Sunday 12 July 2015

பகுதி நாற்பத்தி எட்டு :-- சித்தராவது எப்படி ?


உறுதியின் இறுதிக்கான உருகல்
*********************************************
ஒரு அன்பரின் ஆதங்கம்
Ellam nandraaga unarntha pinbum, payirchi seiyya sombal padugirathu manam, oru ketta palakam athuvagave marainthu vittathu , but practice panni 4 days aagirathu .... Uruthiyana nilai vendum iraiva ... Ellavatirkum uruthi illamaye karanam .எல்லாம் நன்றாக உணர்ந்த பின்பும் பயிற்சி செய்ய சோம்பல் படுகிறது மனம். ஒரு கெட்ட பழக்கம் அதுவாகவே மறந்து விட்டது.. ஆனால் பயிற்சி பண்ணி 4 நாட்கள் ஆகிறது.. உறுதியான நிலை வேண்டும் இறைவா.. எல்லாவற்றுக்கும் உறுதி இல்லாமையே காரணம்..
ஒரு அன்பரின் மன உருகலின் மூலம் வெளிப்பட்ட உண்மை... புத்தியாக உள்ள விழிப்பு நிலை பற்றியும் அதுவாகவே உள்ள அக குருவை பற்றியும் இன்னும் ஆழமாக அறிய வேண்டிய திருக்கின்றது... மனதில் கனல் நிறைந்து இருக்கும் போது, புத்தியை சார்ந்து புத்தி சொல்லும் பிரகாரம் வேலை செய்கிறது... ஒருவர் அறியாமையின் விளைவாக ஒரு கெட்ட பழக்கத்தில் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம்.. அதனால் அவதிக்கு உள்ளான அவர் அவதியில் இருந்து மீள வழி தெரியாமல் தவிக்கும் வேலையில், தன் அவதிக்கு காரணம் தான் கொண்ட கெட்ட பழக்கமே என உணர்ந்த பின் புத்தி அதனை பிடித்துக் கொள்கிறது.. என்ன தான் மனம் அந்த கெட்ட பழக்கத்தை பலநாள் பயின்றாலும், புத்தி அதனை பிடித்துக் கொண்டு உறுதியாக நிற்கும் போது மனம் அந்த புத்திக்கு பணிந்து புத்தி சொல்வதை ஏற்றுக் கொண்டு அந்த கெட்ட பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது.. புத்தியினுடைய உறுதி, அந்த மனம் அந்த கெட்ட பழக்கத்தில் கொண்ட உறுதியை காட்டிலும் அதிகமாகும் போது மட்டுமே மனம் அந்த கெட்ட பழக்கத்தை விட்டு விட சாத்தியமாகும்.. டாஸ்மார்க் கடையில் உள்ள ' குடி குடியை கெடுக்கும் ' என்ற வாசகத்தால் புத்தி, மனதினுடைய உறுதியை காட்டிலும் அதிக உறுதி கொள்ளாத வரை, மனிதன் குடி பழக்கத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பான்..
நன்றாக உணர்ந்த பின்பும் பயிற்சி செய்ய சோம்பல் படுகிறது மனம் என்றார் மேலே சொன்ன அன்பர்.. நினைத்தல் உணர்தல் நெகிழ்தல் என்ற மூன்று செயல்பாடுகளில் ஒரு எண்ணம் ஊடுருவி பாய்ந்து ஒரு நெகிழ்சியை புத்திக்கு கொடுக்கா விட்டால், புத்தி அந்த எண்ணத்தில் உறுதி கொள்ளாது.. அந்த நெகிழ்சியை ஏற்படுத்த தடையாய் இருக்கின்ற வலுவான மனதை முதலில் மென்மை அடைய செய்து அதை தொடர்ந்து புத்தியை வலு அடைய செய்யவேண்டும்.. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என நிகழ்தவே சுவாச ஒழுங்கில் பயில வேண்டும்
சுவாசத்தில் உள்ள சூரிய கலையில் மனம் மென்மை அடைந்து பின் முற்றிலும் தன் ஆதிக்கத்தை படிப் படியாக பயிற்சியின் சமயம் இழந்து விடுகிறது.. சந்திர கலையில் சுவாசத்தை உள்வாங்கும் போது உறுதி பட வேண்டிய ஒன்றை ஏற்றி வைக்கும் போது, அந்த ஒன்று புத்தியில் உறுதியாகிறது.. இந்த வகையில் மன உறுதியை காட்டிலும் புத்தி உறுதி சுலபமாக பலப் படுகிறது.. எப்பேர் பட்ட கெட்ட பழக்கத்தையும் நீக்கக் கூடிய உபாயம் நம் சுவாசத்தில் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம்.. எல்லாவற்றிற்கும் ஒட்டு மொத்தமாக நடுநாயகமாக நம் அககுருவாகிய புத்தியை பலப் படுத்தி விட்டால் வேண்ட தகாதவை அத்தனையும் நினைத்த மாத்திரத்தில் நீக்கி கொள்ள முடியும்..
சுவாச ஒழுங்கில் சூரிய கலையில் மனதை மென்மை அடைய செய்து, சந்திர கலையில் மதியின் வலுவினை பெருக்கி அககுருவை எழசெய்வதின் மூலம் வேண்ட தகாத எவையும் தகர்த்து எறிய செய்திட முடியும்..
உறுதியான நிலை வேண்டும் இறைவா என வேண்டி கொள்வோர் எவரும் முதலில் இறைவன் நமக்கு கொடுத்துள்ள வரங்களை எண்ணி பார்க்க வேண்டும்.. இறைவன் என்னை நன்றாக படித்து இருகின்றார் என திருமூலர் சொன்னது போல் சத்தியமாக இறைவன் நம்மை நன்றாகவே படைத்துள்ளான்.. ஒன்றை உணர்ந்து உறுதி கொள்ளவில்லை என்றால், அதற்கான உளவுகளை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.. உறுதி இறுதி நிலை அடைந்து விட்டதே அதாவது காணாமல் போய் விட்டதே என உருகி உருகி புலம்பவது மனதின் கபட நாடகம்.. உறுதிக்கு இறுதி சடங்கும் செய்து தேக இயக்கத்திற்கே முற்று புள்ளி வைத்து விடும் இந்த மனம்... எதிலும் உறுதி அடைய சுவாசமே உறு துணை என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.. முதல் சுவாசப் பயிற்சியின் பலனை அந்த சுவாச பயிற்சிக்கே அளித்து சுவாச பயிற்சியில் உறுதி கொள்வோம்...
உறுதியின் இறுதி நிலைக்கு ( உறுதி காணாமல் போன நிலைக்கு ) உருகாமல் உறுதியே இறுதி என்று உருகி நின்றால் நெகிழ்ச்சியின் விளைவாக அககுரு தோன்றி நம்முடைய இயலாமையை முழுமையாக போக்கி, உறுதிபட முன்னேறுவோம்... ஆரம்ப சுவாச பயிற்சியில் பெற்ற பலனை, ஆற்றலை, அந்த சுவாச பயிற்சியின் உறுதிக்கு பயன் படுத்துகின்ற போது, அதை விட உயர்ந்த விவேகம் எதுவும் இல்லை... இந்த நுணுக்கமே நம் அக குருவின் முதல் தீட்சை அல்லது உபதேசம்..... அந்த முதல் தீட்சை உபதேசத்தை முதலில் கைகொண்டு நம் நிறை நிலை மனித பயணத்தில் விரைவாக முன்னேறுவோமாக....

No comments:

Post a Comment