Saturday 27 June 2015

பகுதி 5 - சிவ கலப்பு சிவ யோகத்தில் தனி தனி பூதங்களின் இயல்பு

சிவ கலப்பு சிவ யோகத்தில் எண்ணம் உணர்வு இரண்டையும் சரிவர அறிந்தால் மட்டுமே யோகத்தில் மேன்மை 
பெற முடியும்.. உணர்வு என்பது என்ன ? நம்மிடம் இருக்கின்ற ஆகாய நிலையில் இருந்து வருகின்ற பேர் ஆற்றல் உணர்வாக நம் தேகம் உணரும் வகையில் புத்தி என்ற காற்று என்ற பூதத்தில் தெரிய வருகிறது.. தேகம் நேரடியாக ஆகாய சக்தியை அறியும் வாய்ப்பு பக்குவபடாத நிலையில் இல்லை.. தேகம் புத்தியின் உணர்வு மூலம் மட்டுமே ஆகாய தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறது.. நிலம் அல்லது மண் என்ற தேகம்,நீர் என்ற இரு பூதங்களும் உருவ நிலையை சார்ந்ததால் உருவ அமைப்பு கொண்டதால் அவை உருவ அமைப்புகளையே அதிகம் நாடும்.... இந்த உருவ நிலைகளின் தன்மைகள் அறிய வேண்டியது மிக மிக முக்கியம்.. இவை அளவில்லாத பிர பஞ்ச சக்தியை கவர்ந்து 
தன் உருவ அமைப்பில் முடக்கி வைத்து இருக்கிறது.. சக்தியின் செயல் திறனை ஒரு குறுகிய வட்டத்தில் வைத்து இருக்கிறது.. எவ்வளவு பேர்ஆற்றல் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகளின் அணு பிளவில் அறியலாம்... அப்படி பல யுகங்களாக குவிக்கப் பட்ட சக்தியின் அமைப்பே பூமி சூரியன் மற்ற கோள்கள்.. இவைகள் புறம் என்று சொல்லுகிறோம்... இந்த புறத்தை எதிர் கொள்ளவே அதற்காக அமைக்கப்பட்ட தேகம் என்ற பூதத்தை தன்னை விட்டு விலகாமல் பார்த்து கொள்கிறான் நிறை மனிதன்.. அதனால் தான் தேகம் இழந்த கடவுள் செய்ய முடியாததை,அதை செய்யும் ஆற்றல் நிறை மனிதனுக்கு உண்டு.. இறைவன் ஏன் 
தேகத்தை இழந்தான் என்பதும் நிறைமனிதன் தேகத்தை இழக்காத இரகசியமும் சிவ கலப்பில் தெளிவாக தெரிய வரும்.. இப்படி குவிந்து போன சக்தியை, முடங்கி தேகத்தில் செயலற்று போகாமல் இருக்கவே பரவி நிற்கும் ஆற்றலான காற்று என்ற பஞ்ச பூதம், மூச்சாய் தேகத்தில் ஓடி குவிந்த தேக சக்தியை செயலற்று முடங்கிவிடாமல் பரவும் ஆற்றலை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.. மூச்சின் முக்கியம் எப்படி என்பது இப்பொழுது புரிந்திருக்கும்.. பஞ்ச பூதங்களில் நீரும் காற்றும் இயக்கசக்தி உடையது... நீர் தேகத்தையும்,காற்று பிரபஞ்ச சக்தியையும்,இயக்க கூடிய தன்மையில் உள்ளது... நீர் காற்றுக்கு இடைபட்ட மனம் என்ற பஞ்ச பூதத்தில் அழுத்தம் இல்லாத அருவ நிலை பிரபஞ்ச சக்தி இயக்கமும்,அழுத்தம் பெற்ற உருவ நிலை நீர் சக்தி இயக்கமும் கலந்த கலவையான எண்ணம் இருக்கிறது... இப்பொழுது எண்ணத்தின் தன்மை அரு உருவமாக இருப்பது மிக தெளிவாக உள்ளது.. நமசிவய என்ற ஐந்து பூதங்களில் நம இரண்டும் உருவமாகவும் சி என்பது அரு உருவமாகவும் வய என்ற இரண்டும் அருவமாகவும் இருப்பது இப்பொழுது நன்கு விளங்குகிறது.. சி என்ற பூதத்தில் அருவ உருவ கலப்பட சக்திகள் இருப்பதால் அதுவே முரண்பாடாய் உள்ளது.. அந்த முரண்பாடு விஷமாக வடிவெடுத்து முற்றி ஒரு நிலையில் ஏனைய பூதங்களையும் அழித்து மரணத்தை விளைவிக்கின்றது.. சி என்ற ஒழுங்கற்ற எண்ணம் கலந்த மனமே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்... அந்த ஒழுங்கற்ற எண்ணத்தை செம்மை படுத்தவே மதங்கள் மார்க்கங்கள் வந்தன.. இன்றைய மதம் படுதோல்வியை அடைந்து கொண்டு இருக்கிறது.. மனமது செம்மையானால் மந்திரம் இல்லை மார்க்கம் இல்லை என்பர்.. 
எண்ண முரண்பாடுகளை நீக்கினால் மனம் செம்மை அடைந்துவிடும், சுத்த மனம் ஆகிவிடும்.. செம்மை அடையும் 
வழியை பின் பகுதிகளில் பார்க்கலாம்...

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அன்பரே!!!

    ஆகாயம் + ஆகாயம் = ஆன்மா

    ஆகாயம் + காற்று = மனம் (மனதின் ஒரு அங்கம்)
    ஆகாயம் + நெருப்பு = புத்தி (மனதின் ஒரு அங்கம்)
    ஆகாயம் + நீர் = சித்தம் (மனதின் ஒரு அங்கம்)
    ஆகாயம் + நிலம் = அகங்காரம் (மனதின் ஒரு அங்கம்)

    ஆனால் புத்தியை காற்று என்றும் எண்னத்தை நெருப்பு என்றும் நீங்கள் கூறுகிறீர்கள்.... விளக்கம் தேவை.

    ReplyDelete