Monday 11 January 2016

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பது

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பது 
*********************************************************************
மி என்ற மிசையின் உயரிய சிறப்பு
தமிழ் என்பதில் தன்மை என்ற த கர உயிர் மெய் எழுத்தின் சிறப்பை பார்த்தோம்.. அடுத்து மி என்ற இரண்டாம் எழுத்தின் சிறப்பை பார்க்கலாம்.. த என்பது தடி நிலையான உலகியல் இயக்கத்திற்கு உதவும் உடலை குறிக்கும்.. மி என்பது நுண் உடலாகிய சூட்சம தேகத்தை குறிக்கும்.. மின்சாரம் என்பதே நுண் ஆற்றல் ஆகும்.. அந்த மி என்ற நுண் ஆற்றலோடு இசைந்து வாழ்வதையே குறிப்பால் மி என்றனர்.. ஏறா நிலை மிசை அருட்பெரும்சோதி என்னை ஏற்றி வைத்தது என புகழ் பாடினார் வள்ளலார்... அந்த அருட்பெரும் சோதி அகப்படும் இடம் தான் மனம் சீண்ட முடியாத நிலையாகிய தோன்றாநிலை... அந்த தோன்றா நிலையில் நுண் ஆற்றலோடு இசைந்து வாழும் தகுதி யாருக்கு உண்டு என்றால் அந்த தோன்றாநிலை என்ற வலுவான கோட்டைகுள்ளே அரசாட்சி செய்யும் அரியாணையில் அமர்ந்துஇருக்கும் வேந்தன் அகநானாகிய அககுருவுக்கு மட்டுமே உண்டு..

ஆகவே தான் நாம் முதலில் தோன்றாநிலையை அனுபவப் பட்டு அதில் வலு அடைந்து அதில் நிலை கொண்டு பின் அகநான் மூலமாக மி என்ற நுண் ஆற்றல் மூலம் இசைந்து வாழ முனைகின்றோம்... எப்படி நாம் உடன்பாட்டு சுவாசத்தின் மூலம் இசைந்து இருந்து தோன்றா நிலையினை கை கொண்டோமோ அதே போல் நாம் தோன்றா நிலைகுள்ளே நுண் ஆற்றலாகிய சூட்சம சக்தியோடு இசைந்து உடன் பட்டு நுண் ஆற்றலை அகநானால் கைகொள்கிறோம்... நாம் அகநானாய் மாறிய உடன் மிசை நிலையை அதாவது நுண் ஆற்றலோடு இசைந்து வாழும் 
பயிற்சியினை தொடங்க உள்ளோம்.. நுண் ஆற்றலோடு இசைந்து வாழும் தகுதி, தன்மை நிலை அடைந்த அகநானுக்கு மட்டுமே உள்ளதால் அகநான் உணர்வு பெற, முழு மூச்சோடு தோன்றா நிலை அனுபவத்திற்கு உள்ளே உணர்வு அனுபவத்தை பெற ஆவன செய்திட வேண்டும்...

சித் என்றால் விளக்கம்.. விளங்க வைக்கும் சக்தி என்றும் பொருள் கொள்ளலாம்.. தடி பொருளாகிய தேகத்தை உடலை விளங்க வைக்கும் சக்தி சித் ஆகிய நுண் ஆற்றலாகும்.. அந்த நுண் ஆற்றலோடு இசைந்து வாழ்பவர்களையே சித் 
நிலை அறிந்த சித்தர்கள்.. அதற்கும் மேலே ஆதி ஆற்றலாகியாகிய சத்தோடு கூடி இருக்கும் சத்தர்கள் எனப்படுபவர்கள் எல்லாம் வல்ல நிறைநிலை மனிதர்களாக உள்ளனர்.. நம் இன்றைய நிலையில் நுண் ஆற்றலோடு இசைந்து சித்தர்கள் ஆக முனைவோமாக...

ஏன் நாம் நுண் ஆற்றலோடு இசைந்து வாழ முனைய வேண்டும்.. நமக்கு இருக்கும் நுண் ஆற்றல் சக்தி விதிக்கப் பட்ட நிலையில் உள்ளது.. விதிக்கப் பட்ட எதுவும் நிலைப்பதில்லை.. அதிகப் பட்ட நுண் ஆற்றல் பெற்று நம் நிலையை நன்கு விளங்கிட செய்ய ஏற்றம் பெற நாம் நுண் உடல் ஆற்றலோடு இசைந்து வாழ்ந்து அதை வேண்டிய அளவு பெற, கைகொள்ள வேண்டும்... பரு உடலாகிய தூல தேகத்தில் வரும் நோய்கள், முதுமை, எல்லாம் நுண் ஆற்றல் குறைபாடே.. மிக உயர்வாக கருதப்படும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகம் சமாதியில் முடிந்து விடுகிறது.. அதாவது தமிழின் முதல் நிலையாம் தன்மையில் முடிந்து விடுகிறது... ஆனால் அதற்கு மேலே பன் மடங்கு உயர் நிலைக்கு 
சென்றது நம் தமிழ் ஓகம் என்ற யோகமே..

நமது திட உடல் எடையை, அதை இயக்கும் நுண் ஆற்றல் தாங்கும் எடையால் வகுத்தால், அது தற்போது 100 லிருந்து 200 வரை இருக்கும்.. இது நுண் ஆற்றல் இசைந்து வாழும் பயிற்சியால் சிறுக சிறுக குறைந்து, இரண்டும் சம நிலைக்கு 
வரும் போது, மனிதன் நீரின் மேலே நடக்கும் அளவிற்கு மென்மை அடைகிறான்.. வன்மையால் முதுமையும், மென்மையால் இளமையும் வருகிறது.. இந்த இளமை குழந்தையின் இளமையை காட்டிலும் பன் மடங்கு உயர்ந்து 
இருக்கும்...

ஆகவே இதுவரை மலைஏறும் பயிற்சியிலும் மற்றும் உடன்பாட்டு சுவாசத்திலும் சுவாச ஒழுங்கிலும் பயின்ற அன்பர்கள் தங்கள் பயிற்சியில் பின் தங்கி இருந்தால் சற்று கவனமாக தீவிரமாக பயின்று, நுண் ஆற்றலோடு இசைந்து இருக்கும் 
மிசை நிலை பயிற்சிக்கு தங்களை இன்னும் இரண்டு வாரத்திற்குள் ஆயத்தப் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்...

No comments:

Post a Comment