Sunday 12 July 2015

பகுதி நாற்பத்தி ஒன்பது :-- சித்தராவது எப்படி ?


புலனும் பொறியும்; பழமையில் எழவேண்டிய புதுமையும் இரண்டு அன்பர்களின் வேண்டுதலின் ஆதாரத்தில் எழுந்த ஞான கருத்துக்கள் வேண்டுதல் 
ஒன்று:- ஐயா வெளிச்ச தோடு தொடர்பு உடைய ஆரா பற்றி சற்று பகிருங்களேன்

பதில்:== ஐந்து புலன் பொறிகள் மூலம் மனதை திசை திருப்பும் விசயங்கள் மட்டுமே நமது ஆன்மீகத்தில் வெளிச்சம் எனக் கூறுகிறோம்.. நீங்கள் சொல்லும் ஆரா ( Aura ) போன்ற சூட்சம சக்தி தோற்றங்கள் தேவையான கனலை பெருக்கிக் கொண்ட உள் மனதிற்கு மட்டுமே உணர வாய்ப்பு உள்ளது.. அவைகள் பொறிகளால் பிடித்துக் கொள்ள முடியாது.. புலன்களுக்கு மட்டுமே புலப்படும்.. அதாவது சூட்சம தேக அமைப்பான புலன்களுக்கு மட்டுமே புலப்படும்.. தூல தேக அமைப்பான கண் காது மூக்கு செவி நாக்கு போன்ற பொறிகளுக்கு தெரியாது.. தெரிந்து கொண்டதை எல்லாம் மற்றவர்களுக்கு காட்டலாம்... ஆனால் புலப்பட்டதை மற்றவர்களுக்கு புலப்படுத்தமுடியாது.. வலி அன்பு சுவை என்பதெல்லாம் புலனாகும் விசயங்களே.... புலனாகும் கடவுளை, ஆரா போன்ற சூட்சம சக்திகளை ஒருவர் தனக்கு தானே புலப்படுத்திக் கொள்ளலாமே தவிர பிறருக்கு தெரியப் படுத்த முடியாது.. ஆனால் இன்றைய ஆன்மீகம் எல்லாம் தெரியப் படுத்த முயற்சி செய்து தோற்று போய் கொண்டே இருக்கிறது.. அககுரு ஒன்றே புலப்படுத்தும் ஆற்றல் உடையவர்.. அககுருவை ஒன்றையே பலப்படுத்துவதோடு ஆன்மீகம் நின்று விட வேண்டும்.. அதை விட்டு விட்டு, பொறிகளுக்கு முடியாததை, தெரியப் படுத்த முயற்சி செய்தால் முழுமையான ஏமாற்றமும் விரக்தியும், பலவீனமுமே மிஞ்சும்.. மர்ம யோகத்தின் பணி மனம் தாண்டிய நிலையில் உள்ள எதையும் புலப்படுத்தும் ஆற்றல் உடைய அக குருவை அடைவதே... ஆனால் விஞ்ஞான சூட்சம சக்தியால் பிடிப்படும் ஆரா தோற்றங்கள் நிழல் வடிவங்கள்.. அககுருவால் புலப்படுவதே நிஜ வடிவங்கள்.. என்ன ஆச்சரியமாக உள்ளதா ? உண்மை அதுவே.. நிஜமே முழு தன்மையை காட்டும்..
---------------------------------------------------------------------------------------------------------------
வேண்டுதல் இரண்டு:-- தங்களிடமிருந்து அற்புதங்களை பெற காத்திருக்கிறோம்..நன்றி அய்யனே Marma Yoogi

