Friday, 26 June 2015

பகுதி ஐந்தின் தொடர்ச்சி:-- சித்தர் ஆவது எப்படி?

பகுதி ஐந்தில் அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பேரண்ட பேரறிவு தூண்டலால் மிக பயனுள்ள பதில்கள் கிடைத்ததால் அவற்றை ஒரு தனி பதிவாக போட்டால் நலமாக இருக்கும் என்ற உந்தலில் தனி பதிவாக பதிக்கப் படுகிறது...
1) கேள்வி:----- anban Arun- தொடர் பதிவுகளை படித்து அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது ஐயா . சத்திய சித்தர் வழிமுறைகளை பின்பற்றுவர்களுத்தான் வள்ளலார் போன்றவர்கள் உதவுவார்களா, ஐயா?

பதில் :---- கண்டிப்பாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், வள்ளலார் அல்லது வள்ளுவர் போன்றோர் தங்கள் கருத்துகளில் சத்தியமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. அவர்கள் கருத்துகளை பிடிக்காமல், அவர்கள் வரவுக்காக காத்து இருப்பது கால விரயமே.. வந்தாலும் ஏற்கனவே சொல்லியதை தான் சொல்லப் போகிறார்கள்.. உதவுவா்ர்களா என்ற எதிர் காலம் நமக்கு தேவை இல்லை.. ஏற்கனவே சொல்லிய கருத்தின் இந்த கணத்தின் நடைமுறை யின் நிகழ் காலமே நமக்கு தேவை.. அந்த நிகழ் காலமே சிவநிலை.. மனம் நிகழ் காலத்தில் நிற்க முடியா்து.. அதனால் அது வள்ளலார் வரவுக்காக காத்திருக்க வைத்து எமன் வரவுக்கு விரைவு படுத்தும்..நிகழ் காலமே சிவநிலை என்பது சத்திய வாக்கு
************************************************************************************************* 
2) கேள்வி:---- நன்றி ஐயா... நிகழ்காலமே சிவநிலை என்று கூறுகிறீர்கள். ஆனால் மனம் நிகழ்காலத்தில் நிற்க முடியாது என்றும் சொல்கிறீர்கள், புரியவில்லை ஐயா..
பதில்:---நாம் மனமாக மனித இயல் நிலையில் இருக்கிறோம்.. தேவர்களும் கடவுளும் புத்தியாகவும் அறிவாகவும் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.. மனதிற்கு மேல் உள்ள காற்று பூதமாகிய புத்தியில் நாம் நிலைக்கும் பொழுது,நிகழ் காலத்தில் நிற்கும் திறமை பெறுகிறோம்.. புத்தி என்பது நிகழ் காலத்தில் மட்டுமே நிற்கும்.. சி ஆகிய மனதிலிருந்து வ ஆகிய புத்திக்கு மாறுவதே சிவ யோகம் அதாவது சிவ கலப்பு.. நாம் மனமாக இருப்பதில் இருந்து புத்தியாக இருக்கவே அல்லது மாறவே சிவயோகம்...புத்திமான் பலவான் என்பது உலகியலில் நிருபிக்கப் பட்ட ஒன்று... வள்ளலார் சித்தர்கள் கொடுத்த உளவுகள், பயிற்சிகள் நம்மை மனநிலையிலிருந்து புத்திநிலைக்கு மாற்றும் வல்லமை உடையது..
************************************************************************************************* 
3) கேள்வி :----- ஐயா, சுவாச ஒழுங்கு பயிற்சி மூச்சின் அலைநீளம் வெகுவாக குறைந்து சுவாசமற்ற நிலை ஏற்படுவது போன்ற நிலை ஏற்படுகிறது. அது சரியா அல்லது தவறா ஐயா ?
