Saturday 27 June 2015

உளவுகள் பகுதி பதினொன்று - எந்த கவர்ச்சியும் இல்லா நாதம்


பழங்காலம் முதல் இந்நாள் வரை நாதத்தின் பெருமை சொல்லப்பட்டு தான் வருகிறது.நாதத்தில் இருப்பவனை நாதன் என அழைப்பார்கள்.. இறைவனையும் பெயருக்கு பின்னால் அடைமொழியாக நாதன் என அழைக்கப்படுகிறார்.. எதோ ஒன்று கிடைக்காதா என்ற தேடல் உள்ளவர்கள் நாதத்தை தெரிந்து கொள்வார்கள்.. ஆனால் பயிற்சி என வந்தால் பின் வாங்கிவிடுவார்கள்.. காரணம் கவர்ச்சி என எதுவுமே இல்லாததே, இதன் குறைபாடு.. ஆனால் அந்த குறைபாட்டை நீக்கினால் அது தன் பூரண தன்மையை முழுமையாக இழந்து விடும்.. நாதத்திலிருந்து மனிதன் பின் வாங்குவது கீழ் வரும் காரணங்களே.. முதலில் நாதம் எடுத்த எடுப்பிலே எண்ணங்களின் ஆதிக்கத்தை அழிக்கிறது.. எண்ண ஆதிக்கத்தால் தானே எல்லாம் இயக்குவதாக இதுவரை நினைத்து கொண்டிருந்த மனிதன் தன் இயக்கம் நின்று போனது போல சூழ்நிலை வந்த உடன் தன் தன்முனைப்பு என்ற ஆணவம் இழக்கிறான்.. இதை தன் மூச்சே நின்று போனது போல் கருதுகிறான்.. இரண்டாவது இதுவரை இயக்க நிலையிலேயே இருந்தது போன்ற ஆணவ(ego) மாயையில் இருந்ததாலும் இயங்க தெரியாதனாலும், ஒன்று நிகழும் வரை சும்மா இருக்க முடியாதனாலும்,என்ன செய்வது என தெரியாது தவிக்கிறான்..
இதுவரை தனது எண்ணங்களால் தான் வேறு ஒன்றாகவும் வேறு ஒருவராகவும் இருக்க பழகி கொண்ட மனிதன்,தான் தானாக இருக்க பழகாததால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தடுமாறுகிறான்.. அப்படி தெரியாத நிலையில் தன் இருப்பு என்ற உன்னத தெய்வ நிலை வெளிப்படுவதை ஏதோ ஒரு புது உலகத்திற்கு சென்றது போன்ற உணர்வால் பந்த பட்ட தனது உலக சம்பந்தத்துக்கு உடனே வர துடிக்கிறான்.. தன் வாழ்வின் மூலமே தன் இருப்பு தன்மையில் தான் இருக்கிறதும்,அங்கு ஒன்றில் தான் தன் வாழ்விற்கான உயிர் சக்தியை பெறுவதற்கும்,பெருக்குவதற்கான புனித இடமாக இருப்பதை அறியாது, உயிர் சக்தியை இழக்கும் பழகிவிட்ட மரண பூமியான உலகியல் விசயங்களில் ஒட்டிக்கொள்ளவே துடிக்கின்றான்.. விளைவு நாத இணைப்பின் துண்டிப்பு.. உலக குருக்களின் விரலை பிடித்து நடந்து பழகிவிட்ட மனிதன்,தனக்குள்ளே ஒரு குரு சதா காலமும் இவனுக்காக காத்துக் கொண்டிருப்பதை கவனிக்க மறந்தே போனான்,பாழாய் போன, இனியும் போகும் மனிதன்.. உலக பற்றுகளின் மேல் ஆசைகளை பெருக்கிக் கொள்ளும் பொழுது,தன் வாழ் நாள் சுருங்கி போவதை கவனிக்க தவறி விட்டான்.. எல்லாம் பெற்றான் எல்லாம் இழந்தான்.. பெற்றதை தக்க வைக்கும் தகுதி இல்லை.. எந்த கவர்ச்சியும், தன்னையே இழக்கச் செய்யும் ஒரு மாயை என்பதையும், கவர்ச்சியற்ற ஒன்று தன் இருப்பு தன்மைக்கு திருப்பி விடும் என்ற ஒரு எளிய அறிவு மிக மிக எரிச்சலாக தெரிகிறது.. தன்னை உணர்ந்த நிலை காட்டிலும் தன்னை இழந்த நிலையே மனிதன் விரும்புகிறான்.. 
