய், நிற்பது..
தேர்ந்தெடுக்கப் பட்ட ஐந்து மதுரை அன்பர்களுக்கு இரவு முழுவதும் தொடர்ந்து தீவிர பயிற்சியாக முதல் நான்கு கூத்துக்கள் கற்று தரப் படுகிறது... ஆனால் பிறவி பழக்கமாக வந்த வெளிச்ச தொடர்பு காரணமாக சிவ கலப்பின் திறன் குறைந்த காரணத்தினால் எதிர் பார்த்த பலன் கிடைக்க வில்லை.. சிவகலப்பின் முக்கியத்தவத்தை முற்றிலும் உணர்ந்த பின் அவர்களின் வேகம் அதிகமாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.. தீர்மானிக்கப் பட்ட கால கெடுவுக்குள் தங்கள் பயிற்சியில் முழுமை அடைவார்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வார்கள் என நம்பலாம்.. அவர்கள் வெற்றியை தொடர்ந்து கோவை திருச்சியில் பயிலும் மற்ற அன்பர்களுக்கும் நிச்சயம் பயிற்சி அளிக்கப் படும்...

மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி ஒன்பது


மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி ஒன்பது
*************************************************
முடியாததை முடிவுக்கு கொண்டு வர
புற கடன் அக கடன் என்பதில் அக கடன் என்ற மிகப் பெரிய பயிற்சியை அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது... புற கடன் பெருக பெருக ஒரு மனிதன் தன் நிலை இழந்து வேதனையும் துன்பத்தையே பெறுவான்.. ஆனால் அக கடன் பெருக பெருக ஒரு மனிதன் புறக் கடனிலிருந்து முழுமையாக விடுப்பட்டு புறத்தே தானமாக இலவசமாக மற்றவர்களுக்கு வாரி வாரி வழங்கும் தகுதியை பெறுவான்..
அந்த அக கடன் தான் என்ன என்பதை சற்று பார்ப்போம்.. ஆதி தமிழில் கடன் என்பது 'க்' + அடன் என்பது.. அடன் என்பது அடைந்தவன் அடைகிறவன் அடையப் போகிறவன் என பொருள்... கடன் என்பது 'க்' என்ற கடவுள் ஆற்றலை அடைகிறவன் என பொருள்.. ஒவ்வொரு ஆன்மீக வாதியும் அந்த அக கடன் அடையவே பயணிக்க வேண்டும்.. ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப் பட்ட நிலையில் இறை ஆற்றல் வந்து கொண்டே இருக்கிறது.. மிகவும் வருந்த தக்க செய்தி என்னவென்றால் அந்த விதிக்கப் பட்ட ஆற்றலை மனிதன் முழுமையாக பயன் படுத்துவதே இல்லை.. அப்படி முழுமையாக பயன் படுத்துவபவர்கள் தான் உலக வரலாற்று நாயகர்கள்... அவர்கள் மனித தரத்திற்கு உச்சத்திற்கு போனவர்கள்.. அவ்வளவே... ஆனால் மா மனித தரத்திற்கு செல்ல மர்ம யோகம் பல நுணுக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.. அதில் அக கடன் பெறும் பயிற்சி முக முக்கியமானது...
விதிக்கப் பட்ட ஆற்றலையே குறைவாக பயன் படுத்தும் மனித குலம் சிறுக சிறுக தன் சோம்பலால் குறைத்துக் கொள்கிறது.. பின் தன் தேகத்திற்கு போதுமான ஆற்றல் கிடைக்காத நிலையில் உடல் துன்பம் அனுபவிக்க தொடங்குகிறான்.. மீண்டும் மீண்டும் சோம்பலால் ஆற்றலை பயன் படுத்தாமல் உயிர் துன்பம் வர தொடங்குகிறது.. பின் உயிரே உடலில் நிற்க முடியாத நிலையில், தேகத்தில் மையம் கொண்ட ஆற்றல் அனைத்தையும் இழந்த நிலையில் மரணம் நிகழுகிறது.. மனிதன் குழந்தையாக இருந்த நிலையில் கிடைத்த விதிக்கப் பட்ட ஆற்றலை தன் சோம்பலால் சிறுக சிறுக குறைத்துக் கொண்டு முடிவில் சுவாசிக்க முடியாத அளவிற்கு சுருங்கி, மரணம் அடைகிறான்.. மர்ம யோகிகள் முதலில் தங்களுக்கு