Monday 3 August 2015

அருள் இயங்கும் முறை- படி மூன்று


மலை ஏற்றத்தில் கனல் ஏற்றம்
******************************************
மதுரை ஆசிரமத்தில் நடந்தது என்ன? அன்பர்கள் உடன் பாடு சுவாசத்தை உணரவும், பழகவும், சூட்டுக்கோல் ஆசிரமத்தின் மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சியில் அமைந்துள்ள தண்டபாணி முருகன் கோவிலுக்கு படிகளில் ஏறிச் செல்கின்றனர்.. மனம் விதித்த கட்டுபாடுகளை தாண்டி, சற்று விரைவாக படியேறுகின்றனர்.. இந்த நிலையில் மூன்றை உணர தொடங்குகின்றனர்..
1) மனம் விதித்த கட்டுபாடுகளை தாண்டும் போது உடல் விழிப்பு நிலையை நாடுகிறது.. உயரமான இடத்தில் வேகமாக நடக்கும் போது மனம் இயல்பாகவே பயத்தால் செயல் இழக்கிறது.. அதனால் தான் வீரம் மிகுந்த விழிப்பு நிலை செயல் பாட்டிற்கு வருகிறது..
2) தேகம் படிகளில் விரைந்து செல்லும் போது, அதிக ஆற்றல் எடுத்துக் கொள்வதால், அண்ட ஆற்றல் சுவாசத்தின் வழியாக தேக ஆற்றலை ஈடு கட்ட முயலுகிறது.. அதனால் சுவாசத்தின் வேகம் மிக அதிகமாகி இளைப்பாக மாறுகிறது.. இந்த நிலையில் தான் அந்த அற்புத யோகம் தொடங்குகிறது.. அன்பர்கள் படி ஏறுவதை நிறுத்திக் கொள்கிறார்கள்.. அதிகமான சுவாச வேகத்தோடு மனதை இணைகின்றனர்.. இணைக்கப் பட்ட மனம் அந்த சுவாசத்திற்கு உடன் படுகிறது.. உடன் பட்டே ஆகவேண்டும்.. அதுதான் மனதின் விதி.. காரணம் பாய்ந்து வரும் அண்ட ஆற்றலுக்கு முன் மனதின் ஆதிக்க செயல் பாடு பலிக்காமல் போய் விடுகிறது.. சுவாசத்தோடு உடன் பட்ட அந்த மனம் அண்ட ஆற்றலான கனலோடு இணைவதால் தேகத்திற்கு கனல் பெருக்கம் அதிகமாகி தேக ஆற்றல் அதிகமாகிறது.. மிக ஆழமாக உடன் படும் போது, உடல், தான் இழந்த ஆற்றலை காட்டிலும் மிக அதிகமான ஆற்றலை பெற முடிகிறது.. அப்படி பெற்ற ஆற்றலால் மீண்டும் இரண்டாம் நிலைக்கு படியேறும் போது, முதல் நிலை காட்டிலும் இன்னும் மிக வேகமாக படி ஏற முடிந்தது... இப்படியாக மூச்சு இளைப்பு ஒரு நிலைக்கு வேகமாக வரும் போது, படியேறுவதை நிறுத்தி, மனதால் இணைந்து இருக்கும் போது உடன் பாடு சுவாசத்தை மிக எளிதாக உணர முடிந்தது.. அடையாளம் மிக தெளிவாக கண்டு கொள்ள முடிந்தது..
மிக யதார்த்தமான வேகம் குறைந்த இயல்பான சுவாசத்தோடு, மனம் இணைய முடிவதில்லை.. அப்படி இணையும் போது மனம் சுவாசத்தை இயக்க முயற்சி செய்கிறது... அதன் காரணமாக முரண்பாடு சுவாசம் உருவாகி, அண்ட ஆற்றல் தடை பட்டு தேகமும் ஆற்றலின்றி சோர்வு அடைகிறது... அதனால் சுவாசத்தை கட்டுப் படுத்துகின்ற எந்த வாசி யோக பயிற்சிகளும் பலன் அற்று போய் முடிவில் உடலுக்கு தீங்கே நேரிடுகிறது.. மனம் உடன்பாடு உடைய சுவாசமே ஒழுங்கான சுவாசம் அல்லது சுவாச ஒழுங்கு என்பதை அன்பர்கள் உணர்ந்து கொண்டனர்..
