Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி ஐந்து


கரை காணல் கறை காணல்
*******************************************
உலக கல்வியை கற்றல் என்ற செயலில் ஜீவ ஆற்றல்,கடவுள் ஆற்றல் அற்று அதாவது நீங்கி விடும் என்பதை முன்பு பார்த்தோம்.. அப்படி என்றால் கடவுள் ஆற்றல் பெருகும் வழி ஒன்று உளதா என்ற கேள்வி எழலாம்.. நிச்சயமாக உண்டு.. உலக கல்வி எண்ணங்களையும் எண்ண ஆதிக்கங்களையும் பெருக்கிக் கொண்டே போகும் ஓதப்படும் கல்வி ஒரு ஓதும் கல்வி.. மாறாக தன்னையும் தன்னுள் உறைந்துள்ள பேரறிவையும் புத்தியையும் கற்று தருவது ஓதாத கல்வி.. இதனை எந்த உலக கல்வியும் குருவும் கற்று தர முடியாது.. வழிகாட்டிகளால் சுட்டி காண்பிக்கவே முடியும்.. 
ஓதாத கல்வி கற்றுக் கொடுப்பது கலவி.. கல + வி ..வி என்ற விண்ணின் பேரறறிவோடு கலப்பது.. அது உலக கல்வியை போல் சிற்றறிவை அறிந்து அடைந்து அதிலே அடைத்து கொள்ளும் சிறை அல்ல.. எதை ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ அதை ஒன்றை அறியும் பேரறிவே பிரபஞ்ச கலவி.. கல்வி என்பது விண்ணில் கல்லாய் ( கற்கள் போல ) ஆவது.. சொல் வித்தைகளால் ஜோடிக்கப் பட்ட வாக்கியங்கள் அல்ல இது.. உண்மையானது தான் இது.. அந்த ஓதாத கல்வியின் முடிவான தகுதி நிலை தன்னில் தானாய் நிற்கும் தகுதி.. எல்லை என்ற ஒன்றை வரையறுக்க முடியாத தன் நிலை எல்லை இல்லா பிரபஞ்சதோடும் அதன் பேரறிவோடும் கலக்கும் தகுதியை பெறுகிறது.. எல்லைக்கு உட்பட்ட எண்ணங்கள் கூடிய தன்னிலை கெட்ட நிலை, ஓதாத கல்விக்கு தகுதி இல்லை.. தன்னிலையான தன் இருப்பு நிலை என்பதில் எண்ணங்களே இல்லையென்றால், எப்படி என் குடும்பம் என் சமுதாய தொடர்பு வைத்து கொள்வது என்ற கேள்வி எழலாம்.. மீண்டும் மீண்டும் கூறுவது இதுதான்.. எண்ணங்களே இல்லாத நிலை என்பது எண்ண ஆதிக்கம் இல்லா நிலை ஆகும்.. இங்கு ஆதிக்கமே பிரதானமாக சொல்லப்படுகிறது... கடவுள் சன்னதியில் கடவுளே எல்லோரையும் காப்பாற்று,என்றால் அன்பின் விளைவால் தன்னிலை என்ற தன் இருப்பு தன்மையில் ஒருவன் இருக்கிறான் என்று அர்த்தம்.. மாறாக கடவுளே என்னை மட்டும் காப்பாற்று, என்னை மட்டும் விசேசமாக சலுகைகள் கொடுத்து காப்பாற்று என வேண்டுவது எண்ண ஆதிக்கம்.. அதில் எல்லைகளை உருவாக்கிறான்.. ஆனால் எல்லோரையும் காப்பாற்று என வேண்டுதலில் எல்லை கடந்த நிலைக்கு வருகிறான்.. இங்கே கூறுவது எல்லாம் அன்பிலே நிறைந்து எல்லைகளை கடந்து தன் இருப்பிலே திகழ்ந்து பேரறிவோடு இணையும் தன்மை... இதில் அக்கரை என்ற அருள் கரையை அடைய முடியும்.. இல்லையேல் கறை என்ற அழுக்கு,இருள்,களிம்பு மட்டுமே சூழ்ந்து சூழ்ந்து கலங்கி நிற்க வேண்டியது தான்..
