Monday 11 January 2016

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஆறு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஆறு 
********************************************************** ********************* 
மனதிற்கு நித்திய சுகம், நித்திய வாழ்வு, என்றுமே சாத்தியமாகாது
ஒவ்வொரு மனிதனும் தன்னை சூழ்ந்தவர்கள் பலர் இறந்து போகின்றதை கண்டும், தான் மட்டுமே என்றும் உயிரோடு இருப்பதாக கனவு காண்பது தான் உலகில் மிக பெரிய அதிசயமென எமதர்மர் வெளிப்படுத்துகிறார்.. அப்படி, என்றும் உயிரோடு இருப்போம் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பது விழிப்பு நிலையாளர்களுக்கு மட்டுமே விளங்கும்... வெளிச்சத்திற்கு பலியாகும் மனித மனம் எந்த நிலையிலும், நிரந்தர சுகம் என்று எதையும் தன்னிடம் வைத்துக் கொள்ள முடியாது... ஒன்று நிரந்தர சுகம் என்று ஒன்றை பாடுபட்டு பெற்றுக் கொண்டாலும் அவன் மன நிலையில் அந்த சுகம் விரைவில் மங்கி அதன் கலை விரைவில் இழந்து போய் விடும்.. பின் மறு படியும் அதிக சுகம் தரும் ஒன்றை நாடி செல்ல வேண்டியது தான்... இப்படியே மனிதன் வெளிச்சத்தில் பலியான மனதால் தேடுதலை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.. தேடுதலை நீடித்துக் கொண்டே இருக்கும் மனிதன், முடிவாக ஒரு நாளும் அமைதியாக உட்கார்ந்து தன்னை பற்றி சிந்திக்கவே முடியாது.. தன்னை சிந்திக்க நேரம் கிடைக்காதவன் தன் தேகத்தையும் இழக்கும் நிலையிலும் நித்திய சுகம் தரும் சுவர்க்கம் என்ற எதிர்பார்ப்போடு மரணத்தை எதிர் கொள்கிறான்... அது ஒரு நாளும் வாய்க்கப் போவது இல்லை.. அது வாய்த்தாலும் சிறிது காலத்திற்குள்ளேயே பழமையாக்கி அதனுடைய நித்திய தன்மையை இவனே தனக்கு தானே இழக்கச் செய்து, மீண்டும் ஒரு நித்தியத்தை தேடி அலைவான்.. அதனால் தான் பல வருடங்கள் தவம் செய்து, கடவுள் நேரடி காட்சி கிடைத்தாலும், சிறிது காலத்திலேயே அந்த கடவுளே அவனுக்கு பழமையாகி, அவன் மீண்டும் அந்த கடவுளிடமே உன் கடவுள் யார் அவரை காண்பிப்பாய் என கேட்பான்... அவன் செய்த பல வருடங்கள் செய்த தவம் இதனால் வீணாய் போவது நிச்சயம்.. மனம் ஆதிக்கம் படைத்த மனிதனுக்கு நிச்சயமற்ற அநித்தியமான ஒன்றே நிச்சயமான, நித்தியமான ஒன்றாய் உள்ளது...

மேற் கூறிய கருத்திலிருந்து முக்கியமாக அறிந்து கொள்ளக்கூடிய செய்தி என்னவென்றால், மனிதன் தான் பெரும்பாடு பட்டு பெற்ற அனைத்தையும் தன் மன அளவில் பழமையாக்கி அதனை செயல் இழக்கச் செய்து, நடை பிணமாக்கி அதனை காட்சி பொருளாய் ஒரு நாள் மலரும் நினைவுக்கு பயன் படுத்த அதனை வீட்டில் தனி அறையில் அடைத்து வைப்பான்.. இப்படி அடைத்து வைத்து வைத்து ஒரு நாள் தான் இருக்க, உட்கார, ஏன் நகரவே, தான் கட்டிய வீட்டிலேயே இடம் தேடுவான்.. அப்படி ஒரு அவல நிலையை பல மனிதர்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்... எதை ஒன்றை நித்தியம் என்று தேடி அலைந்து பெற்றானோ அந்த ஒன்றே அவனுக்கு அநித்தியத்தை உடனே மனதளவில் தருகிறது என்பதை அறியாது இருக்கின்றான்.. இதில் மனதளவில் என்ற சொல் ஆயிரம் அர்த்தங்களை சொல்லுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...

