Monday 11 January 2016

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பதினொன்று ( 5-12-15 )

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பதினொன்று ( 5-12-15 )
***************************************************************************************
உணர்வு மயமான அனுபவத்தில் நான்கு நிலைகள் :

உணர்வு என்பது பரு உடலுக்கும் நுண் உடலுக்கும் இடையே ஆன பாலம் போன்றது.. அந்த பாலம் அல்லது இணைப்பு சரியாக இருந்தால் நுண் உடலான சூட்சம தேக ஆதிக்கம் விரைவில் கிடைக்கும்.. ஏன் சூட்சம தேக ஆதிக்கம் தேவை.. அது ஒன்றே அண்ட ஆற்றலோடு நேரடி தொடர்பு கொண்டது.. காரண தேகமாகிய அது செம்மை ஆகும் போது காரிய உடலாகிய பரு உடல் செம்மை ஆகிறது.. அதாவது நோய் நொடிகள் நீங்கி உடல் வளமை,செழுமை, வலு அடைகிறது...

நுண் உடலின் ஆதிக்கம் புரிபவன் தான் விழிப்பு என்ற அகநான்.. பரு உடலின் ஆதிக்கம் புரிபவன் மனம் என்ற புறநான்...அகநான் செய்யும் எல்லா வினைகளும் சத்தியமும் உண்மையும் நிகழ் காலமாய் இருக்கும்.. புறநான் செயல்களை நாம் அப்படி இருக்க முடியாது..

உணர்வு மயமான அனுபவத்தில் நான்கு நிலைகள்:- 
1) காணல் 
2) ஊடல் 
3) கலத்தல் 
4) அதுவாய் ஆதல்

1) காணல் :-- மலை ஏறும் அன்பர்கள் தேக உடல் உணர்வு மயமாய் படி யேறி நடக்க வேண்டும்.. அப்படி நடக்கும் அன்பர்கள் தாங்கள் அனுபவப் படும் உணர்வை மனதால் கண்டு அதாவது அடையாளம் கண்டு நடக்கின்றார்கள்.. நடந்து பார்கிறேன் செய்து பார்கிறேன் முகர்ந்து பார்கிறேன் போன்ற செயல்கள் எல்லாம் மனதால் அடையாளம் கண்டு நடை பெறுகின்றன.. இதில் மனம் இருப்பதால் கொஞ்சம் குறைபாடு உள்ளது... மனம் வெளியே செல்லாமல் உடலில் தங்கி முழு முரண் பட்டு இல்லாமல் இருந்தாலும், இதில் மனதின் செயல் பாடாகிய நான் உணர்வினை பார்கின்றேன் என்ற ஒன்று விரும்பத்தக்கது அல்ல.. இதனால் 25 விழுக்காடு சதவீதம் பலன்,பயன் மட்டுமே கிடைக்கும்... மனதின் செயல் பாடு பட்டும் படாமலும் இருப்பதால் மனம் உடலை விட்டு புறத்தே பாய்ந்து செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன... வினாடிக்கு வினாடி மனம் அப்படி வெளியே செல்வதை விழிப்பு உணர்வால் உணரலாம்..

2) ஊடல் :-- மனம் உணர்விலே ஊடுருவி செல்ல, அதற்கு விழிப்பு நிலை உதவ உணர்விலே ஆழ் நிலையிலே ஊடுருவிய மனம், அவ்வளவு விரைவாக வெளியே செல்லாது.. மனம் உணர்விலே தங்கி இருக்கும் காலம் அதிகமாகி கொண்டே போகும்... மனம் உணர்வில் உடலில் ஊடலிலே இருக்கின்றதா என்பதை உணர கால அளவு அதாவது மனம் உடலில் தங்கி இருக்கும் நேர அளவினை வைத்து அன்பர்கள் கணக்கிடலாம்.. இது உணர்வு மயமான அனுபவ பயிற்சியில் இரண்டாம் கட்ட முன்னேற்ற நிலை... இதில் 50 விழுக்காடு பயன் கிடைக்கும்..

3) கலத்தல் :-- மூன்றாம் கட்ட முன்னேற்ற பயிற்சியாக மனம் உணர்விலே கலத்தல் என்பதாகிறது... இன்னும் இன்னும் ஆழ் நிலையிலே மனம் உணர்வோடு இருக்கும் போது, உணர்வோடு மனம் கலக்கத் தொடங்குகிறது... அப்படி உணர்வோடு கலந்த மனம் மிக அதிக நேரம் உணர்வோடு ஒன்றி இருந்து வெளியே பாய்ந்து செல்லாமல் உடலில் தங்கி இருந்து கனல் பெருக்கத்திற்கு உதவும்... எண்ண ஆதிக்கங்களும் புற உலக தேவை யற்ற செயல்பாடுகள் மனதை வெளியே இழுக்காது.. மனம் விழிப்பு நிலைக்கு உடன் பட்டு அதிக நேரம் இருக்கும் போது விழிப்பு நிலை அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே மனம் விழிப்பு நிலை கட்டுப்பாட்டில் வெளியே இயங்கும்.. இந்த நிலையில் மனம் வெளியே சிக்கி கொள்ளாது உண்மைக்கும் சத்தியத்திற்கும் மட்டுமே நாடும்.. ஆனாலும் மிக வலுவான புற உலக செயல் பாடுகள் வந்தால் விசுவாமித்திரர் மோகினியிடம் காமத்தில் சிக்கிய நிகழ்வாக நடக்க வாய்ப்புகள் உண்டு... இதில் 75 சதவீதம் பயன் கிடைக்கும்...

4) அதுவாய் ஆதல் :-- உணர்வாய் மனம் ஆகவும், உணர்வும் மனமும் ஒன்றான நிலை ஏற்படவும் மிக மிக ஆழ் நிலைக்கு மனம் உணர்விலே செல்ல வேண்டும்.. அது படிப்படியான தான் செல்ல வேண்டும்.. தாவி செல்ல நினைத்தால் தோல்வியிலே தான் முடியும்... அவ்வாறு மனம் தாவி தாவி தோல்வியை தழுவது அதன் இயல்பு... இதனை தடுக்க விழிப்பு நிலை பெருக்கமே உதவும்... விழிப்பு நிலைக்கு உடன் பட்ட மனமே படிப்படியாக செல்லும்.. விழிப்பு நிலையால் அடக்கப் பட்ட மனம் விபரீத போக்குகிற்கே செல்லும்... அப்படி உணர்வாய் ஆன மனம் எந்த நேரமும் கனல் பெருக்கத்திற்கு உதவி, விழிப்பு நிலைக்கு நிகழ்நிலைக்கு எப்பொழுதும் உடன் பட்டே இருக்கும்.. அந்த மனமே சுத்தமனம் அல்லது கனல் மனம் எனலாம்... புறநான் முழுமையாக அகநானாக மாறும் போது எல்லா செயல் பாடுகளும் முழுமையான நிறைவினை, திருப்தியை தரும்... இதில் 100 விழுக்காடு முழு பலன் பயன் கிடைக்கும்...

No comments:

Post a Comment