Saturday 27 June 2015

பகுதி 11 - சிவகலப்பு சிவயோகத்தில் மனம் என்னும் தொழில் சாலை..

சிவகலப்பு சிவயோகத்தில் மனம் என்ற சிக்கலான நடு பூதத்தை பார்க்க உள்ளோம்.. மனதில் தூய காற்று என்ற பூதத்தின் உணர்வு சக்திகளும் சித்தத்தின் வடிவ சக்திகள் என்ற எண்ணங்களும் கலந்து இருகின்றன.. மனம் ஒரு தொழிற் சாலை.. இந்த தொழிற்சாலையில் அனைத்தையும் கவனிக்க ஒரே ஒருவன் தான் உள்ளான்.. அவன்தான் விழிப்பு நிலைக்காரன்.. இந்த விழிப்புக்காரன் எண்ணம் என்ற மூலப்பொருளை உணர்வு என்ற தூய உற்பத்தி பொருளாக மாற்றி நுகர்வோன் ஆகிய ஆகாயம் என்ற பேரறிவுக்கு புத்தி பூதம் மூலம் படைக்கின்றான்... பேரறிவோ தன்னிடம் உள்ள ஒரே பொருளான விழிப்பு சக்தியை விழிப்புக் காரனுக்கு கூலியாக கொடுக்கிறது.. மூலப்பொருளை தானமாக அளிப்பவன் தான் சித்தம் என்ற நீர் பூதம்.. நீரில் பல பிறவிகளில் சேர்த்த மூலப் பொருளின் பளு மிக மிக அதிகமாக இருப்பதால், தானம் என்ற பெயரில் இலவசமாக மனதிற்கு தருகிறது.. மனம், தான் உற்பத்தி செய்த உணர்வின் ஒரு பகுதியை தேகத்தில் பயன்படுத்தி தானே அனுபவிக்கின்றது.. தேக வடிவோடு சேர்ந்த அந்த உணர்வு நிலை, வடிவக் கழிவுகளாக சித்தத்தில் எண்ண பதிவுகளாக சேர்ந்து மீண்டும் மூலபொருளாகிறது.. மனம், தேகம் இல்லாது அனுபவ முடியாது..
சரியான மனம் தன் நிலையில் மூன்று வேலைகளை செய்கிறது..
1) சித்ததில் இருந்து வலு கட்டாயமாக வந்து இறங்கும் வடிவ எண்ணங்களை தன் தகுதி ஏற்ப ஏற்று
மூல பொருளாக உபயோகப்படுத்தி இயக்கத்திற்கு வருகிறது..
2) மனம் எண்ணத்தை உணர்வாக மாற்றுகிறது.. இது மிக முக்கியமான வேலை ஆகும்..
3) மாற்றிய உணர்வை காற்றுக்கும் ஆகாயத்திற்கும் மேல் நோக்கியும் மீதி உணர்வை தேகத்திற்கு அனுப்பி சரியான விகிதத்தில் பங்கு அளிக்கிறது..
சரியான மனம் என்பது விழிப்பு நிலையோடு உணர்வுடன் கூடிய புத்தியின் கீழ் இயங்கக்கூடியது.. ஒழுங்குதன்மை வாய்ந்த புத்தியின் உதவி இல்லையேல் மனம் சரிவர இயங்காது.. உணர்வு தன்மை கூட கூட புத்தியின் செயல் பாடும் ஆதிக்கமும் கூடும்.. புத்தியின் ஆதிக்கத்தில் மனம் செம்மை ஆனால் எல்லாமே செம்மை ஆகும்.. ஆகவே எப்படியாவது உணர்வை பெருக்கி
புத்தியை பெருக்கி கொள்ள வேண்டும்.. புத்தியின் நிலை ஆகிய காற்று சதா காலமும் தேகத்தில் மூச்சாக ஓடி மனதை செம்மை நிலையில் வைத்து கொள்கிறது என்பதும் சில நிமிடங்கள் மூச்சு
ஓட்டம் தடைபட்டால் மனம் எப்படி துடிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.. வாசியோகம் என்பது முறையான மூச்சின் துணையால் புத்தியின் ஆதிக்கத்தை மனதில் ஏற்படுத்துவதுதான்.. அதற்கு முன்பாக புத்தியின் வலுவை உயர்த்த வேண்டும்.. 'சி' என்ற மனதை 'வ' என்ற புத்தியோடு கலப்பது தான் சிவ கலப்பு சிவயோகம்... எதன் ஒன்றின் துணையால் வடிவ எண்ணங்கள் ஏற்பட்டதோ அதன் ஒன்றின் துணையால் வடிவ எண்ணங்களை பிளக்க செய்து அணுபிளவிற்க்கு ஒத்த பேராற்றல் உணர்வு சக்தியை உற்பத்தி செய்து புத்தியை பெருக்கும் சித்தர் வழி பயிற்சியினை அடுத்த பகுதியில்
நிச்சயமாக பார்க்கலாம்..

No comments:

Post a Comment