Saturday 27 June 2015

உளவுகள் பகுதி நான்கு - இயங்குதலில் மட்டுமே வாழ்வு


இயக்குதல் இயங்குதல் என்ற இரண்டு சொற்களில் இரண்டு மெய் எழுத்துக்கள் தான் வித்தியாசம்.. 18 மெய் எழுத்துகளில் முதல் எழுத்து 'க்' இரண்டாவது 'ங்' என்பதில் 'க்' இயக்கும் கடவுள் சக்தியையும் 'ங்' இயங்கும் ஜீவ சக்தியையும் குறிக்கும்.. 'ங்' கை பிரித்தால் 'ர்' என்ற மெய்யும் ப் என்ற மெய்யுமாக பிரியும்.. 'ர்' என்பது 'ப்' ன் தலை கீழ் நிலை.. 'ப்' என்பது 'ர்' ன் நேர் நிலை.. 'ர்' என்ற மரண குழியிலே
உள் அமைந்த சக்தியாகவும் (potential energy or static energy) 'ப்' என்பது மரணக் குழியிலிருந்து வெளிப் பட்ட சக்தியாகவும் ( dynamic energy ) இணைந்து 'ங்' உருவானது.. 'ங்' என்பது உள் அமைந்த கடவுள் சக்தி,வெளிபட்ட உயிர் அல்லது ஜீவ இயக்கமாக தொடர்ந்து வருவதை குறிக்கும்.. முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் கடவுள் சக்தி தானாகவே எதையும் கொடுக்காது.. ஆனால் ஏது ஒன்றும் அந்த சக்தியை எடுத்து கொண்டால் தடையாக
ஒரு போதும் இருக்காது.. எல்லா உயிர்களும் கடவுள் சக்தியை வாங்கி கொண்டு இயங்குகின்றன.. இப்படி வாங்கி இயங்குவது தான் இயங்குதல் என பெயர்..
சக்தி, மூன்று நிலைகளில் இருப்பதை சற்று உற்று கவனித்தால் மட்டுமே நிறைநிலை மனிதனுக்கான ஆன்மீகத்தை புரிந்து கொள்ள முடியும்.. முதல் சக்தி மூலசக்தியான இயங்காத இயக்க சக்தியான கடவுள் சக்தி.. இடைபட்ட சக்தி என்பது பரிமாற்றம் அடைந்த இயங்கும் சக்தியான உயிர் சக்தி.. கடை சக்தி என்பது ஜீவ சக்தியின் இயக்க சக்தி.. இவற்றை முறையே கடவுள் சக்தி,இயங்கும் உயிர் (ஜீவ) சக்தி, உயிர் இயக்கசக்தி என அழைப்போம்.. இயங்கும் உயிர் சக்தி தன் இயங்குதல் சக்தியால் இறை சக்தியை வேண்டிய அளவு பெற்று தன் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற முனைகிறது. உயிர் இயக்க சக்தியானது இயங்கலில் தான் பெற்று கொண்ட சக்தியை இயக்கங்களை இயக்கி இயக்கி விரையமாகி முழுமையாக வற்றி போகும் நிலைக்கு வருகிறது.. அது ஈடு கட்ட ஒரு செயலை செய்கிறது.. எந்த இயக்கத்தையும் இயக்காத இயங்கும் தன்மையை பெறும் தூக்கம் என்பதே.. 