விதிக்கப் பட்ட ஆற்றலை முழுமையாக வீரம் கொண்டு வெற்றி கொள்கிறார்கள்.. பின் மரண நிலைக்கு தாங்களே விழிப்பு நிலையால் செல்லும் அளவிற்கு தங்களிடம் உள்ள மையம் கொண்ட ஆற்றலையும் இழக்க துணிவு வீரம் கொள்கிறார்கள்... இந்த மையம் கொண்ட ஆற்றல் தான் இறைவன் இறைவன் எல்லா உயிருக்கும் கொடுத்த உயிர் கொடை அல்லது பரிசு.. இதில் உள்ள ஆற்றலை இலவசமாக பெற மனிதனுக்கு உரிமை இல்லை.. ஆனால் கடனாக பெறலாம்.. ஆனால் மனிதர்கள் இறைவனுக்கு துரோகம் செய்து இலவசமாக பெற்று செலவழித்து மரணத்தை தண்டையாக பெறுகிறார்கள்... இப்படி இருக்க மர்மயோகியர் விதிக்கப் பட்ட ஆற்றலுக்கு மேல் மையம் கொண்ட ஆற்றலையும் கடனாக வாங்கி பயன் படுத்துகிறார்கள் .. ஏறக்குறைய மரண நிலைக்கு துணிவு கொண்டு செல்லுகிறார்கள்.. இப்படி மரண நிலைக்கு விழிப்பு நிலையால் செல்லும் போது அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை..
இந்த நிலையில் தான் இந்த உயிரை படைத்த அண்ட ஆற்றல் தன் தனி பெரும் கருணையால் இழந்த மையம் கொண்ட தேக ஆற்றலையும், விதிக்கப் பட்ட அண்ட ஆற்றலையும் சேர்த்து கொடுக்கத் துவங்குகிறது.. இதனை தன் விழிப்பு நிலையில் உடன் பாடு சுவாசத்தின் மூலம் முழுமையாக மர்ம யோகிகள் பெறுகிறார்கள்.. இந்த ஆற்றலே அதிகப் பட்ட ஆற்றலாகும்... இது கடனாக பெற்ற மையம் கொண்ட உயிர் கொடை ஆற்றலையும் ஈடு செய்து மேற் கொண்டு விதிக்கப் பட்ட ஆற்றலையும் நிறைவு செய்ய அதிகப் பட்ட ஆற்றலை அண்ட பேரறிவு வாரி வழங்குகிறது.. இதனை முன் பதிவுகளில் தெளிவாக சொல்லப் பட்டு இருக்கிறது.. இந்த அதிகப் பட்ட ஆற்றலை பெறவே குணங்குடி மஸ்தான் தன் பாடல்களில் இறக்கத் துணிந்து கொண்டேன் என்ற தலைப்பில் பல பாடல்களை பாடி உள்ளார்..
இதில் அதிசயம் என்ன வென்றால் ஒரு தடவை அண்ட ஆற்றலை அதிகப் பட்ட ஆற்றலாக, கிடைத்து விட்டால் அதுவே அந்த மனிதனுக்கு விதிக்கப் பட்ட ஆற்றலாய் மாறி விடுகிறது.. இந்த முறையில் விதிக்கப் பட்ட ஆற்றலை படிப்படியாக மர்ம யோகிகள் உயர்த்திக் கொண்டே செல்லுகிறார்கள்.. அதனால் மனித தரத்திலிருந்து மாமனித தரத்திற்கு உயர தொடங்குகிறார்கள்... பின் தெய்வ தரத்திற்கும் முடிவான இறை நிலை தரமான நிறை நிலை மனித தரத்திற்கும் செல்லுகிறார்கள்.. கனல் பெருக்கத்தை அடைய மரண நிலை நோக்கி நகரும் வீரத்தால் இந்த பயிற்சி கனல் வீர பயிற்சி என அழைக்கப் படுகிறது... இப்படி மரண பயம் இன்றி வீரம் கொண்டு கனலை அதிகப் பட்ட ஆற்றலாக பெற துணிவு கொண்ட மதுரை அன்பர்கள் ஐவருக்கு தற்போது தீவிர பயிற்சி தரப் படுகிறது.. தங்கள் வீரத்தால் கனலை அதிகம் பெற்று விரைவில் மாமனித தரத்திற்கு உயர்வார்கள் என நம்பலாம்.. அவர்களின் வீரம் அவர்களுக்கு மிகவும் துணையாக இருக்கிறது.. மர்ம யோகம் வீரம் கொண்டவர்களுக்கே பொருந்தும்.. இந்த பயிற்சியே தமிழ் வீரம் தான்.. அந்த வீரம் இல்லாமையால் பொய்யான வீரம் வெளிப்பட்டு இன்று தமிழ் மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறது.. உண்மை வீரமாம் தமிழ் வீரம் கொண்டு மேன்மை அடைவோமாக.. முடியாததோடு மோதி மோதி அககடன் பெற்று அதிகப் பட்ட ஆற்றலால் முடியாததை முடிவுக்கு கொண்டு வருவோம்.. உலகிற்கு நல் வழி காட்டுவோமாக...



மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி எட்டு


மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி எட்டு
****************************************************
எது ஒன்று இருந்தால் எல்லாம் இருக்குமோ ?!!!
அரும்பாடு பெற்ற அனைத்தையும் ஒரு நாள் இழக்க நேரிடுகிறது.. பெற்றதிலே பெருமை கொண்ட மனிதன் அதை இழப்பதை பற்றி துளியும் கவலைப் படுவதில்லை.. அது எவ்வாறு இழக்கப் படுகிறது என்பதை பற்றி ஆராய்வதே இல்லை.. ஒரு நாள் இருந்தது இருந்தேன் என்ற ஆணவ மலம் ஒன்றே போதும் என மனிதன் நினைக்கின்றான்.. அளப்பரிய பொருளை பாடுபட்டு தேடி குவித்தாலும். மரணத்தின் தருவாயில் குவித்த பொருள்கள் அனைத்தும் இழக்கின்றோமே என்ற கவலை மனிதனுக்கு இருப்பது போல தெரியவில்லை.. இறப்பிற்கு முன் சில நொடிகளுக்கு முன்னால் கூட தான் பெற்றதை நினைத்து மன நிறைவு கொண்டுதான் இருக்கின்றான்.. அந்த மன நிறைவோடு மரணத்தை தழுவுவதில் எந்த பிரச்சனையும் மனிதனுக்கு இல்லை.. நிறைவேற்றாத ஒன்று இருந்தால் மட்டுமே மன கசப்போடு இறக்கிறான்.. துரியோதனன் உயிருக்காக போராடிக் கொண்டு இருக்கிறான்.. பாண்டவர்கள் மரணச் செய்தியை கேட்காமல் தன் உயிர் பிரியக்கூடாது என்ற பிடிவாதத்தால் உயிரோடு போராடிக்கொண்டு இருக்கின்றான்.. கடைசியில் பாண்டவர்களின் தவறான மரணச்செய்தியை கேட்ட பிறகே அவனின் உயிர் பிரிகிறது.. இப்படியாக எல்லாம் இழந்தாலும் ஏதோ ஒன்றை சாதித்து விட்டால், இழந்தாலும் நிம்மதி அடைகிறான்.. இது அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் என்ற பழமொழிக்கு ஒத்ததாக உள்ளது.. அறுவை சிகிச்சை வெற்றி களிப்பிலே மரணத்தை தழுவதில் எந்த இடர்பாடும் மனிதன் அடைவதில்லை.. இதுதான் மனிதனின் மன திருப்தி என்பது.. மனதிருப்தி போன்ற மூடச் செயல் எதுவும் இல்லை என்பதை மட்டும் மனிதன் புரிந்து கொள்ளவே முடிவதில்லை..
காதற்ற ஊசியும் நிரந்தரமாக எடுத்துச் செல்ல முடியாது என்று மரணத்திற்கு பின் நன்கு அறிந்து இருந்தும், மன நிறைவு என்ற மாயை ஒன்றே போதும் என மனிதன் இருக்கிறான்... ஆனால் மரணத்திற்கு பின் எடுத்துச்செல்லக் கூடிய ஒன்று உண்டு என மனிதன் இதுவரை அறியவே இல்லை.. அப்படி அறிந்து இருந்தாலும் அதை நம்பும் படியாக மனிதனுக்கு இருப்பதில்லை... அப்படி மரணத்திற்கு பின் எடுத்துச்செல்லக்கூடிய அந்த உயர்ந்த பொருள் விழிப்பு என்ற ஒன்றே.. அதனையே வள்ளுவர் புகழ் என குறிப்பிடுகிறார்.. தோன்றில் புகழோடு தோன்றுக என்றார்.. இந்த புகழ் தான் பிறவி விட்டு வேறு ஒரு பிறவிக்கு எடுத்துச் செல்ல கூடிய ஒரு உன்னதமான ஒன்று... பு என்ற உயிர் இயக்கத்திற்கும் க என்ற இறை இயக்கத்திற்கும் பூரண இணைப்பான 'ழ்' என்ற ழ கரமாகும்.. இந்த விழிப்பு நிலையான புகழ் ஒன்றை மட்டுமே மனிதன் மரணத்திற்கு பின்னும் எடுத்துச் செல்ல முடியும்.. மரணத்திற்கு பின்னும் எடுத்துச் செல்லக் கூடிய ஒன்று இருந்தால், மனிதனுடைய மரணம் மரணமாகாது.. அது தூக்க நிலைக்கு ஒத்தாகி விடும்... அதாவது மரணத்திற்கு பின்னும் மனிதன் வாழ்கிறான் என்றால் அதற்கு சாட்சி அவன் தன் உடன் எடுத்து செல்லும் விழிப்பு என்ற புகழ் ஒன்றே..
ஆகவே தான் விழிப்பு என்ற புகழை போல் உன்னத பொருள் எதுவும் இல்லை என்ற உணர்ந்த அந்த கணமே மனிதன் தெளிவு என்ற ஞானம் அடைகிறான்.. ஞானம் அடைந்தவன் தான் வாழும் காலத்தே உலகத்தில் உள்ள அனைத்தையும் பெறக் கூடிய ஆற்றல் இருந்தாலும், எவையெல்லாம் மரணத்திற்கு பின் எடுத்துச் செல்ல முடியாதோ அவைகளுக்கு எல்லாம் ஆசை படுவதில்லை.. மர்ம யோகம் எது ஒன்று கிடைத்தால் நித்தியம் நிரந்தரம் கிடைக்குமோ, அந்த ஒன்றை பெறவே முயலும்.. அதே நேரத்தில் தேவையானால் எல்லாம் பெறக்கூடிய வல்லமையும் தன்னிடத்தே வைத்துக் கொண்டும் இருக்கும்... மர்ம யோக பயிற்சிகள் அனைத்தும் நித்திய அநித்தியமானவை அனைத்தையும், பெறும் அளவிற்கு வடிவமைக்கப் பட்டவைகளே.. அதனால் தான் உலகம் வெளிச்சம் போட்டு காட்டும் யோகப் பயிற்சிகள் போல் இல்லாமல், சற்று புரியாத மர்மமாகவே இருக்கும்.. அந்த மர்மத்தை மர்மமாகவே ஏற்றும் கொள்ளும் போது, அந்த தோன்றா நிலையை தோன்றாநிலையாகவே ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே அது வேறு ஒன்றும் இல்லை அது உன்னத மெய் பொருளான விழிப்பு நிலையென விளங்க வரும்.. முதலில் புரியாத ஒன்றாக உள்ள மர்மயோகத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மர்ம யோகிகள் ஆவார்கள்.. பின் எல்லாம் புரிந்தவர்களாக ஆகும் போது ஞான யோகிகளாக மாறுகின்றனர்.. முதலில் புரிய வை பின் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பவர்களுக்கு இந்த மர்ம யோகம் சரிப்பட்டு வராது.. இதுதான் கடவுள் என ஒன்றை காண்பித்து ஏமாற்றும் வேலை எதுவும் இல்லை.. இப்பொழுது சத்தியம் உண்மையை தவிர கவர்ச்சி என்ற பொய்மை எதுவும் இந்த மர்ம யோகத்தில் இல்லை என அன்பர்கள் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்..

அன்பர்கள் : மிக்க நன்றி ஐயா , அனைவரும் சொல்வது போல் தங்களுடைய பதிவுகள் நன்றாக உணர்ந்த புரிந்த பின்பும் அதை தொடர்ச்சியாக பயிற்சி செய்ய எங்களால் முடியவில்லை , ஆழமான சோம்பேறி தனத்தில் ஊறி போய் இருக்கிறோம் .தாங்கள் சொல்லி கொடுத்த விசயங்களையே நாங்கள் தொடர்ச்சியாக செய்ய வில்லை .மேலும் தங்களிடம் விசயங்களை கேட்டு தங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பாததால் தான் ஐயா தங்களை தொடர்பு கொள்ளாமல் இருக்கிறேன் .
மனதில் ஆசை இருக்கிறது செயல்படுத்த மனதில் உறுதி இல்லை