பதில் :--- ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மனிதனும் அற்புத படைப்பு தான்.. விழிப்பு நிலையிலே உணர வேண்டிய புதுமை நிலை, ஏனோ மன நிலையில் நாம் அதில் பழமை அடைந்த விட்ட காரணத்தால் அதன் மகிமை இழந்து இருக்கின்றோம்.. எந்த வகையில் பார்த்தாலும் நம் உயிரை விட புதுமை இந்த பிரபஞ்சமாகிய அண்டத்தில் எதுவும் இல்லை எனலாம்.. ஆனால் நாம் தான் அந்த உயிரோடு தொடர்ந்து வாழ விரும்பவில்லை.. குடிகாரர்களும் புகைபிடிப்பவர்களும், நல்ல உதாரணமாக இருந்தாலும், மற்றவர்களும் உயிரை பாதிக்கும், ஏதோ ஒரு கெட்ட மன பழக்கத்திற்கு அடிமைகளாகவே உள்ளனர்.. எந்த ஒரு அற்புதமும் சில மணி நேரத்தில் பழமையாகி விடுகிறது.. ஆயிரக்கணக்கான அற்புதங்கள் நடுவே மனிதன் வாழ்ந்து வந்தாலும், அவற்றின் புதுமை தொலைத்து விட்ட காரணத்தினால், பழமை ஆக்கி கொண்ட மனிதன், மிகவும் சலிப்படைந்த நிலையில் இருக்கிறான்.. மீண்டும் மனிதன் அற்புதங்களை கண்டு களிக்க வேண்டும் என்றால் பொய்யும் கற்பனையும் கலந்த கருத்துக்கள் தான் வர வேண்டி இருக்கிறது.. ஏனென்றால் உண்மை அனைத்தும் ஏற்கனவே வெளிப் பட்டு பழமையாகி விட்டன.. ஆகவே தான் பொய்யும் கற்பனையும் கலந்த கருத்துக்கள் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வருகின்றன,,. கற்பனையாதலால் எவ்வளவு பொய்யை வேண்டுமானாலும் கலந்து கொள்ள சட்டத்திலே இடம் உண்டு.. அவை எல்லாம் உண்மையென அழகாக நிஜத்தை காட்டிலும் வண்ணம் பூசப் பட்டதால் அப்படியே நிஜமாகவே நம்பப் படுகிறது..
எல்லையில்லா வானமும் அற்புத உயிர் ஆற்றலும், அந்த உயிர் ஆற்றலோடு கணத்திற்கு கணம் நிகழ் கால தொடர்பாகிய சுவாசமும், எப்படி அற்புத நிலையில் இருந்து மிக அற்பநிலைக்கு வந்து விட்டது என்பது புரியாத புதிர்.. அற்புதங்களை தேடி அலைய வேண்டியது இல்லை.. இப்பொழுது தேடிகின்ற அற்புதங்கள், பழமையான அற்புதங்கள் முன்னால் கால் தூசி அளவே.. இனி ஒரு புது அற்புதங்களை தேடவே கூடாது... தேடினால் பொய்யும் கற்பனையும் கலந்த அற்பங்கள் தான் நம் முன் தோன்றும்... கடவுளை தேடவும் தோன்றவும் நமக்கு அவசியம் இல்லை.. ஏற்கனவே அவருடன் வாழ்ந்து இருப்பது மிகவும் பழமை ஆகி விட்டதால் நம் மனம் பற்றாமல் இருக்கிறது.. எவ்வளவு தான விஞ்ஞானமே நிரூபித்தாலும், பழமையின் காரணமாக மனம் அதை பிடிக்காமல் இருக்கிறது..
ஞானம் என்பது ஏதோ புது நிலையை அடைவது அல்ல.. பழமையிலேயே அந்த பிரமாண்டமான புதுமை, வெளிப்படும் போது, தன்னோடு காலகாலமாய் இருந்த அந்த பழமையே கடவுள் என்றும் இறை ஆற்றல் என்றும் உணரும் போது, அந்த பழமையின் மிக பிரமாண்டமான புதுமை உணர்வு தான் ஞானம் அடைந்த நிலை.. இறைவனை நிகழ்காலத்திலே கண்டு கொண்டே இருக்கும் தொடர்நிலை.. பழமையை உடைத்து அந்த நிமிடமே வெடித்து சிதறும் புதுமையை காணும் அந்த நேரம் தான் ஞானம் அடைந்த நேரம்...

No comments:

Post a Comment