3) மனம் கடினமான தேக இயக்கத்தால் ஏற்பட்ட வேகமான சுவாசத்தோடு உடன் பாடு கொள்வதில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளால், தாங்கள் பெற்ற அண்ட ஆற்றலில் வேறு பாடு காண முடிந்தது... ஒரு நிலைக்கு இன்னொரு நிலைக்கும் வேக தொடர்பில் வித்தியாசங்கள் காணப் பட்டதை உணரும் போது, மனம் உடன் பட வேண்டிய நெருக்கத்தின் அளவின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர்.. அண்ட ஆற்றலின் வரவின் அளவு அந்த நெருக்கத்தின் அளவை பொருத்தே அமைகின்ற மிக பெரிய உண்மை உணர்ந்தனர்..
மிக முக்கியமாக மனம் உடன் பட்ட அந்த சுவாச நெருக்கத்தில் இது வரை அனுபவப் படாத தியானத்தின் ஆழம் உணர்ந்தது மிக முக்கியமானது.. வாழ்வில் மனம் அடங்கும் ஒரு ஆழமான விசித்திரமான அதே வேளையில் விழிப்பு நிலை ஒரு உச்சத்திற்கு சென்ற அனுபவத்தை முதல் முறையாக உணர்ந்து போல தென்பட்டனர்.. மிகவும் உண்மையே...விழிப்பு நிலை உச்சத்திற்கு அழைத்து செல்லும் ஒரு தியான முறை மலை படிகளில் ஏறும் போது கிடைக்கிறது.. அதனால் தான் அப்படி பட்ட அனுபவம் கிடைக்க, மலை கோவில்கள் அமைக்கப் பட்டு இருக்கின்றன...
சற்று நின்று சுவாச வேகத்தோடு அதாவது இளைப்போடு மனம் உடன் படும் அதே சமயம், மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், சுவாச வேகம் சிறுக, சிறுக குறையத்தொடங்க மனம் சுவாசத்தோடு உடன்படும் இயக்கத்தின் அளவும் குறையத் துவங்குகிறது... அப்படி மனதின் ஈடுபாட்டில் குறைவு ஏற்படாமல் விழிப்பு நிலையால் மனதின் ஈடுபாட்டை தக்க வைக்க முயல வேண்டும் என்பதை உணர்த்திய பின், அன்பர்கள் தங்கள் வேகம் குறைந்த இயல்பான சுவாசத்தில் மனம் உடன் பட்டதால் உடன் பாடு சுவாசத்தை சுவாசிக்க முடிந்தது.. இந்த நிலையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.. எந்த தியானப் பயிற்சியை பண்ணாமல் உடன் பாடு சுவாசத்தில் மட்டும் இயல்பான சுவாசத்தில் ஒரு ஆழமான தியான நிலையை உணர முடிந்தது..
அன்பர்கள் மூன்று முறை மலை ஏறி இறங்கி தங்கள் அனுபவத்தை வலுப் படுத்திக் கொண்டார்கள்.. இயல்பான சுவாசத்தில் உடன்பாடு சுவாசம் பழகி விட்டால் பின் இது போன்ற மலை ஏறும் பயிற்சி தேவை இல்லை என்பதை நன்கு உணர்ந்தனர்... இந்த மலை ஏற்றத்தில் கனல் ஏற்றம் கண்டதால் மூன்று முறை மலை ஏறி இறங்க எளிதாக முடிந்தது என்பது மறக்க முடியாத ஒன்றாகும்...

**********************************************************************************

மலை ஏற்றத்தில் கனல் ஏ்ற்றம் கண்ட குழு
*************************************************************
 

No comments:

Post a Comment