சரி அப்படி வாசி யோகத்தில் தன்னில் தானாய் நிற்கும் நிலை அடைகிறோமா ? உற்று கவனியுங்கள்.. நான் அறிந்த இடங்களில் எல்லைகளை வரையரைக்கும் செயலே நடக்கிறது.. எல்லை கடந்த நிலை உருவாவதில்லை.. தன் இருப்பு தன்மைக்கு போகிறார்கள்.. உண்மைதான்.. ஆனால் தன் இருப்பு தன்மையை சுற்றி மிக மிக குறுகிய வட்டத்தையும் சேர்த்தே அல்லவா போட்டு விடுகிறார்கள்.. வட்டம் போட்ட எதில் ஒன்றிலும் அன்பு இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. பரந்த நிலையில் மட்டுமே அன்பு இருக்கும்.. மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காது, என் தோட்டத்து மல்லிகை மட்டுமே மணக்கும் என்ற குறுகிய வட்டம் போட்டுக் கொண்ட மதவாதிகள் அன்பை மறந்த தீவிர வாதிகளாகவே இருக்கிறார்கள்.. இப்படி வட்டம் போட்டுக்கொண்ட வாசியோகிகளோ அன்பை செயலாற்ற முடியாத பயங்கர மித வாதிகள்.. இப்படி செயலாற்ற முடியாத மிதவாதிகள் பெருகி விட்ட நிலையில் தான் உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு நம் நாட்டில் உள்ளனர்.. மிதவாதத்தை தூண்டும் பயிற்சி ஒன்று முறைதவறி கற்றால் உயிர் பிழைக்க தூக்கி எறியுங்கள்.. பட்டதெல்லாம் போதும், இனி பட முடியாது துயரம் என்றார் வள்ளலார்.. ஆக்கமும் ஊக்கமும் தன் வேலையிலும், வீட்டிலும் நாட்டிலும் தர வில்லை யென்றால் அது முறை தவறிய பயிற்சி.. நான் ஆசை அற்றவன், உலக விசயங்களில் பந்த படாதவன் என முடங்கி கிடக்கும் வாசி பயிற்சியாளன் முறையற்ற பயிற்சியில் ஈடு படுபவன்.. அளவற்ற பிரபஞ்ச ஆற்றலை முறையான வாசியோகத்தில் பெற்ற ஒரு வாசி யோகி அன்பே நிறைந்து நின்று செயல் வடிவாய் நிற்பவன்..
தன் மூச்சை இயக்கி இயக்கி தன் சக்தி இழந்து செயல் இழந்து போகும் முறையற்ற வாசி பயிற்சியினையும், தன் மூச்சுக்கு இயங்கி இயங்கி சக்தியும் அன்பும் பெருகி பெருகி செயல் வீரனாக்கும் முறையான வாசிபயிற்சியினையும் உற்று கவனிக்க வேண்டுகிறேன்.. நாதமும், வாசியில் இயங்களும்,ஒரு கல்வியும் கற்று தராது.. மாறாக அனைத்து கல்வியும் புரிந்து கொள்ளும் உணர்வதற்கான கலவி நிலை தரும்..
இதில் நாதம் கலவி (கல்வி அல்ல) நிலையை மிக விரைவு படுத்தும்..ஆனால் கற்பிப்பவன், இயக்குபவன் நிலையில் இருந்து,கற்பவன் இயங்குபவன் நிலைக்கு வர பயிற்சியாளன் மிகவும் சிரமப்பட வேண்டியதிருக்கும்.. வாசி யோகம் சற்று சுற்று பாதையில் அந்த சிரமத்தை குறைக்கும்.. வாசி யோக குறைபாடுகளை சொல்லும் போது நேர்பாதைக்கான வழியும் தென்பட தொடங்குவதால், சில குறைபாடுகளை சொல்லுவதால் அதை ஒரு குறையாக கொள்ள வேண்டாம்.. நாதத்தை மிக எளிமையாக சொல்லமுடியும்.. ஆனால் அதில் இருத்தலில் சற்று சிரமம்.. குருவின் தகுதி தேவை இல்லை.. ஆனால் வாசியோகத்தில் சரியான தேர்ச்சி பெற்ற குருவின் தகுதி அவசியம் தேவை.. அதனால் தான் நாதத்தை தேர்ந்து எடுப்பது மிக புத்திசாலித்தனம்.. நாதத்தில் தேர்ச்சி பெறாத குருவால் எந்த பாதிப்பும் இல்லை.. நாதத்தில் புரியாமையும் சற்று கால தாமதம் தவிர எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை.. தகுதி இல்லாத வாசி யோக குருவால் மரணம் கூட நேரிடலாம் .. தேர்வு உங்கள் கைகளில்..

No comments:

Post a Comment