Marma Yoogi
 
மனதில் ஆசைகள் மட்டுமே இருக்கும்.. ஆசைகளில் உழன்று, உழன்று கனவுகளில் மிதந்து மிதந்து காலத்தை கடக்கும் சோம்பல் நிலையை மட்டுமே மனதில் இருக்கும்.. அந்த மனம் அற்ற நிலையான தோன்றா நிலையில் விழிப்பு என்ற தெய்வீக நிலையில் செயல் பாடு ஒன்று மட்டும் தான் இருக்கும்.. செயல் பாடு எத்தனை சிரமமாக இருந்தாலும், அதனை வெல்ல வீரமும் விவேகமும் கொண்டு முடித்தே தீரும்.. சுவாசத்தில் உடன்பாடு சுவாசத்திற்கு ஏற்ற சூழ்நிலை
ஏற்படும் போது மனம் கடந்த நிலையான தோன்றாநிலையில் மனதின் சோம்பல் அறவே முறியடிக்கப் பட்டு, எழுச்சியும் வேகமும் விழிப்பு நிலையால் பெறுகின்ற அற்புதத்திற்கு இணையான ஒன்று எதுவும் இல்லை.. வீறு கொண்டு எழ தோன்றா நிலையை உடனே பிடிக்கவும் அதில் நிலையாய் நிற்கவும் பழகினாலே போதும்.. அனைத்தும் தானாக செயல் கூடும்.... காரணம் மனம் கடந்த நிலையில் நடப்பதால், தானாக நடப்பது போல மனிதருக்கு தெரியும்...
 
 
 

மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி ஏழு


மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி ஏழு
**************************************************************
சிவகலப்பின் மறுக்கப் பட்ட மறைக்கப் பட்ட மர்மம்
மனம் ஒன்றோடு கலக்கும் செயல்பாடு உடையது.. மண் பொன் பெண் விசயங்களில் மனம் கலக்கும் விதம் வேறு.. அன்பு தயை கருணை நல் ஒழுக்கம் போன்றவைகளில் கலக்கும் விதம் வேறு.. இந்த இரண்டிற்கும் மனதின் கலப்பு திறன், மிகுந்த வித்தியாசம் உடையது.. மேல் பரப்பாக மனம் கலக்கும் போது மனதிறன் மிக குறைவாக இருக்கும்.. ஆழ ஆழ ஆழ் நிலையில் மனம் கலக்கும் போது, மனதிறன் எல்லை இல்லாத அளவிற்கு உயர்ந்து இருக்கும்.. எப்படி வானத்திற்கு எல்லை இல்லையோ அப்படியே இந்த ஆழ் நிலை மனதிறனுக்கு எல்லையே இல்லை..
மனதை ஒன்றில் பொருந்துதல் அல்லது பொருத்துதல்,- இணைத்தல் அல்லது இணைதல்- கலத்தல் அல்லது கலப்பு - இவற்றிற்கு ஒரு அளவு கோல் உண்டு.. தமிழ் யோகத்தில் இதற்கு அளவு கோல் உண்டு.. அது பௌதிக கலப்பு, இரசாயன கலப்பு, அணுக்கூட்டு கலப்பு, அணுக்கலப்பு, அணு துகள் நிலை கலப்பு என ஐந்து வகை கலப்புகள் இருக்கின்றன.. இவைகளின் கருத்து மிக முக்கியமானது.. உண்மையான ஆன்மீக முன்னேற்றம் இந்த கலப்பில் மட்டுமே உள்ளது.. பௌதிக கலப்பு மிக மேலோட்டமான கலப்பு தேக கலப்பு.. இரசாயண கலப்பு என்பது மன கலப்பு.. அணுக்கூட்டு கலப்பு என்பது ஆன்மா கலப்பு அல்லது உயிர் கலப்பு.. அணுக் கலப்பு என்பது அருளோடு கூடிய துவைத கலப்பு.. அணு துகள் கலப்பு என்பது அருளாய் ஆன அத்துவைத கலப்பு.. அத்துவைத கலப்பே முடிவான கலப்பு.. அது எல்லையே இல்லாத மிக ஆழமான கலப்பு.. அதுவே சிவ கலப்பு ஆகும்.. சிவ சிவ என சொல்லுவதில் உள்ள பொருள் அளவில்லா எல்லை கடந்த நிலைக்கு செல்லவே தமிழில் இரண்டு தடவை தொடர்ந்து சொல்லும் பழக்கமாக உள்ளது...
மேலே சொன்ன கலப்புகள் தரம் மிக முக்கியமானது.. பெரும்பாலும் ஆன்மீகத்தில் பௌதிக கலப்பில் மட்டுமே இன்றைய நிலை உள்ளது.. அதனால் தான் எந்த விதத்திலும் ஆன்மீகம் பலன் தராமல் இருக்கிறது.. ஆன்மீகத்தில் பௌதிக கலப்பில் இருந்து இரசாயண கலப்பாகிய மன கலப்புக்கு செல்லவே இன்றைய ஆன்மீகம் மிகவும் தடுமாறுகிறது.. அதற்கு மேல் உயிர் கலப்பு, அருளோடு கலப்பு, அருளான கலப்பு என்பது இன்றைய ஆன்மீக குருக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது.. மன கலப்பிற்கே அவர்களுடைய குரு பீடமும் குரு மரியாதையும் மிக பெரிய தடைகளாக உள்ளது.. ஒரு குருவையே வேறு படுத்தி அவரை கடவுள் நிலைக்கு எட்ட தள்ளி வைக்கும் போது, பௌதிக கலப்பிற்கே சிரமமாக உள்ளது.. அவ்வளவு கேவலமான முறையில் நமது ஆன்மீகம் உள்ளது.. கண்ணப்பர் நாயனார் சரித்திரத்தை சற்று உற்று கவனித்தோமானால், காட்டிலே இருந்த சிவனை ஏழு நாட்கள் தான் தொழுதார்.. சிவனை தொழ எந்த குருவும் வழி காட்டவில்லை.. அவர் வெறும் பௌதிக கலப்பிலே இருக்கவில்லை.. அவர் அருள் கலப்பு வரை சென்றதால் தான் சிவ தரிசனம் காண முடிந்தது.. அதே சிவனை இருபது வருடங்கள் பௌதிக கலப்பிலே பூசை செய்த பூசாரிக்கு சிவ தரிசனம் காண இயலவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது..
நம்முடைய மர்ம யோகம் அருளான கலப்புக்கு செல்லும் நுணுக்களை உடையது.. மர்ம யோகமான தமிழ் யோகத்தால் விரைவில் அன்பர்கள் மிக பெரிய முன்னேற்றம் காண்பார்கள்.. மலையேற்றம் காணும் அன்பர்கள் தங்கள் உடன் பாடு சுவாசத்தில் இப்போது பௌதிக கலப்பிலிருந்தும், மன கலப்பாகிய இரசாயண கலப்பிலிருந்தும் விடுபட்டு சுவாத்தோடு ஆன்மா அல்லது உயிர் கலப்பிற்கு சென்று விட்டார்கள்.. இதனால் சற்று தேக்க நிலையில் இருந்த அன்பர்கள் அளவுக்கு அதிகமான அண்ட ஆற்றலை பெற்றதால் எட்டு தடவை தொடர்ந்து மலை ஏறி இறங்கியும் சற்றும் தேக அலுப்பு இன்றி கால் வலி இன்றி உற்சாகமாக இருக்க முடிந்தது சற்று ஆச்சரியமான செய்தி தானே!!.. இதுவே துளி அளவு சாதனைதான்... இன்னும் அன்பர்கள் அருளான கலப்பாகிய சிவ கலப்பிற்கு செல்லும் போது சித்தர் தரத்திற்கு மேல் நிறை நிலை மனித தரத்திற்கு நிச்சயம் உயருவார்கள்.. கோவையிலும் மற்ற இடங்களிலும் பயிலும் அன்பர்கள் சுவாசத்தோடு கலக்கும் கலப்பின் தரத்தை நன்கு உணர்ந்து பயிலுமாறு வேண்டுகின்றனன்..

