Monday 11 January 2016

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி ஒன்பது

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி ஒன்பது ( 20-11-15 )
*************************************************************************************************
வண்ணத்துப் பூச்சியின் கனல் வீரம்
அருவருக்கத் தக்க வடிவம் தாங்கிய கம்பளி புழுவை நாம் பார்த்து இருக்கின்றோம்,,, அதனை கருணை வடிவான கடவுள் கூட விரும்ப மாட்டார் என்று எண்ணும் அளவிற்கு அதன் தோற்றம்... நகர்ந்து நகர்ந்து அது சென்று ஒவ்வொரு இலையை தின்று தன் பசியை போக்கிக் கொள்ளும்.. ஒரு நாள் எல்லாம் அது நகர்ந்தாலும் அது ஒரு மீட்டர் தூரம் மட்டுமே நகர முடியும்... உரோம கால்கள் ஆயிரத்திற்கு மேலேயாம்.. அத்தனை கால்களை பயன் படுத்தினால் தான் அது நகர முடியும்... இரவும் பகலும் இலைகளை தின்று தின்று வாழும் கம்பளி புழு போல் வாழும் உயிர் வகைகள் மிக மிக குறைவே... ஆனாலும் அது தன்னை மாற்றி கொள்ள முடிவு எடுக்கிறது.. தன் தோற்றத்திலிருந்து விடுப்பட்டு ஒரு புதிய தோற்றத்திற்கு வர வேண்டும் என விரும்பியதால் என்னவோ, அதை தன்னை சுற்றி ஒரு கூடு ஒன்றை அமைத்துக் கொண்டு உலக உறவுகளை துறந்து இருக்கிறது.. இப்படி உலக உறவுகளை துறந்து தனி மனிதனாய் எத்தனையோ மனிதர்கள் நடைபிணமாய் இருந்தார்கள்.. இனி இருப்பார்கள்.. அப்படி இருப்பதால் ஒரு பலனும் இல்லை.. அவர்களை செத்தாரை போல் உள்ளவர்கள் கணக்கில் சேர்க்கப் படும்.... அப்படியான துறவுக்கு முன் எப்படி இருந்தார்களோ, அப்படியே பல வருடங்கள் ஆனாலும் இருப்பார்கள்..

ஆனால் கூண்டு புழுவாய் இருந்த அந்த கம்பளி புழு ஒரு மகா தமிழ் சித்தன் செய்த யோகப் பயிற்சியை செய்கிறது... அது அண்ட ஆற்றலோடு இசைந்து வாழ்கிறது.. ஆம் இசைபட வாழ்தல் என்பது தமிழின் இடைபட்ட பகுதி.. இயல் இசை நாடகம் என்பதில் இடை நிலை... ஆனால் இந்த இசைபட வாழ்வதற்கு பணிவு என்ற மிக பெரிய குணம் தேவைப் படுகிறது.. பணிவு என்பது தமிழோடு கலந்த ஒன்று... நமது நாயன்மார்களின் ஆழ்வார்களின் பணிவு மிகவும் பிரமிப்பு தரக்கூடியது.... ஆனால் அந்த பணிவோடு சிறுக சிறுக வீரம் கலவாத, மறந்த ஒரு நிலையால் தான், தமிழ் நிலை தாழ்ந்தது... வீரம் என்பது பிறரோடு கொள்ளும் உறவை மையம் வைத்தே இன்றைய நிலையில் கருதப் படுகிறது.. ஆனால் தன்னில் தானாய் தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்ள அண்ட ஆற்றலோடு இசைந்து வாழ உலக சார்புகளை துறந்து ஒரு வீர துறவு கொள்ளும் நிலையைதான் பண்டைய நிலையில் கருதப் பட்டது...

தன்னுடைய இயல் நிலையை மாற்றிக் கொள்ள வீர துறவு கொண்டு அண்ட ஆற்றலோடு இசைந்து வாழ தன்னில் தானாய் இருக்கும் நிலையை தான் தமிழில் தன்மை என்றனர்.. தன்மை என்பது தன்னில் மையம் கொண்ட நிலை ஆகும்... தன்மையாக பேசவும் நடக்கவும் பழகவும் எதுவும் செய்யவும், தன்னில் மையம் கொண்டவர்களுக்கே சாத்தியமாகும்... தன்னில் மையம் கொண்டவர்கள் தன்னை முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டவர்கள்.. அப்படிபட்டவர்களுக்கு மட்டுமே மற்றவர்களையும் உணரும் வல்லமையும் இருக்கும்... தன்னில் மையம் கொண்டவர்கள் மட்டுமே மற்றவர்களோடு தன்மையாக நடக்க இயலும்... அப்படி பட்ட உயர்ந்த நிலையான தன்மையின் முதல் எழுத்து தான் தமிழ் என்பதின் முதல் எழுத்து...

தன்மை அடையாதவர்கள் தமிழ் நிலையை ஒரு போதும் அடைய முடியாது... பணிவும் வீரமும் இரு கண்களாய், நினைந்து இசைந்து வாழும் முழுமையான பண்பைதான் த என்ற தமிழின் முதல் எழுத்து... தன்மையில் கூண்டுக்குள் புகுந்த கம்பளி புழு தன் வீரத்தாலும் தன்மையாலும் அண்ட ஆற்றலோடு கனல் பெருக்கத்தில் இசைந்து வாழும் பணிவாலும், அழகிய வண்ணத்துப் பூச்சியாய் தன் தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு புற உலகில் அனைவரும் கவரும் விதமாக புது பிறவியாய் வெளி வருகிறது... நாமும் தன்மையும் வீரமும் கொண்டு புது பிறவி ஒன்றை தமிழின் முதல் எழுத்தான தன்மையில் அடைவோமாக.. தன்மை அககுரு அகநான் என்பது எல்லாம் ஒரே பொருளையே குறிக்கும்... அகநானாய் மாறி அகநானாக செயல் படுவது என்பது தன்மையாய் மாறி தன்மையாய் செயல் படுவதாகும்.. தன்மையால் எந்த செயலும் சித்தி பெறும் என்பது திண்ணம்... எழுதலுக்கும் எழுத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.. தன்மையில் புத்தம் புது பிறவி ஒன்றில் எழுவோமாக.. அடுத்து தமிழின் அடுத்த நிலையாகிய மி என்ற நிலையையும் ழ் என்ற நிலையையும் அடுத்த பதிவுகளில் காண்போமாக....

No comments:

Post a Comment