Saturday 27 June 2015

பகுதி 15 - சிவ கலப்பு சிவ யோகத்தில் கதிர் ஆற்றல் காணல்

இன்றைய விஞ்ஞானிகள் கடவுள் துகள் என்றதை கண்டு பிடித்து இருக்கிறார்கள்.. அது இருக்கும் ஊடகம் செயல் படும் தன்மை,விதம் என்பதை ஆராய்ந்த அவர்கள், திடுக்கிடும் படியான ஓர் உண்மையையும் கண்டுபிடித்தார்கள்... ஆனால் சமுதாய அரசியல் முக்கியமாக மத காரணங்களால் வெளீயிட முடியவில்லை.. ஒரு மனிதனை இறைநிலைக்கு அடைய விடாமல் தடுப்பது மேல் கூறிய காரணங்களே.. மதங்கள் சமயங்கள் மார்க்கங்கள் ஆகியவற்றின் ஆசார சங்கல்ப விகற்பங்கள் எம்மை பற்றாதவண்ணம் காத்து அருள் புரிய வேண்டும் என்று வள்ளலாரின் சன்மார்க்க விண்ணப்பத்தில் உள்ள சில முக்கிய வரிகள்.. நோபல் பரிசு பெற வேண்டிய சத்திய வார்த்தைகள்.. இதை ஏற்று கொள்ள எவரும் இல்லை.. ஏன் சன்மார்க்கிகளே இல்லை.. இந்நிலையில் நிறைநிலை மனிதன் வருகை அவசியம் தேவை.. ஒரு கண்ணாடி குடுவையில் உள்ள காற்று முழுவதையும் நீக்கும் ஒரு நவீன கருவின் மூலம் ஒரு வருடம் முயன்று காற்று உள்பட எல்லா ஊடகங்களையும் நீக்கி விட்டோம் எனில் அதில் உள்ளே உள்ள சூனியத்தில் உள்ள, என்றும் எப்படியும் நீக்கமுடியாத ஒரு பொருள் உண்டு என்றால் அது தான் கடவுள் துகள்கள்.. அந்த கடவுள் துகள்களையே ஒரு ஊடகமாக கொண்டு நம் கண்களால் உற்று பார்த்தால் அந்த கண்ணாடி குடுவையின் உள்ளே மறு பக்கத்தை பார்க்க முடியும் என்று இருக்கும் பொழுது நம் கண்ணில் இருந்து வெளிப்படும் கதிர் என்ற ஆற்றலை சற்று நிதானமாக சிந்தித்துப் பார்ப்போம்... கடவுள் ஊடகத்தையே ஊடுருவி பார்க்கும் வல்லமை ஒரு கடவுள் ஊடகத்துக்குதான் உண்டு எனில் கடவுள் துகள், கண்ணின் கதிர் ஆற்றலில் உண்டு என்பதை மறக்கக்கூடாது.. பகுதி 14 ல் உள்ள திருவடி பயிற்சியில் உள்ள பெருமை இதன் மூலம் விளங்கும்.. இதன் மூலம் தெரிவது என்னவென்றால் ஒவ்வொரு உயிரின் கண்ணிலிருந்து புறப்படும் கதிர் ஆற்றல் இறைஆற்றலுடன் கூடியது.. அதனால் எல்லாமுடியும் என்றால் அது மிகையாகாது.. அதை உபயோகப்படுத்தக்கூடிய பேரறறிவு இல்லாமையால் சற்று அதன் பெருமை விளங்காமல் உள்ளது.. கண்ணில் இருந்து வரும் கதிர் ஆற்றல் வெளியே காணப்படும் பொருளில் விழுந்து காணப்படும் பொருளின் சாயலான எண்ணங்களாக சித்தத்தில் கலக்கிறது.. கடவுளின் துகள்களுக்கு எப்படி அழிவில்லையோ அப்படியே சித்தத்தில் கலந்துள்ள எண்ணங்களுக்கு அழிவில்லை.. அளவற்ற ஆற்றல் நமது சித்தத்தில் உள்ளது.. மிகுந்த இறையாற்றல் பெறுவதற்கான மூலப்பொருளாக சித்தத்தில் உள்ளது.. நிறை நிலை மனிதன் நோயற்ற வலுவான எவரும் வெல்லமுடியாத தேகத்தை பெற இந்த சித்தத்தை முறையாக பயன்படுத்துகிறான்.. தன் கண்ணிலிருந்து வரும் கதிர் ஆற்றலை உலகில் காணப்படும் பொருளில் வீணாக்காமல் தன் சித்தத்தையே கண்டு, சித்தத்தில் புதைந்து உள்ள எண்ண ஆற்றலை தன் பரிவு பார்வையால் அணு பிளவு செய்து இறை ஆற்றலை பெறுகிறான்... இறை சன்னிதானத்தில் மனிதன் மெய் மறந்த நிலையில் இறை நிலையோடு இருக்கின்ற பார்வை, சில ஆபத்தான சமயங்களில் மீளுவதற்காக தன் எண்ண சிந்தனைகளிலே மனிதன் வைக்கும் பார்வை இவைகள் சில உதாரணங்கள்.. அபிராமி பட்டர் அன்னை அபிராமி மேல் உற்றலில் ஓங்கிய பரிவு பார்வையினால் அளவற்ற தெய்வீக சக்தியை பெற்று அமாவாசையன்று வானில் முழு நிலவை காட்டும் வல்லமை பெற்றார்.. நிறை நிலை மனிதன் தன் கதிர் ஆற்றலால் தனக்குள் இருக்கும் பெரும் சித்த சக்தியை பெற்று மற்ற பூத நிலைகளிலும் வேண்டிய நேரத்தில் வேண்டிய வண்ணம் மாற்றும் வல்லமை உடையவன்.. பரிவு பார்வை என்பது பெரும் பாலும் கண்களை முடிய நிலையில் நடக்கிறது என்பது வியப்பான விசயம் அல்ல.. முனிவர்கள் ஒரு வரமோ சாபமோ இடும் பொழுது கண்களை மூடி பரிவு பார்வையால் தன் சித்தத்தை இயக்கி பேராற்றலை பெற்றே செயல் படுகிறார்கள்.. என் கண்களில் கதிர் நலம் இறைவனால் பெற்றேன் என்கிறார் வள்ளலார்.. உற்றலில் ஓங்கிய கதிர் நலம் பெற திருவடி பயிற்சியை பழக வேண்டப்படுகின்றனன்.. கண் வெளி பார்வை காட்டிலும் கண் உள் பார்வையில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.. தொடர்ந்து சிவ கலப்பு சிவ யோகத்தை கவனித்து வர, ஒரு பெரிய சிறந்த மாற்றத்திற்கு உங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment