Saturday 27 June 2015

பகுதி 9 - சிவ கலப்பு சிவ யோகத்தில் மனம் எனும் நெருப்பு பூதத்தில் எண்ணங்கள்,உணர்வுகள்..

ஆகாயத்தில் மற்ற எல்லா பூதங்களும் நிலை கொண்டு இருப்பதால் ஆகாய சக்தியான மகா பிரபஞ்ச சக்தி எல்லா மற்ற நான்கு பூதங்களில் இருக்கிறது.. ஆனால் வெவ்வேறு பயன்பாட்டிற்காக அவை இருக்கின்ற நிலைதான் வேறு வேறு.. அப்படி இருக்கவேண்டிய அவசியமும் இருக்கிறது.. அந்த
அந்த பூதங்களின் சக்தியின் விகிதாசார தன்மைகள் மாறுப்பட்டால் மாறுபாடு அடைந்த பூதம் செயல் இழந்து விடும்.. உதாரணமாக ஜீவ சமாதி அடைந்த ஜீவ முக்தர்கள் நீர் என்ற தேகம் செயல் இழந்ததால், உடலில் இயக்கம் கெட்டு குழியில் முடங்க வேண்டிய நிலை வந்தது.. நீர் என்ற பூதத்தின் அளவில்லாத சித்த சக்தி துண்டிக்கப் பட்டதால் தேகம் இயக்கம் இழந்தது.. இந்த குறை, நிறை மனிதனிடம் இல்லை.. எல்லா பூதங்களிலும் சமசீர் ஆதிக்கம் பெற்றதால் எல்லா நிலைகளிலும் வல்லமை உடையவனாக இருக்கின்றான்.. சமசீர் ஆதிக்கம் கெட வாய்ப்புகள் எங்கே நடக்கிறது ?? அது நடு பூதமாகிய மனதில் தான்.. நீர் நிலை வடிவம் ஆன எண்ணங்களும் காற்றின் தூய உணர்வுகளும் சேர்ந்த கலவை தான் மனதில் இருக்கிறது... மனதில் எண்ணங்களை நீக்கிவிட்டால்
மனம் உணர்வு மயமாகி விடும்.. பரவச நிலை அடையும்.. மனதில் உணர்வு நீங்கி எண்ணம் மட்டும் இருந்தால் புத்தி நிலையின் ஒழுங்கு தன்மையான உணர்வு இன்மையால் மனம் ஒழுங்கற்ற நிலையில் பைத்தியம் போல் தோன்றும்.. உணர்வு பேரறிவின் ஒழுங்கு தன்மை உடையது.. எண்ணம் நீரின் ஒழுங்கற்ற தன்மை உடையது.. ஒழுங்கிற்கும் ஒழுங்கின்மைக்கும் இடையேயான போர் நடக்கும் இடம் தான் மனம்... அங்கே பேரறிவின் விழிப்பு நிலை இருந்தால் ஒழுங்கு வெல்லும்.. இல்லையேல் ஒழுங்கின்மை வெல்லும்.. மனதில் உணர்வு பலப்படுகின்ற பொழுது விழிப்பு நிலை
பலப்பட்டு மனதில் ஒழுங்கும் உண்மையும் ஓங்கும்.. எண்ணம் பலப்படும் பொழுது ஒழுங்கின்மையும் பொய்மையும் மாயையும் ஒங்கி நிற்கும்.. இங்கு குடிகாரனின் உணர்வு கெட்ட நிலையில் எண்ணத்தின் தாக்கம் மேலோங்க கண்டபடி உளறுகின்றதை உற்று கவனிக்கவும்.. சரி இப்பொழுது புத்தியின் உணர்வு நிலை மனதில் மேலோங்க வேண்டிய அவசியத்தை உணருகிறோம்.. வெறும் எண்ணங்களின் மயங்கிய நிலையை விட்டு தெளிந்த நிலையாகிய உணர்வு நிலைக்கு வர எண்ண வழி.. மிகப்பெரிய தியானவழி ஒன்று இருக்கிறது.. வியாபார நோக்கத்தில் உதவாத தியான பயிற்சிகளை கற்று கொடுத்து எதார்த்த நிலையான அந்த மிக பெரிய தியானத்தை மறைத்து விட்டார்கள்.ஓரிருவர் வெளி
படுத்தினாலும் வியாபார தியான பயிற்சிகளினால் அலட்சியப்படுத்த பட்டு விட்டது.. அது என்ன ? உணர்வு உண்ணும் பொழுது உணவின் சுவை உணர்வோடு இருந்து பாருங்கள்.. நடக்கும் பொழுதும் வேலைகளை செய்யும் பொழுதும் தேக உணர்வோடு இருந்து பாருங்கள்.. ஏன் கடவுளை தொழும் பொழுது இறை உணர்வோடு இருந்து பாருங்கள்.. சற்று உற்று பாருங்கள்.. நாம் எந்த அவலநிலையில் இருக்கின்றோம் என்று.. 60 வினாடிகளில் 10 வினாடி கூட நாம் உணர்வோடு இருப்பதில்லை.. ஒரு மணி நேரத்தில் 3 நிமிடங்கள் கூட உணர்வோடு இருப்பதில்லை.. நாம் இதற்கெல்லாம் வெட்க படுவதே இல்லை.. ஆனால் உலகையே வெல்ல வேண்டும் என்ற ஆசைக்கு அளவே இல்லை.. அனைத்திற்கும் ஆசைபடலாம் பரவாயில்லை.. ஆனால் உணர்வோடு இருந்து தெளிந்த நிலையில் உருவாகும் புத்தியை பெருக்காவிட்டால் என்ன பலன் ? தூங்கின்ற பொழுதும் தூங்கும் உணர்வோடு இருக்கும் விழிப்பு நிலைதான் தூங்காமல் தூங்கும் நிலை.. எண்ண ஆதிக்கத்தை ஒழிக்க போராடி எண்ண ஆதிக்கத்தை ஒரு நாளும் ஒழிக்க முடியாது.. உணர்வோடு இருந்து உணர்வை பெருக்கினாலே போதும் எண்ண ஆதிக்கம் குறைந்துவிடும்.. உணர்வோடு இருந்து பாருங்கள் காற்று என்ற புத்தி என்ற பூதம் வெற்றிக்கான பாதைக்கு சுலபமாக மனிதனை அழைத்து செல்லும்.. முன் பகுதிகளை படியுங்கள் பின்பகுதிகள் சுலபமாக விளங்கும்.. சிவ கலப்பு சிவயோகத்தில் நிறை மனிதன் ஆகி எல்லா அற்புதங்கலையும் செய்யும் தகுதி ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதை மறக்கக்கூடாது..

No comments:

Post a Comment