Monday 11 January 2016

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பணிரெண்டு ( 21-12-15)

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பணிரெண்டு ( 21-12-15)
***************************************************************************************
13-12-15 அன்றும் 20-12-15 அன்றும் ஏற்பட்ட மலைஏற்ற அனுபவங்கள் இன்று பகிர்ந்து கொள்கிறோம்... பயிற்சிக்கு நடுவே 20 நிமிடம் வகுப்பு நடந்தது.. அந்த சமயத்தில் நுண் உடல் தனி இயக்கம் பயிற்சி தரப் பட்டது.. அது சிலருக்கு நன்றாக கைகூடியது.. சிலருக்கு திருப்திகரமாக கைகூடவில்லை.. சிலருக்கு சுத்தமாக கைகூடவில்லை போல் தெரிந்தது... இந்த வித்தியாசம் எதனால் என்றால் உடல் உணர்விலே ஊடல் கலத்தல் என்ற நிலைகளில் முன்னேற்றம் ஏற்படாததே காரணம்.. நினைத்தல் என்ற நிலையிலே நான் உணர்கிறேன் உணர்கிறேன் என்று மனம் வாய்ப்பாட்டு பாடியதில் சிலர் அன்பர்கள் ஏமாந்து போய் இருக்கலாம்.. அந்த வாய்ப்பாட்டை நிறுத்தி நம்மில் மையம்கொண்ட குறைந்த அளவில் உள்ள விழிப்பு நிலை மூலமாக உணர்விலே ஊடுருவி சென்று உணர்விலே கலந்து உணர்வு மயமாய் ஆக வேண்டும்.. நான் செய்கிறேன் என்ற ஆணவ மலம் உடைய மனம் அந்த வாய்ப் பாட்டை பாடிக் கொண்டே இருக்கும்.. உணர்விலே இருப்பதாக கூறிக் கொண்டே வாய்ப்பாட்டை பாடும் செயலை செய்து கொண்டே இருக்கும்.. இதனால் சக்தி விரையம் ஆகலாம்...

அதே நேரத்தில் அந்த வாய்ப் பாட்டை பாடுவதில் சலிப்பு நிலை அடைந்த மனம் வேறு ஒரு செயல் பாட்டை செய்ய விரும்பும்.. அரை மணி நேர வகுப்பில் சற்று வேடிக்கையான ஓரிரு விசயங்களை பேசும் போது பலத்த சிரிப்பொலிகள் எழுந்தது இதனால் தான்.. மாற்று செயல் பாட்டிற்கு, சலிப்படைந்த மனம், தாவும் வேகத்தையே இது காட்டிற்று.. மேலும் இரு அன்பர்கள் கோவிலில் சக்கரை பொங்கலை பிரசாதமாக வாங்கி உண்டு விட்டு தொடர்ந்து படியேறும் பயிற்சியினை முறையாக செய்ய தவற விட்டார்கள்.. மிகவும் அன்பாக கொடுத்ததாலும்,பிரசாதம் என்பதாலும் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது என்றனர்.. சலிப்படைந்த மனம் அன்பு பிரசாதம் என்ற புனித பெயர்களை 
உபயோகப்படுத்தி, மிக தந்திரமாக புற உலகில் புகும் செயலை பலம் குறைந்த விழிப்பு நிலையால் கட்டுப் படுத்த முடியாமல் போனதே இது காரணம்..

மனம் ஆழ் நிலையிலே, உணர்விலே ஊடுருவி, உணர்விலே கலந்து, அதில் விழிப்பு நிலையோடு ஆனந்தம் பெற்ற சிலர் அன்பர்கள், பயிற்சியில் முழு ஈடு பாடு கொண்டு இருந்தது, பத்து வார மலை யேற்ற பயிற்சிக்கு சமாதானமாக இருந்தது.. பத்து வார பயிற்சி முடிந்தது... உணர்விலே கலந்த நிலை என்பது அகநானுடன், அககுருவோடு கலந்த நிலையே.. அந்த அகநானாகிய அககுருவே நம் நுண் உடலாகிய சூட்சம தேகத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் தகுதி உடையது.. புற நானுக்கு அது முற்றிலும் இயலாத காரியமே.. சில அன்பர்களுக்கு நுண் உடல் தனி இயக்கம் கை கூடியது.. இது அவர்கள் உணர்விலே கலந்து அகநானை பிடித்ததே காரணம்... அன்பர்கள் மேலே சொன்னவற்றை நன்கு புரிந்து கொண்டு உணர்விலே ஊடுருவி கலந்து, தீவிரமாக பயிலுமாறு வேண்டப் படுகின்றனர்...

No comments:

Post a Comment