Saturday 27 June 2015

பகுதி 13 - சிவ கலப்பு சிவ யோகத்தில் பரிவு பார்வையும் பிரிவு பார்வையும்

அணுவை பிளந்து பேராற்றல் வெளிபட செய்வது அறிந்ததே.. தேகத்தில் திசுக்கள் தான் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது.. திசுக்களின் எண்ணிக்கையும் தரமும் கூட கூட தேகமும் மற்ற பூதங்களும் தன் ஆற்றலை கூட்டிக் கொள்கிறது.. திசுக்களின் தரத்தால் நிறைநிலை மனிதன் அதிஅற்புதங்களை உலகில் செய்கிறான்.. உற்றல் என்ற ஓர் உயர் பயிற்சி எவ்வாறு அதற்கு உதவுகிறது என்பதை பார்ப்போம்.. பிரபஞ்ச பேராற்றல் நாதம் அல்லது கதிர் அலைக்களாக இயக்கதிற்கு வருகிறது... நாதம் என்பது ஒலி...கதிர் என்பது ஒளி... இரண்டும் சிதைந்து ஒழுங்கற்ற தன்மையாக ஓசையாகவும் (சப்தம்) வெளிச்சமாகவும் மாறுகின்றன.. ஒழுங்கான நாதமும் கதிரும் தெய்வதன்மை வாய்ந்தது.. ஒசையும் வெளிச்சமும் அசுர தன்மை வாய்ந்தது.. கதிரால் தேகத்தில் நுண்ணிய பகுதிகள் உருவாகிறன... நாதத்தால் தேகத்தில் கடின பகுதிகள் உருவாகின்றன.. இந்து கடவுளின் கைகளில்
சங்கு (ஒலி) சக்கரம் ( ஒளீ ) உடுக்கை போன்றவைகள் நாதம் கதிர் இரண்டின் பெருமையை விளக்க உள்ளன.. கதிர், அறிவு புத்தி திசு உற்பத்திக்கும், நாதம், தசை எலும்பு மற்றும் கடின பகுதிகளின் உற்பத்திக்கும் உதவுகின்றன.. நிறைமனிதன் நாதம் விந்து (கதிர் அல்லது ஒளி) பயிற்சி கலைகளில் மேன்மை பெற்று இருக்கிறான்.. பகுதி 12 ல் விரல்கள் வளர்ந்த விதத்தை காண்போம்.. கண்கள் மனதின் பொறி.. அதில் இருந்து கிளம்பும் உணர்வு என்ற ஆற்றல் வெளியே செல்லும் பொழுது ஒளி என்ற உணர்வாகவும் வெளி வடிவங்களில் பட்டு சிதறி வெளிச்சமாகவும் பிரிகிறது.. அந்த வெளிச்சமே ஒழுங்கற்ற எண்ணமாக மனதில் படிகிறது.. அந்த உணர்வே எண்ணத்திற்கு வலுகொடுத்து மனதில் நிலை நிறுத்துகிறது... சரியான உணர்வோடு கூடிய எண்ணம் மனத்தை விட்டு என்றும் அகலாது.. இதை நினைவில் கொள்ளவேண்டும்.. கண்களில் இருந்து வரும் ஆற்றலை முறைப்படுத்துவது உயர்ந்த பயிற்சி.. உற்று பார்க்கும் கண்களின் ஆற்றல், வெளிச்சத்தில் வீணாகாமல் ஒளி அல்லது கதிர் ஆற்றலாக மாறி விரலுக்கு செல்லும் பொழுது விரலுக்குள் திசு பிளவு ஏற்பட்டு திசுக்களின் அதிக எண்ணிக்கையால் விரல் வளர்ச்சி அடைந்துள்ளது.. ஒழுங்கான ஒளி நிலையில் உணர்வோடு பார்க்கும் பார்வை பரிவு பார்வை.. ஏனையவை பிரிவு பார்வை, சிதறி போகும் வெளிச்ச
பார்வை..அது வெளியே எச்சமாக எண்ணமாக மாறி வீணாகிறது.. பரிவு என்றால் பரி+வ்+உ என கொண்டால் பரி என்பது அதிகமானதும் 'வ்' என்பது விண் என்ற ஆகாயமும் 'உ' என்பது உணர்வையும் மொத்தத்தில் அதிக பிரபஞ்ச சக்தியை(ஆகாய உணர்வு) குறிக்கும்.. பிரிவில் பிரி என்பது பிரிந்து போன
என பொருள் கொள்ளும்.. உற்று பார்க்கும் உற்றலில் பரிவு பார்வை வெளிப்படுவதால் அந்த பார்வைக்கு ஒன்றினிக்கே திசு பிளவு ஏற்பட்டு தேகமும் மற்ற பூதங்களும் வலுவடைகின்றன.. இதை
திருவடி தீட்சை,கனல் தீட்சை என்று சித்தர் வழி குருமார்கள் கொடுக்கின்றனர்.. திசு பிறப்பு என்பது திசு பிளவின் மூலம் நடைபெருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.. உற்றல் என்ற பரிவு,கருணை, உணர்வு பார்வையில் பயிலுவதை காட்டிலும் உயர்ந்த யோகம் எதுவும் இல்லை போல் தெரிகிறது.. வாசி யோகத்தில் அந்த பார்வையின் பங்கு மிக முக்கியம்.. பரிவு பார்வை இல்லாத வாசியோகத்தில் பிரிவு பார்வையினால் சக்தி விரையமாகி தேகம் மிக உஷ்ண நிலை அடைந்து தேக திசுக்கள் இறந்து தேகம் நலிவடைகிறது.. நீங்களாகவோ ஒரு நல் வழிகாட்டியின் துணையோடு பரிவு பார்வையால் புறதேகத்தையும் உள்தேகத்தையும் பார்க்க பழகிக் கொண்டால் ஆரோக்கியத்திக்கு பஞ்ச மில்லை.. பரிவு பார்வையால் நிறைமனிதனுக்கு நோய் என்பதும் இல்லை, மரணம் என்பதும் இல்லை.. தினமும் அமைதியாக உட்கார்ந்து தேகத்தின் ஒவ்வொரு பகுதியையும் உற்று பார்க்க தொடங்குங்கள்.. அரை மணி நேரம் கழித்து உயரத்தையும் எடையையும் சரி பாருங்கள்.. இரண்டும் கூடியிருந்தால் பரிவு பார்வை பயிற்சியை சரியாக செய்து இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.. இந்நிலை உயர உயர உணவின்றி தேகம் வாழும் நிலையை அடைகிறது.. தேகம் சுத்த தேகம் ஆகிறது.. சுத்த தேகத்தில் ஆரோக்கியமும் பலமும் கூடிக் கொண்டே போகிறது.. நிறைநிலை மனிதனை வெல்ல எவரும் இல்லை எனலாம்.. பஞ்ச பூதங்களை சரியாக புரிந்து கொண்ட வகையில் பரிவு பார்வையின் பயிற்சியால் வலுவான சுத்த தேகம் பெற சுலபமாக சாத்தியமாகிறது..இனி வரும் பகுதிகளில் நினைவு பகுதிகளையும் புத்தியையும் வலுபடுத்தும் வகையினை பார்ப்போம்..

No comments:

Post a Comment