Marma Yoogi
Marma Yoogi கேள்வி :--உற்சாகம் தரக்கூடிய பதிவு நன்றி அய்யா...பெளதிக கலப்பு இரசாயன கலப்பு புரியவில்லை?கொஞ்சம் விளக்கம் தாருங்கள் அய்யா

பதில்:-- பௌதிக கலப்பு என்பது விலங்கியல் கலப்பு போன்றது.. யானை கூட்டம், மான் கூட்டம், தெரு நாய்கள் கூட்டம் ஏதாவது பிரச்சனை என்று வ
ந்தால் எல்லாம் சிதறி ஓடி போய் விடும்.. அதை போல் தான் அரசியல்வாதிகள் மேடை கூட்டம், சாலையில் விபத்து நடந்தால் வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம், எந்த மன கலப்பும் இல்லாமல் மனிதர்கள் இன்று கூடுவது போல், ஆன்மீகத்திலும் மக்கள் கூடுகிறார்கள்... கோவில்களிலும் மசூதிகளிலும் சர்ச்களிலும், பிரார்த்தனைகளில் எந்த மன கலப்பும் இல்லாமல் தேக அளவில் மட்டுமே கூடுகிறார்கள்... மன கலப்பில் இறை நிலையோடு மனம் உருகி கண்ணீர் பெருகி நிற்கும் நிலை என்றோ காணாமல் போய் விட்டது.. கிருஸ்துவ ஆலயங்களில் கண்ணீர் பெருகி நிற்கும் நிலையை அடிக்கடி பார்க்கலாம்.. அது பெரும்பாலும் தன் தேவைக்கு இறைவன் உதவாத இறைவனின் அவல நிலையை எண்ணி பார்த்தே கண்ணீர் வரும்.. இறைவனின் புனிதத்தோடு கலக்க துளியும் மனம் தயாராக இருப்பதில்லை.. மற்ற இடங்களில் இருக்கும் இறை வேண்டுதல் எல்லாம் தன்முக ஆணவ நிலையாக இருக்கும்... எது கிடைத்தால் எல்லாம் கிடைக்கும் அதற்கு மனம் ஒரு போதும் நாடுவதில்லை.. ஒரு ஊரோ ஒரு நாடோ உலகமோ நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலில் அதில் தானும் நன்றாகவே இருக்க முடியும் என்ற எண்ணம் மனதிற்கு துளி அளவும் எழுவதில்லை.. உலக சமாதானத்திற்க்காக நடக்கும் பிரார்த்தனைகள் எல்லாம் பக்குவப் படாத மனிதர்களால் வெறும் கேலி கூத்தாகவே இருக்கும்.. தன்னை தவிர்த்து தான் இருக்கும் சமூகத்திற்காக மனம் உருகி பிரார்த்தனை செய்யும் போது அங்கே அன்பு என்ற கனலால் மட்டுமே இரசாயன மாற்றம் நிகழுகிறது.. எப்படி உலகியலில் இரண்டு வேதியல் பொருள்கள் ஒன்று கூடி பிரிக்க முடியாத இரசாயண மாற்றம் நிகழ நெருப்பு தேவைப் படுகிறதோ, அது போல் இருவரது மனம் ஒன்று கூட, அன்பு என்ற கனல் தேவை படுகிறது.. இன்றைய சூழ்நிலையில் பெரும் பாலும் ஒன்று கூடி நின்று வாழ்வியல் நடத்தும் குடும்பத்தில் கூட குடும்ப உறுப்பினர்கள் இடையே அந்த இரசாயண மாற்றம் நிகழுவதில்லையே !!!.. பொது மனிதனின் தரம் உண்மையான அன்பு இல்லாமையால் பெரும் பாலும் இரசாயண மாற்றத்திற்கே வகை கிடைக்காமல் இன்று தவிக்கிறது..

