Monday 27 July 2015

சுவாச ஒழுங்கிற்கான ஒரு ஆயத்த பயிற்சி

சுவாச ஒழுங்கிற்கான ஒரு ஆயத்த பயிற்சி
********************************************
மனம் என்ற மகா ஒழுங்கின்மை-- அப்படி உலகியலால் அமைந்து விட்ட ஒன்று-- சுவாச ஒழுங்கு என்ற ஒன்றை நடைபெறாமல் செய்து விடும்.. சுவாச ஒழுங்கை புரியவிடாமலேயே செய்து விடும்.. இந்த மனதின் விசித்திர போக்கால் சில அன்பர்கள் சுவாச ஒழுங்கு என்ற ஒன்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.. உடன் பாடு சுவாசமே சுவாச ஒழுங்கு.. இதை மனம் கவனிக்க தொடங்கிய உடனே, மனம் அதை முரண் பாடான சுவாசமாக மாற்றி விடுகிறது.. தேக ஆற்றல் செலவழிந்து சீக்கிரம் சோர்வு அடைந்து விடுகிறார்கள்.. கவனிப்பதற்கே இப்படி என்றால் ரேசகம் கும்பகம் பண்ணும் முறையற்ற வாசி யோகப் பயிற்சிகளால் எவ்வளவு கேடு விளையும் என்பதற்கு அளவே இல்லை... உடன் பாடு சுவாசத்தில் விளையும் அளவற்ற ஆற்றல் வரவினை ஒரு பயிற்சியின் மூலமாக வெளிப்படுத்தவும், உடன்பாடு சுவாசத்தை முழுமையாக புரிந்து கொள்ளவும், ஒரு ஆயத்த பயிற்சி மதுரையில் சில குறிப்பிட்ட அன்பர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப் பட்டது.. பயிற்சியில் முழுமையான தியானத்தை மிக ஏளிமையான வழியில் கிடைத்ததும், கிடைத்த அளவற்ற ஆற்றலால் மலை ஏறுதலில் ஒரு பெரிய சுலபதன்மை ஏற்பட்டதும், உடன்பாடு சுவாசமூலமாக எதார்த்த சுவாசத்தில் உடன் பாடு சுவாசத்தை பிடிக்கும் வினோத நுணுக்கத்தையும் அறிந்த கொள்ள முடிந்ததும் அன்பர்களுக்கு மிகவும் மகிழ்வு அளித்தது.. 11 அன்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.. 8 மணி நேரம் பயிற்சி நடைபெற்றது.. 
நடந்த நாள்:-- 26-7-15 ஞாயிற்றுக்கிழமை ( நேற்று )
நடந்த இடம் :--- சூட்டுக்கோல் ஆசிரமம் மலை பகுதி.. மதுரை

No comments:

Post a Comment