Monday 11 January 2016

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி எட்டு ( 28-11-15 )

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி எட்டு ( 28-11-15 )
********************************************************************************
மூன்றாம் கட்ட மலை ஏற்ற பயிற்சிக்கான குறிப்புகள் :

தேக இயக்கம் :
1) அண்ட ஆற்றல் 
2) தேக கனல் ஆற்றல் 
3) நுண் உடல் ஆற்றலான காரண உடல் 
4) காரண உடலால் இயங்கும் பரு உடல் ஆற்றல் 
5) வெளியே அழைத்துச்செல்லும் மன ஆற்றல் 
6) கவர்ச்சி என்னும் வெளி தொடர்புகளின் ஆற்றல் இவைகள் மூலமாக   
    இயங்குகிறது...

வெளியே அழைத்துச் செல்லும் மன ஆற்றலின் போக்கை மாற்றி உள்ளே போக வெளி கவர்ச்சியற்ற தோன்றா நிலையினை அனுபவப் பட வேண்டி உள்ளது.. அதற்கு பரு உடல் ஆற்றலை அதிகப் படுத்த மலை ஏறும் பயிற்சி போன்று சற்று கடினமான பயிற்சி செய்யும் போது வெளியே ஓடும் மன ஆற்றல் உள்ளே ஓட துவங்குகிறது.. இந்த நிலையில் கவர்ச்சி என்னும் வெளி புற தோற்றங்களின் தொடர்பு துண்டிக்கப் படுவதால் தோன்றா நிலை உருவாகிறது.. ஆகாய அனுபவ அறிவு, தோன்றா நிலையினை அனுபவப் பட பட அந்த அறிவு பெருகி பெருகி சித்தத்தில் பதிவாக மாறி பின் நினைத்த மாத்திரத்தில், உடல் இயக்க துணை இல்லாமல், அனுபவ அறிவின் துணையால் தோன்றா நிலை விழிப்பு நிலையில் அனுபவ பட முடிகிறது.. அந்த நிலையில் வெளிச்சமாகிய புற தொடர்புகளை விட்டு விட்டு மனம் கனலாய் மாறி காரண உடலில் பொருந்தி, நினைப்பிலிருந்து உணர்வுக்கு மாறுகிறது.. இந்த மாற்றத்தின் கால அளவு மிக குறுகிய நிலையில் உள்ளதால், நீங்கும் நிலையில் உள்ளது... மனம் கனலிலே போதுமான நேரம் தங்கி இருக்க வேண்டிய அவசியம் ஆகிறது.. அந்த நிலையில் தான், கனல் வடிவான விழிப்பு நிலையை, மனம் நன்கு அறிந்து பழகி கொண்டு, விழிப்பின் மேன்மையை அறிந்து, அதோடு ஒத்துழைக்கும் நிலைமைக்கு வரும்..

அப்படி கனலிலே மனம் இணைந்து இருக்கும் நிலைதான், அகநான், அககுரு, விழிப்பு என்கின்றோம்.. உணர்வு மயமாய் இருப்பது என்பது வெளிச்சமாக புறநானாய் இருக்கும் மனம்; கனல் மயமான அகநானாக இருக்கப் பயணப்படுவது 
தான்.... அது அகநானாக மாறினாலும், நீங்கும் நிலையிலே அதன் கால அளவு, ஆகாய அனுபவ அறிவுக்கு எட்டாததாக உள்ளது.. இரண்டாம் கட்ட பயிற்சியில் கடந்த இரண்டு வாரங்களில் பயின்ற அன்பர்கள் அகநானில் இருக்கும் கால 
அளவினை சற்று உயர்ந்து இருப்பதை அனுபவ அறிவில் அறிந்து இருக்கலாம்..

7வது 8வது வார மலையேறும் பயிற்சியில் அகநானில் இருக்கும் கால அளவினை உயர்த்தும் பயிற்சியாக பயில வேண்டும்... அது நாம் உணர்விலே ஆழ்ந்து ஆழ்ந்து இருக்க கனல் மயமான அகநானில் மனம் பொருந்து இருக்கும் கால அளவு கூடிக் கொண்டே போகும்... அப்படி அந்த அகநானில் மனம் பொருந்தி இருக்கும் அனுபவ நிலையை இன்னதென விவரிக்க முடியாது... அது பேரின்ப நிலையின் துவக்கம்...

இந்த மூன்றாம் கட்ட பயிற்சி, உணர்விலே ஆழ் நிலையில் செல்லுவதற்கும், அகநானில் மனம் பொருந்தி இருக்கும் கால அளவினை அதிகப் படுத்துவதற்குமே.. இந்த நுணுக்கத்தை மனதில் கொண்டு நாம் 7 வது வார தொடக்கமாகிய வரும் ஞாயிறு கிழமை (29-11-15 ) முதல் இரண்டு வாரங்கள் தீவிரமாக பயிலுவோமாக.. குன்றத்தூர் மலை ஏறும் பயிற்சி என்பது ஒரு அடையாளம் காட்டும் பயிற்சி மட்டும் தான்.. மற்ற நாட்களிலும் தீவிரமாகவும் வீட்டு மாடி படிகளில் ஏறி இறங்கியோ அல்லது மைதானத்தில் வேகமாக நடந்தோ, பயில வேண்டியது அவசியமாகிறது.. முறையோடு தீவிரமாக பயின்றால் தான், நுண் உடல் தனி இயக்க பயிற்சிக்கு வழி வகுக்கும், கதி சுவாச பயிற்சி கை கூடும்... அன்பர்கள் தங்கள் மேன்மை நிலை அடைவதற்கு உணர்ந்து விரைந்து செயல் படுமாறு வேண்டுகின்றனன்...

2 comments:

  1. ஐயா, உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது.
    உங்களை தொடர்பு கொள்ள
    Mobile number அனுப்புங்கள் ஐயா.
    நன்றி.

    ReplyDelete
  2. உங்களை தொடர்பு கொள்ள
    Mobile number அனுப்புங்கள் ஐயா.
    நன்றி.

    ReplyDelete