மர்மயோகத்தில் கனல் வீரம்- ஆறு


மர்மயோகத்தில் கனல் வீரம்- ஆறு 
****************************************************
எழுத்து வடிவில்
காரண நிலையாய் இருக்கும் இருப்பு தன்மையில் உள்ள அக 'நான்' இறுக்கம் மிகுந்த எண்ணக் குவியலிலிருந்து இறுக்கம் துளியும் இல்லாத, எண்ணம் எதுவும் இல்லாத இருப்பு தன்மைக்கு எண்ணங்கள் பாய்ந்து வரும்.. அந்த எண்ணங்களை மையப் படுத்தி அந்த அக 'நான்' தன் இனமான புற 'நானை' நோக்கி, அந்த இருப்பு தன்மையில் உள்ள விழிப்பு சக்தியை மீறி, பாய தொடங்கும்.. அந்த விழிப்பு சக்தியின் அளவினை கால அளவால் மட்டுமே கணிக்க முடியும்... நம் தோன்றா நிலையின் தன்மையான விழிப்பு சக்தி அந்த தோன்றா நிலையில் நீடிக்க செய்ய வேண்டும்.. அந்த விழிப்பு சக்தி பலம் அடைய அடைய அதுவே ஒரு தடுப்பு சுவராய் அக நானுக்கும் புற நானுக்கும் இடையே அமைகிறது.. அதுவே ஆன்மா பலம் என்பது.. அந்த ஆன்மா பலத்தால் மட்டுமே அளவற்ற ஆன்ம இலாபம் பெற முடியும்... தோன்றா நிலையில் நீடிக்க வைக்கும், அந்த விழிப்பு தடுப்பு சுவர், அளவற்ற கனல் ஆற்றலை அண்டதிலிருந்து பெற உதவுகிறது.. பெறுவதோடு மட்டும் அல்ல அந்த ஆற்றலை 'புற நானுக்கு' பாய்ந்து போகவிடாமல் பார்த்துக் கொள்ளும்.. அது மட்டும் இல்லாமல், எப்பொழுது வெளியே போய் காரியப் பட வேண்டுமோ அப்போது மட்டுமே அந்த தடுப்பு சுவர் அனுமதிக்கும்.. முதலில் தோன்றா நிலையில் 'அக நான்' உருவாக வேண்டும்.. அந்த அக நான் விழிப்பு நிலையால் வளர்க்கப் பட வேண்டும்.. வளர்ந்த பலமான 'அக நான்' தான் ஒரு நல்ல தடுப்பு சுவராய் ஆன்மா நிலையாக உயரும்.. ஆன்மா தரிசனம் காண விரும்புவோர் இப்படி தோன்றா நிலையின் மூலம் மட்டுமே காண முடியும்...
தோன்றா நிலையில் மட்டுமே அருவ நிலையாகிய கனல் உள்ளே புகமுடியும்.. கனல் பெற்ற உணர்வு அனுபவமே விழிப்பு.. அந்த தோன்றா நிலையில் உணர்வாக அனுபவப் படும் போது மட்டுமே அந்த உணர்வே விழிப்பாக மலர்கிறது.. 
அந்த உணர்வை நீடிக்க செய்தால் கனல் பெருக்கம் அடைகிறது.. கனல் பெருக்கம் என்ற சொல்லும், நீடித்தல் என்ற சொல்லும், மிக முக்கியமானது.. அந்த உணர்வை அல்லது விழிப்பு நிலையை நீடிக்காமல் எந்த முன்னேற்றமும் இல்லை.. விழிப்பு நிலை நீடிப்பு என்பது ஆன்மா நிலையில் நீடிப்புக்கு இணையானது... அந்த நீடிப்பு தான் முடிவில் மரணம் இல்லா பெரு வாழ்வு ஆகிறது.. வேறு எங்கும் கிடைக்காத இந்த உண்மை மர்ம யோகமாகிய தமிழ் யோகத்தில் மட்டுமே வெளிப் படுகிறது...
படியேற்றம் ஏறும் அன்பர்கள் அழுத்தமான சுவாசமாகிய இளைப்பில், மனதை பொருத்தும் போது, அந்த அழுத்தம் மன அழுத்தத்தை காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், மனம் அந்த சுவாச உயர் அழுத்தத்தில் செயல் இழந்து போய் விடுகிறது.. அப்போது மனம் எண்ணங்களை சுமக்காத நிலையால் எந்த எண்ணங்களையும் தன்னிடம் வைத்து கொள்வதில்லை... செயல் பாடு அற்ற மனதால், எந்த எண்ணமும் தோன்றா நிலை உருவாகிறது.. அதுவே தோன்றா நிலை.. அந்த தோன்றா நிலையில் தான், அண்ட ஆற்றல், கனலாக அதிக அளவு வரவாக வருகிறது.. கனல் வரவுக்கு எண்ணங்கள் தடை மட்டும் போடுவதில்லை.. வந்த கனலையும் எண்ண வடிவமாக விரையம் பண்ணுகிறது.. அதனால் தான் கோபம் காமம் போன்ற தீவிர எண்ண அலைகள் படு தாண்டவமாடுகின்ற போது விரைவில் நம்மிடம் கனல் குறைந்து சோர்வு நிலைக்கு சென்று விடுகிறோம்.. இந்த தோன்றாநிலையில், விழிப்பு சக்தியால் அந்த தோன்றா நிலையின் கால அளவினை அதிகரிக்கும் போது அதற்கு தகுந்தால் போல் கனல் வரவு அதிகப்படுகிறது... உயர் அழுத்த சுவாசம் இளைப்பில் சிறுக சிறுக குறையும் போது அப்படி குறைந்த அழுத்தம் மன அழுத்தத்திற்கு இணையாக வரும் போது, மனம் மீண்டும் எழ தொடங்கி மீண்டும் எண்ணங்களை கவர தொடங்குகிறது.. இப்படி இந்த இரண்டு அழுத்தங்கள் சமநிலை ஆகும் போது மீண்டும் மனம் எண்ணங்களை பிடிக்க விடாமல், அதற்கு முன்னால் பெற்ற கனல் ஆற்றலில் உருவான விழிப்பு ஆற்றலால், சம நிலையாகும் காலத்திற்கு அப்பால் காலத்தை நீடிக்க வைக்கலாம்.. அதனால் கனல் வரவு நிச்சயம் அதிகமாகும்.. இந்த நீடிப்பை அதிகப் படுத்த அதிகப் படுத்த இயல்பான சுவாசத்திலேயே கனல் வரவை அதிகப் படுத்தலாம்.. இயல்பான சுவாசத்திலேயே தோன்றா நிலை கைகூடுமானால் அதுவே சுவாச ஒழுங்கு, சீரான ஒழுங்கு... அந்த சுவாச ஒழுங்கு இல்லாததனால் நரை திரை மூப்பு சாக்காடு வருவதாக சித்தர் பெருமக்கள் சொல்லுகிறார்கள்.. எத்தவம் செய்தாலும் ஏது தொழில் புரிந்தாலும் முக்தர் மனம் இருக்கும் மோனத்தே என்பர் அறிஞர்கள்.. இதில் மோனம் என்பது தோன்றா நிலையே.. சுவாச ஒழுங்கு மட்டும் கை கூடி விட்டால் மலையேற்றம் மற்ற யோகப் பயிற்சிகள் போன்றவைகளை எதையும் செய்ய தேவை இல்லை...
மலையேறும் அன்பர்கள் தங்களுக்கு, அப்போதைக்கு அப்போது சுவாச ஒழுங்கு கை கூடுவதாகவும், வேலை திறனில் நல்ல முன்னேற்றம் காண்பதாகவும் சொல்லுகின்றனர்.. முக நூல் அன்பர்களே தாங்களும் மேலே சொன்ன விளக்கங்களை பின் பற்றி பயன் அடையுமாறு வேண்டுகிறேன்... விரைவாக நடந்தோ ஓடியோ, மாடி படிகளில் ஏறி இறங்கியோ உடன் பாடு சுவாசத்தை பிடித்துக் கொண்டு, விழிப்பு சக்தியின் உதவியால் தோன்றா நிலையின் கால அளவை நீடிக்கச் செய்து கனல் பெருக்கம் அடையலாம்... சந்தேகம் எதாவது இருந்தால் வினா எழுப்பினால் அதற்கான பதிலால் அனைவரும் பலன் அடைவர்... விழிப்பதும் எழுவதும் ஓங்கி செயல் படுவதும் நம் கையில் மட்டுமே உள்ளது என உணர்ந்து செயல் படுவோமாக...

