Saturday 18 July 2015

அருள் இயக்க முறை படிகள்:-- பகுதி ஒன்று


அண்ட இயக்கம் உயிர் இயக்கம் உளவு இயக்கம்
பேரருள் ஆகிய அண்ட இயக்கம் தாயின் கருவிலே மட்டுமே உயிர் இயக்கமாக, திருவருளாக, நேரடியாக வந்து சேருகிறது... இடையில் எதுவுமே இல்லை.. ஆனால் குழந்தை பிறந்த உடனே அண்ட ஆற்றல், திருவருளால் மலர்ந்த பிறந்த தேகத்தின் தொடர்பை துண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது... அண்ட ஆற்றலின் அலைவரிசையும், தேக ஆற்றலின் அலைவரிசையும் ஒன்றுக்கு ஒன்று மிக முரணாக இருப்பதால், இரண்டிற்கும் இடையே ஒரு உறவு ஏற்படுத்த ஒரு உளவு அமைப்பு அவசியம் தேவை படுவதால், அண்ட பேரறிவு, பேரருளுக்கும் திருவருளுக்கும் இடையே குருவருளால் உருவான புத்தி என்ற காற்று பூதத்தின் மிக அடிப்படை விழிப்பு நிலையாகிய சுவாசம் என்ற ஒன்றை ஏற்படுத்தியது... இந்த சுவாசம் உடனே தொடங்க வில்லையென்றால் பிறந்த குழந்தை அண்ட ஆற்றலின் தொடர்பு துண்டிக்கப் பட்டு, திருவருளாக விளங்கும் தேகம் ஒடுங்கி ஒடுங்கி மீள முடியாத பேர் ஒடுக்கமான மரணத்தை தழுவுகிறது... சாவு என்பதை பிரித்தால் ச்+ஆ+வு என பிரியும்.. ச் என்ற நிகழ்கால விழிப்பு நிலையாகிய சுவாசம் திருவருளாகிய தேகத்தை விட்டு பிரிந்து ஆற்றலும் அறிவுமான ( அ+அ ) ஆகாயத்தோடு சேர்ந்து விண் இயக்கமாக (வு ) மாறி விட்டது.. அதாவது திருவருளாகிய தேக இயக்கத்தை கைவிட்டு விட்டது என பொருள்...
இப்போது சுவாசம் என்பதை பிரித்தால் ச் + உ + வாசம் எனவாகிறது.. நிகழ் கால ( ச் ), இயக்கத்தில் ( உ ), வாசம் செய்வது என பொருள் கொள்ளும்.. அந்த நிகழ் கால இயக்கத்தில் வாசம் செய்யும் சுவாசம் இல்லையென்றால் பேரருளின் ஆற்றல் திருவருளுக்கு வந்து சேராது.. அந்த சுவாசமே குருவருளாக இருந்து திருவருளை காக்கிறது... 
இதனால் தான் குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை என்கின்றனர்..
இப்படி இருக்க இன்றைய ஆன்மீக வாதிகள் சுவாசத்தைப் பற்றி அதிகம் பேசாமல், குருவருளின் மேன்மையை வெளிப்படுத்தாமல் இருப்பது மிக வியப்பான செயலாக உள்ளது.. குருவருளின் வடிவமான அகக்குரு இல்லையென்றால் பொருள் உலகமும் இல்லை அருள் உலகமும் இல்லை... சுவாசமே குருவருளின் காரியப் பட்ட ஒன்று.. காரியப் பட்ட ஒன்றின் மூலமாக கவனமாக பழகும் போது, குருவருளில் மேன்மை அடைகிறோம்.. மேன்மை அடைந்து விட்டால் பொருள் உலகமும், அருள் உலகமும் கைவசமாகும் என்பதில் ஐயம் இல்லை... இந்த சுவாசத்தை நாம் ஏன் உளவு இயக்கமாக குறிப்பிடுகின்றோம்.. இந்த உளவு இயக்கம் தான் திருவருளாக விளங்கும் தேகத்தின் தேவைகளை உள்ளும் புறமும் உளவு கண்டு அதற்கு தகுந்தால் போல தேகத்திற்கு வேண்டிய, தகுந்த பொருத்தமான ஆற்றலை பேரருளிடமிருந்து பெற்று திருவருளுக்கு தருகிறது.. உடலின் வெப்பம் சீராக இருக்க செய்வது போன்ற காரியங்களை செம்மையாக செய்வது இந்த குருவருளே.. குருவருளே அன்பு என்ற பெரும் சக்தி.. அன்பு குறைவு பட்டால் எல்லாம் குறை பட்டதாகவே ஆகும்.. குருவருளின் நுணுக்கங்களை ஒன்றின் பின் ஒன்றாக இனி வரும் பகுதிகளில் பார்ப்போம்..

No comments:

Post a Comment