Saturday 25 July 2015

அருள் இயங்கும் முறை- படி இரண்டு

அருள் இயங்கும் முறை- படி இரண்டு 
தியானத்தின் முதல் நோக்கம்
*****************************************
தியானத்தின் முக்கிய நோக்கம் உள் வாங்கும் திறமையை பெருக்கி கொள்வதே.. பிரபஞ்சத்தால் ஆக்கப் பட்டது அனைத்தும் புனிதமே.. இதில் மாறுபட்ட கருத்து இருந்தால் வாழ்வே கடினமே... இந்த பூமி தாயின் ஒவ்வொரு துளி மண்ணும் சக்தியை வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறது.. மின்சாரமே உள் வாங்கும் சக்தியை மையமாக வைத்து தான் செயல் படுகிறது.. அளவற்ற ஆற்றலை கொண்ட மண் தாயின் சக்தியை உள் வாங்க தெரியாததால் உயிர்கள் வாடுகின்றன.. வழிபாட்டு தலங்கள் அனைத்தும் சக்தியை உள்வாங்கும் அமைப்பை ஓரளவு தன்னகத்தே கொண்டாலும் மனிதனின் உள் வாங்கும் சக்தி இல்லையென்றால் எந்த பயனும் இல்லை.. கோவில் பணியாளர்கள் பூசாரிகள், மற்றும் நிர்வாகிகள் பல ஆண்டுகாலம் கோவிலில் தங்கள் வாழ்வின் நேரத்தை கழித்தாலும் குறிபிட்ட எந்த பலனும் பெறாதது போலவே இருக்கிறார்கள்.. சுற்றுபுற சூழ்நிலைகள் கோவில் போன்ற அமைப்புகள் சற்று உள் வாங்கும் சக்தியை பெருக்கினாலும், அவைகளை விட்டு நீங்கி விட்டால் உள் வாங்கும் சக்தி காணாமல் போய் விடும்... ஆகவே சுற்று புற சூழ்நிலைகளை வைத்து உள் வாங்கும் சக்தியை தன்னையறியாமல் பெறுவதை காட்டிலும், ஒரு முறையான தியானத்தால் தனக்கு தானே உள் வாங்கும் சக்தியை பெருக்கி கொள்வதே மிகவும் சிறந்தது.. அதுவே நிரந்தமானது... பல தியானமுறைகள் அந்த வாய்ப்பினை தருவதில்லை.. சுற்றுபுற சூழ்நிலைகளிடமிருந்து விடுபட்டு, தனக்கு தானே, தனக்குள்ளே உள் வாங்கும் சக்தியை பெருக்கி கொண்டால் எல்லாம் செயல் கூடும்.. வாரி வாரி வழங்கும் அன்னை பூமாதேவி என்றும் எப்பொழுதும் எங்கேயும் தயாராக உள்ளாள்.. பெற வேண்டி உள் வாங்க வேண்டியதுதான் நம் வேலை.. இந்த உள் வாங்கும் செயலை தான் தமிழ் மொழியில் அற்புத சொல்லான பணிவு என்பது...
பணிவு என்பதை பிரித்தால் ப்+அணி+வ்+உ எனப்படும்.. ப் கரம் உயிர் சக்தியாகிய மண் சக்தியை குறிக்கும்.. வ் என்பது விண் சக்தியாகிய அறிவினை குறிக்கும்.. உ என்ற உயிர் எழுத்து எப்பொழுதும் இயக்கத்தை குறிக்கும்.. சொத்து போன்ற ஆவணங்களில் முதலில் உ என தொடங்குவது அந்த ஆவணம் வெறும் காகித தாளாக இல்லாமல் இயங்க தொடங்கியது என குறிக்கவே.. ஒரு ஆற்றலை பெற்றால் மட்டும் போதாது அதை அறிவோடு பயன் படுத்த வேண்டும்... அரக்கர்களும் தேவர்களும் ஆற்றலை பயன் படுத்தும் விதத்தில் வேறு படுகிறார்கள்... ஆகவே தான் பணிவு என்ற அற்புத சொல் உயிர் சக்தியை உள் வாங்கி அணிந்து கொண்டு, அறிவோடு இயங்குவது என பொருள் கொள்ளும்.. ஆகவே பணிவின் உண்மை பொருளை மனதில் கொண்டு மண் சக்தியை உள்வாங்கி விண் சக்தியோடு அறிவோடு செயல் பட்டால் எல்லாம் செயல் கூடும்...

No comments:

Post a Comment