பதில்:--- சுவாச ஒழுங்கில் மனநிலையை விட்டு விழிப்பு நிலைக்கு போவதால், அந்த மனம் கடந்த நிலையில் அப்படி தோன்றுவது இயல்பே.. இந்த நிலை நாம் விழிப்பு நிலை முன்னேற்றத்தைக் குறிக்கும்.. தேகம் புத்தி அறிவின் தொடர்புக்கு உட்பட்டே இயங்குவதால் தேகம் தன்னை இயல்பாகவே காத்துக் கொள்ளும்.. மனம் என்ற குறுக்கீடு அதிகமாக உள்ள நிலையில் மட்டுமே தேகத்திற்கு மரணம் வருகிறது... உங்களின் சுவாசத்தில் உள்ள வேறுபாட்டை குறித்து ஐயப்படுவது மனமே.. நின்றால் மனம் பிடித்து விடும்.. தொடருங்கள் தொடர்ந்து கொண்டே இருங்கள்.. பின் தொடரும் மனம் சீக்கிரம் களைத்து பின் தங்கி விடும்.. பின் வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகி விடும்..
*************************************************************************************************
4) கேள்வி :---சுவாச ஒழுங்கு பயிற்சியின் போதுசுவாசமற்.றநிலை ஏற்பட்டு பின்பு இரண்டு நிமிடத்திற்குபின்மெல்ல பழைய நிலைக்கு திரும்புகிறது சரியா?
பதில் :--சரியில்லைதான்.. ஆனாலும் அது வரவேற்க தகுந்த ஒன்று.. காரணம் மனம் சிறுக சிறுக பலப் பட்டு பழைய நிலைக்கு திரும்புகிறது... இப்பொழுது மீண்டும் சுவாச ஒழுங்கிற்கு வர வேண்டும்.. மனதால் கெட்டு போன சுவாச ஒழுங்கு, மீண்டும் மனதால் அதனை சரி செய்ய முடியாது.. அந்த நொடியில் சுவாச ஒழுங்கு ஏற்பட்டால் அது மனதுக்கு மேல் செயல் படும் புத்தியால் அல்லது அறிவின் துணையால் மட்டுமே நடைபெற வாய்ப்பு உள்ளது... இப்பொழுது நீங்கள் மீண்டும் சுவாச ஒழுங்கிற்கு வர தொடங்க , உங்கள் புத்தியாலோ அல்லது அறிவாலோ மட்டுமே அதை சாதிக்க முடியும்.. நீங்கள் மீண்டும் சுவாச ஒழுங்கிற்கு வந்து விட்டால் உங்கள் அறிவு மனதை வென்று இயங்க தொடங்கி விட்டது என்று தானே அர்த்தம்.. இப்படி சுவாச ஒழுங்கிலிருந்து தோற்று பின் அதை சரி செய்யும் ஒவ்வொரு முறையும், உங்கள் அறிவின் பலம் சிறுக சிறுக மனதின் ஆதிக்கத்தை விட பலமடைய தொடங்குகிறது.. இப்படியாக அறிவின் பலத்தை பெருக்கும், ஒரு உன்னத பயிற்சி வாசி யோகத்தில் மிக முக்கியமான பயிற்சி... இதற்கு நிகரான பயிற்சி எதுவும் இல்லை எனலாம்.. எங்கும் எப்பொழுதும் இடைவிடாமல் செய்ய முடிந்த இந்த சுவாச ஒழுங்கின் பயிற்சி மிக மிக எளிது.. ஆனால் இதை விட கடினம் எதுவும் இல்லை..
ஆனால் ஏன் இதை எவறும் கற்று தருவதில்லை என்றால் அறிவு என்ற ஆகாய பஞ்சபூதத்தின் தன்மையையும், அதன் காரிய பட்ட ஒன்றான் விழிப்பு நிலையையும் துளியும் உணராததே.. சிகரமாக திகழும் இந்த பயிற்சினை மீண்டும் மீண்டும் படித்து, நீங்கா பதிவாக சித்தத்தில் பதித்து கொண்டால் சித்தர் நிலை நோக்கி வேகமாக முன்னேறலாம்....

No comments:

Post a Comment