அப்படியானால் மனம் படைத்த மனிதனின் செயல் பாடுகள் அனைத்தும் வீணா என்ற கேள்விக்கு பதில் ஒன்றே ஒன்றுதான்... அது வீண் தான் என்பது... பஞ்ச பூதங்களில் ஒன்றான மனதை வெட்டி போட்டு விடலாமா ? என்ற கேள்வி எழலாம்.. மனம் என்ற பூதம் இல்லையென்றால் அருவ உருவ நிலையான பூதங்கள் பிளவு பட்டு சமச்சீர் பஞ்ச பூத ஒருமைபாடு காணாமல் போய் எல்லாமே முடங்கி போய் விடும்.. இங்கே நாம் குறிப்பிடுவது எல்லாம் வெளிச்சத்திற்கு பலியான மனதை தான்.. அதே மனம் கனலை நாடி கனலுக்கு செல்லும் போது, எல்லாமே தலைகீழாக மாறுகிறது.. நரகம் சொர்க்கம் ஆகிறது.. அநித்தியம் நித்தியம் ஆகிறது.. வெளிச்சத்தில் பலியான மனிதன் கனலில் பதவியை அடைகிறான்.. அதாவது உயர்ந்த இறைநிலையை அடைகிறான்.. எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்று கிடைக்கப் பெற்று முழுமையான நிறைவினை மனிதன் பெற முடியும்... அதனால் தேடுதல்கள் நிறுத்தப் படுகின்றன... நித்திய சுக வாழ்வு தானாகவே வந்து சேருகின்றது...

ஆனால் மனிதர்களை பலி இடுவதற்கென்றே வெளிச்சத்தை திட்டமிட்டு பரப்பி உலகை கொலை களமாக்கி கோடிக்கணக்கில் உயிர் கொலை செய்து தானும் கொலை செய்யப்பட்டு மடிந்து போகிற மனித குலம் விடிவை பார்க்க வேண்டும் என்றால் மனித மனம் கனலுக்கு வர வேண்டும்... வெளிச்சம் என்ற கவர்ச்சி பஞ்ச பூத சமச்சீர் ஒருமை பாட்டை உடைக்க முயற்ச்சி செய்யும்.. ஆனால் கனல் அதனை பலப் படுத்தவே முயலும்..

போர் என்ற சொல்லுக்கு இரண்டு விளக்கம் உள்ளது.. புற உலக வழக்கில் அது சண்டை எனப்படும்.. அக உலக உள் விளக்கத்தில் அது பஞ்ச பூத சமச்சீர் ஒருமை பாட்டை குறிக்கும்.. போர் என்பதை பிரித்தால் ப் + ஓர் என பிரிந்து உயிர் (ப்) ஒருமைபட்ட ( ஓர் ) நிலையை குறிக்கும்.. பாரதம் என்ற சொல்லை பிரித்தால் ப் + ஆரதம் என பிரிந்து உயிரை ஆராதிக்கின்ற, போற்றுகின்ற, செயல் பாட்டினை குறிக்கும்.. பாரத போர் எனப் படுவது உயிரை போற்றி காக்கின்ற பஞ்சபூத சமசீர் ஒருமைப் பாடு என பொருள்..

உண்மை என்னவென்றால் கனல் உணர்விலே எழுதப் பட்ட அக நிலை மகா பாரதம், வெளிச்சத்திலே திரிந்து போய், புற நிலை மகா பாரதமாய் பழுதாகி விட்டது.. மிக வலிமை வாய்ந்த 100 சகோதரர்களும் பீஷ்மர் துரோச்சாரியார் கர்ணன் போன்ற மிக மிக வல்லமை வாய்ந்தவர்களையும் கொண்ட கௌரவப் படையை, கனல் வடிவான அகநான் வடிவான, ஆயுத தாங்காத கண்ணன் தலைமையில் பஞ்சபாண்டவர்கள் வென்றார்கள் என்றால் அந்த வெற்றி முழுக்க முழுக்க கண்ணனையே சாரும்... அதே போல் ஆயிரம் ஆயிரம் வலுவான வடிவ எண்ண ஆதிக்கங்களை கொண்ட, வெளிச்சத்திற்கு பலியான வலுவான மனம் இருந்தாலும், எந்த வடிவம் தாங்காத ( ஆயுதம் ஏந்தாத ) தோன்றா நிலையில் இருக்கும் அகநானிடம் மனம் தோற்று போவது நிச்சயம்... கனல் வழி சென்று அக பாரத போர் புரிந்து நிறை நிலை மனித நிலைக்கு உயருவோமாக...

No comments:

Post a Comment