ஒரு மனிதனுக்கு கடவுள் காட்சி அளிக்கிறார்.. ஆரம்பத்தில் படு கவர்ச்சியான கடவுள் தன் காட்சியை தொடர்ந்தால், சிறுக சிறுக இழந்து முற்றிலுமாக தன் கவர்ச்சியை இழந்து விடுவார்.. மனிதனும் கடவுளை விட்டு விலகி, ஐந்து கால்கள் ஆறு கால்களோடு ஒரு பன்றி பிறந்தால் அதை பார்க்கப் போய் விடுவான்.. ஒரே கடவுளாக தன் இஷ்ட கடவுளை மனிதன் தொழுவதே இல்லை.. கவர்ச்சி அற்ற தன் இஷ்ட கடவுளை விட்டு விலகவே துடிப்பான்.. இப்படியாக மனிதன் பக்தி யோகத்திலும் நாசம் அடைகிறான்.. தன் மரணத்திற்கு பின் தன் இருப்பு நிலை ஒன்று மாத்திரமே தனக்கு அடைக்களம் தரும் இடம் என்று அறியாது பேய் போல் பிரபஞ்சத்தில் அலையும் நிலைக்கே மனிதன் வருகிறான்.. நாதம் இப்பிறவி மட்டும் அல்ல இறந்த பின்னும் அவனுக்கு உற்ற துணையாக இருப்பதை உணராது இருக்கிறான்.. எத்தனையோ கவர்ச்சி கருத்துகளை
இந்த முகநூலில் நாதத்தோடு சேர்த்தாலும் எதிர் பார்ப்போடு ஈர்க்கப்பட்ட மனிதன் நாதத்தில் இணையும் போது சில நிமிடங்கள் கூட அல்ல,சில விநாடிகளிலேயே அங்கு கவர்ச்சி இழந்து, விடுகிறான்..நாத இணைப்பு துண்டிக்கப்படுகிறது..
நாத இணைப்பு என்பது ஒரு போர் களம்.. அங்கு பகைவர்கள் கவர்ச்சியை காட்ட மாட்டார்கள்.. மரண பயத்தை காட்டுவார்கள்.. மரண பயத்தை உணர வில்லை என்றால் போர் களத்தில் தோல்வி உறுதி.. வீரர்கள் மட்டுமே போர்களத்தில் நின்று உயிர் பிழைக்க முடியும்.. வீர ஆன்மீகமே விவேகானந்தரின் முழக்கம்.. நாத இணைப்பா ? நாத துண்டிப்பா? என்ற கேள்வி வாழ்வா அல்லது சாவா என்ற கேள்விக்கு சமம்.. முடிவு யாருடைய கைகளில் என்பதை அறிந்ததே.. இத்தோடு நாதம் என்ற மெய் பொருளை விற்கும் கடையை மூடி விடலாம் என்று நினைக்கிறேன்.. ஏனெனில் கொள்வார் எவறும் இல்லை போல் தெரிகிறது.. பொய் பொருளை விற்கும் கடை ஒன்றை திறக்கலாம் என்ற யோசனை வருகிறது.. என்ன செய்வது.. வள்ளலாருக்கே அந்த நிலை என்றால் என்னை போன்றவர்களுக்கு இது எம்மாத்திரம் ???

1 comment:

  1. Migavum payanulla jeevanulla katturai nadha brumathil kalakka virubum adiyavargali yanum oruvan. Neevir vazhga valamudan

    ReplyDelete