தூக்கம் என்பது ஒரு மனிதனை இயங்கும் தன்மைக்கு அழைத்து செல்லுகிறது.. மனிதன் இயலாத நிலையில் தூக்கத்தில் விழுந்து சக்தியை பெற தன்னை அறியாமலே ஏதோ ஒரு தன்னிச்சையான உயிர் அமைப்பு அவனை முதல் நிலையான கடவுள் சக்தி நிலைக்கு அழைத்து சென்று சக்தியை பெற வைக்கிறது.. தூக்கத்திற்கு பின் மனிதன் மீண்டும் செயலாற்ற தொடங்குகிறான்.. இது ஒரு சுழற்சி முறையாக நடந்து வருகிறது.. இயங்கும் தன்மையில் ஒரு மனிதன் தன்னில் உள்ளே சக்தி, ஊடுருவ ஏதுவாக எல்லா எதிர்ப்புக்களையும் இழந்து உள்வாங்கும் தன்மையில் தயார் நிலையில் இருக்கிறான்.. இயங்கும் நிலையில் உருவாகும் இந்த உள்வாங்கும் தன்மைதான் மிக மிக முக்கியமானது.. மூல சக்தியான கடவுள் சக்தியிலிருந்து சக்தியை கிரகிக்க இந்த உள்வாங்கும் சக்திதான் உதவுகிறது.. கடவுள் சக்தி கடல் போல.. கடல் யாருக்கும் நீரை வழங்காது.. ஆனால் உறிஞ்சி எவ்வளவு எடுத்துகொண்டாலும் தடை செய்வதில்லை.. அது போல் அளப்பரிய ஆற்றலை வழங்க தயார் நிலையில் கருணை கடலாக கடவுள் சக்தி உள்ளது.. உள்வாங்கும் சக்தியின் வேறுபாட்டினால் மட்டுமே ஆற்றல் வித்தியாசங்கள் ஏற்பட்டு உயிர்களில் பேதங்கள் ஏற்படுகிறது..
முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு..இயங்குதலில் உள்வாங்கும் சக்தி இரண்டு முறைகளில் கடவுள் சக்தியை பெறுகிறது.. ஒன்று தன்னிச்சையான முறையில் (unconscious state) .. மற்றொன்று இச்சையான முறையில்( conscious state ).. எவ்வளவு நுணுக்களை கையாண்டாலும் இந்த தன்னிச்சையான முறையில்,தூக்கமுறையில் ஒரு வரையறைக்கு உட்பட்டே கடவுள் சக்தியை பெற முடியும்.. தூக்கமுறையில் தூக்கத்தில் உள்ள வேறுபாட்டால் வித்தியாசமான ஆற்றலை பெற்று மனிதனுக்கு மனிதன் வேறு படுகிறான்.. வலியவன் எளியவன் என்ற வேறுபாட்டால் அராஜகமும் ஆதிக்க உணர்வும் ஏற்பட வழி ஏற்படுகிறது.. தர்மம் சீர் குழைய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.. ஆனால் இச்சையான முறையில், முறையான தவம்,தியானம் மூலமும் நாத,திருவடி முயற்சிகள் மூலமும் அளவற்ற கடவுள் சக்தியை பெற்று மாமனிதனாகவும், நிறைநிலை மனிதனாகவும் வாய்ப்பினை பெறும் பொழுது தர்மம் காக்கப்படுகிறது.. நிறைநிலை மனிதர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் ஆன்ம நேய ஒருமைபாட்டுரிமையில் எண்ணமும் செயலும் ஒன்று போலவே இருக்கும்.. மூடி மறைக்க வேண்டிய ஒன்றை வெளிபடையாக வரும் பொழுது தகுதியற்றவர்கள் கைகளில் சிக்கி உலகம் அழிந்து விடாதா என்ற கேள்வி எழலாம்.. கவலை வேண்டாம்.. தகுதியற்றவர்களின் அதர்ம எண்ண அலைகள் அவர்களுக்கு பாதகமாக செயல் பட்டு தனக்கு தானே அழிவை தேடி கொள்வார்கள்.. இலங்கை இராவணனை போல.. இயங்குதலில் இச்சையான முறையில் எவ்வாறு அளப்பரிய ஆற்றலை பெறலாம் என்பதை அடுத்த பகுதியிலே பார்க்கலாம்.. அவ்வளவே..

No comments:

Post a Comment