அன்பர்கள் :  அற்புதம் அய்யா, இந்த விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது சோர்வு இருப்பதில்லை, அதனின் அளவும் நீடித்து இருக்கிறது. சில நேரங்களில் இரவில் தூக்கம் வருவதில்லை, 3.00மணிக்கு நானே தூங்க செல்கிறேன். அந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்யலாம் அய்யா.இப்படி இரூப்பதினால் தவறு ஏதுமில்லையே அய்யா. தோன்றாநிலையில் நீடித்து இருக்க முயலும்போது ஏதாவது இடையூருகள் வருகிறது. நீடீத்து இருக்க முயலவேண்டுமானால் யதார்த்த மூச்சிலியே சுவாச ஒழுங்கில் இருப்பபதற்கு கொஞ்ச நாள் இந்த பயிற்சில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது சரிதான என்று நீங்கள் எனக்கு அறிவுரை கூறுங்கள். நன்றி... நன்றி... நன்றி..,

Marma Yoogi
Marma Yoogi : மனம் ஒரு பெரிய சோம்பேறி.. ஒரு பக்கம் நேரம் இல்லை இல்லை என அலறும்.. நேரம் கிடைத்து விட்டால் நேரத்தை எப்படி போக்குவது என்ற கவலை அதற்கு வந்து விடும்.. அந்த தூக்கம் வராத அந்த நேரத்தை சுவாச ஒழுங்கிற்கு பயன் படுத்த மனதிற்கு யோசனையே வருவதில்லை.. வேலை நேரங்களிலும் வண்டி ஓட்டிக்கொண்டு செல்லும் போதும், கடும் வெயிலில் நடக்கும் போதும் மட்டும்தான் சுவாச பயிற்சியை செய்ய யோசனை தரும்... மனதின் விளையாட்டை புரிந்து கொள்ளுங்கள்.. தூக்கம் வராத அந்த நேரம் ஒரு பொன்னான நேரம்.. ஆற்றல் அதிக வரவால் சோர்வு ஏற்படாத அந்த நேரத்தை வாசிபயிற்சிக்கு பயன் படுத்தலாமே!!!... பணத்திற்கு மேல் பணம் சேர்க்கும் மனம் ஆற்றலுக்கு மேல் ஆற்றலை சேர்க்க ஏன் உடன் பட மறுக்கிறது.. அந்த பொன்னான நேரத்தின் அமைதியை இரசிக்கும் போது விழிப்பு நிலை உயர்கிறது என்பது மிக பெரிய உண்மை.. நழுவ விடாதீர்கள்..

அன்பர்கள் : நன்றி அய்யா பொதுவாக வேகமாக செயல் படும் பொழுதூ உடன் பாடு சுவாசம் கை கூடுகிறது அந்த தோன்ற நிலை அனுபவம் வேலை பார்க்கும் போதும் சில நிமிடங்கள் கைகூடுகிறது அப்போது உடம்பில் குறிப்பாக முதுகு பகுதியில் கூச்ச உணர்வை போல் உணர்வு எற்படுகிறது அது ஏன் அய்யா? வீட்டிலே பயிற்சி செய்யும் போது சுவாசம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுவாசம் தெரிவதில்லை அப்ப நான் சுவாசத்தை உள் இழுக்க முயன்றால் என்னால் செயல் பட முடியவில்லை அப்ப நான் என்ன செய்வது அய்யா? நேற்று ஒரு அனுபவம் கிட்டியது சுவாசம் இல்லா நிலையில் முகம் கை பகுதியில் மட்டுமே உணர்வு கண்ட நான் உடல் முழூவதும் உணர்வை உணர்ந்தேன் அப்ப நான் தூரத்தில் இருந்து என் உடலை சிறு உருவமாக பார்ப்பது போல் பார்த்தேன் அய்யா எனது சந்தேகங்களுக்கு பதில் கூறுங்கள் மர்ம யோகி அய்யா 

Marma Yoogi
Marma Yoogi நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டிய விசயம் என்ன வென்றால், ஆற்றல் குறை பாடு வரும் நேரம் மட்டுமே அதை ஈடு செய்ய சுவாசம் நடைபெறுகிறது.... போதுமான ஆற்றல் தேகம் பெற்று விட்டால், சுவாசம் மிக மெதுவாக தான் ஓடும்.. வன்மையாக ஒடும் சுவாசத்தை அடையாளம் கண்டு கொள்ள முடிந்த மனம், மென்மையான சுவாசத்தை அடையாளம் காண முடியாமல் போவதால், சுவாசம் நடைபெறுவதை மனதிற்கு தெரிவதில்லை.. மனம் மென்மை அடைய வேண்டுமானால் அது அமைதியை அடையாளம் கண்டு அதோடு பொருந்தி நிற்க பழகி வேண்டும்.. ஆனால் அமைதியை மனம் ஒரு போதும் விரும்புவதில்லை.. வன்மையும் அராஜகத்தையே நாடும்.. சட்ட திட்டங்களாலும் மத தீவிர கொள்கைகளாலும், சர்வதிகாரத்தாலும், அடக்கு முறையாளும் ஒரு நாட்டில் ஒரு செயற்கையான அமைதியை ஏற்படுத்தி விடலாம்.. ஆனால் அதை விரும்பாத மனித மனம் வெறுப்பு மேலிட திடீரென பொங்கி எழ தொடங்கி விடுவார்கள்.. முஸ்ஸீம் நாடுகளில் தற்போது அந்த நிலையே.. இதற்கு தீர்வு வாசியோகம் தருகிறது.. சூரியகலையில் ஏற்பட்ட அமைதியை எண்ணி சந்திர கலையான உள் வாங்கும் சுவாசத்தில் மனம் பழக வேண்டும்.. எண்ணுவது மனதின் வேலை.. அப்படி மனம் எண்ணுவது சூரிய கலையின் அமைதியாக இருக்கட்டுமே.. மனதை அமைதியை விரும்பி, அமைதியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவரிடம் அன்பு வளரும்.. இது போன்ற அற்புத பயிற்சி உண்மையான வாசியோகத்தில் மட்டுமே உள்ளது.. அமைதி அடைந்த மனம் தோன்றநிலையை உருவாக்க தடையாக இல்லாமல் மிகவும் உதவும்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தான்.... உணர்வை அனுபவிக்க அனுபவிக்க 
கனல் வரவு அதிகமாகும் என்பது பெரிய இரகசியம்.. சந்தேகத்தோடும் ஆராய்ச்சியோடும் அதை மனதால் நினைக்காமல் அந்த உணர்வை உணர்ந்து மகிழுங்கள்.. சமயத்தில் கனல் பெருக்கம் அதிகமாகி விட்டால் தங்க இடம் இன்றி தேகத்தை விட்டு வெளியே வரலாம்.. கனலால் உருவான விழிப்பு நிலை தேகத்தை விட்டு விலகி தேகத்தை சாட்சி நிலையில் பார்க்கலாம்.. விரைவில் தற் செயலாக நடைபெற்ற இது உங்கள் கைவசம் ஆகி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் உடலை விட்டு வெளியே வந்து பார்க்கும் நிலை கைகூடலாம்.. முன்னேற்ற பாதையில் உள்ளீர்கள்.. ஆனால் முன்னேற வேண்டிய இலக்கு மிக வெகு தூரம் உள்ளது.. கனல் வீரத்தால் சாதிப்பீர்கள் என நம்புகிறேன்...

அன்பர்கள் : கனலால் உருவான விழிப்பு நிலை தேகத்தை விட்டு விலகி தேகத்தை சாட்சி நிலையில் பார்க்கலாம்.. விரைவில் தற் செயலாக நடைபெற்ற இது உங்கள் கைவசம் ஆகி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் உடலை விட்டு வெளியே வந்து பார்க்கும் நிலை கைகூடலாம்.. //////// இவ்வாறு உடலை விட்டு வெளியே வரும் போது , ஏற்கனவே உடல் தேடி அலையும் பல ஆத்மாக்கள் இருக்கும் பொது ஏதேனும் ஒன்று உடலில் புகுந்து கொள்ள வாய்ப்பு உள்ளது அல்லவா ? இது பற்றி தங்கள் விளக்கம் என்ன ஐயா ?
Marma Yoogi
Marma Yoogi  : அப்படியெல்லாம் கவலை பட தேவை இல்லை.. எந்த ஆவிகளும் உங்களை நெருங்க தகுதி கிடையாது.. உங்கள் விழிப்பு நிலையில் உள்ள தெய்வீக தன்மையால் உடலை விட்டு வெளியே இருக்கும் போது அவைகளுக்கு நீங்கள் தான் தெய்வம்.. அவைகள் உங்களிடம் மண்டிட்டு கேட்கும் கேள்விகள் போல் உயர்ந்த கேள்விகள் இந்த பூலகில் எங்கேயும் இல்லை.. அதற்கான பதில்கள் உயர்ந்த பதில்கள் உலகில் எந்த மதங்களிலும் வேதங்களிலும் பார்க்க முடியாது.. அவைகள் முற்றிலும் ஆன்மாவுக்கு உயிருக்கு சம்பந்த பட்ட கேள்வி பதிலகள்.. அலையும் அந்த ஆன்மாக்களால் எழுப்பப் படும் கேள்விகளும் பதில்களும் பெரும் பாலும் வெளிப்படுத்த, மொழி கிடைக்க வில்லை.. அந்த மொழி தான் ஆதி தமிழ்.. அவைகளை எப்பொழுதே பாவிகள் அழித்து விட்டனர்.. அதனால் தான் தமிழ் நாடும் தமிழ் கலாச்சாரமும் சுருங்கி போய் விட்டது..