Saturday 27 June 2015

பகுதி 6 - சிவ கலப்பு சிவயோகத்தில் ஆகாய அறியும் காற்றின் புத்தியும்

சிவ கலப்பு சிவயோகத்தில் நிறைநிலை மனிதன் எல்லா பூதங்களையும் சமநிலையில் சீராக பாவித்து அதில் ஆளுமை கொள்ளும் திறமை உள்ளவன்... நிறை நிலை மனிதனுக்கு நாமும் முயலுவதால் பஞ்ச பூதங்கன் தன்மையை அறிந்து அதில் ஆளுமை கொள்ள முனைய வேண்டும்... ஆகாய பூதத்தின் தன்மையாகிய அறிவின் நிலையை அறியலாம்.. பிரபஞ்ச சக்தியால் நிரம்ப பட்ட ஆகாயம் அறிவு மயமாய் உள்ளது.. அது விழிப்பு மயமாய் உள்ளது..ஏக அறிவான விழிப்பே அதன்
இயல் நிலை...எந்த அறிவை பெற்றால் அனைத்து அறிவுகளை பெற முடியுமோ எது காயத்ரி மந்திரம் அடைய முனைகின்றதோ, அந்த பேரறிவு இல்லையேல் ஆகாய நிலை தாங்கி நிற்கும் மற்ற
நான்கு பூதங்களும் இல்லை... விழிப்பு நிலை என்ற பேரறிவை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ஆன்மீகத்தில் வேறு எதுவும் புரியவே புரியாது.. எல்லா மதங்களில் உள்ள ஞானிகளாக 
கருதப்படுகின்றவர்கள் இந்த விழிப்பு என்ற பேரறிவை அறியாததால் உண்மை நிலை அறியாது மிகவும் தடுமாறுகின்றார்கள்.. வள்ளலார் வழியில் சொன்னால் பெரும் பாலும் பிதற்றல்களோ இந்த மத கருத்துக்கள் என கருத வேண்டியதிருக்கின்றது.. சில உண்மை வழிகாட்டிகள், தம்மை மதங்களில் இணைத்து கொள்வதில்லை.. விழிப்பு நிலை என்பது ஏக அறிவு,ஒன்றான அறிவு,பிரபஞ்ச சக்தியின் வெளிபாடு,ஓர் பேரறிவு என்பதை மறக்கவே கூடாது.. மாயைகள் பேரறிவில் இடம் இல்லை.. துளிகூட இடம் இல்லை.. மயக்கங்கள் பொய்மை,களங்கங்கள்,குறைபாடுகள் என கருதப்படும் துன்பங்கள் துளி அளவு கூட இல்லை.. விழிப்பு நிலை நோக்கிய பயணமே ஆன்மீகம்.. அதற்கான ஒரு சுலபமான உளவு ஒன்றை பெற்ற நாம் அந்த பேரறிவு இன்மையால் பயன் பெற முடிய வில்லை.. ஏன் அந்த பேரறிவு என்ற விழிப்பு இன்மையால் தேகம் சொத்து சுகம் ஊர் உலகம் உடைமைகள் எதுவுமே மரணம் என்றததின் மூலம் நிரந்தர சொந்தம் கொண்டாட முடியவில்லை.. பாவம் மனிதன்.. அனைத்து பாவங்களையும் தூள் தூளாக்கும் அந்த விழிப்பு நிலை செம்பொருள் ஆக கருதப்பட்டது.. செம்பொருளை ஒரு சிவந்த பொருளாக அர்த்தம் கொண்டு சிவந்த இரத்தாலே பாவ மன்னிப்பு கிடைக்கும் என்று திசை மாறி கிருஸ்த்தவர்கள் வீணாய் போய் விட்டனர்.. எதையும் சீர் படுத்தும் செம்மை படுத்தும் அச்செம்பொருள் சிவப்பு வண்ண பொருள் அல்ல..வண்ணங்களில் சிவப்பு வண்ணம் விழிப்பு நிலை உணர்த்தும் வண்ணம்.. அவ்வளவே.. விழிப்பு நிலை உந்தலிலே இயங்கும் இயக்கமே புத்தி என்ற காற்று என்ற பூதம்... காற்றை போல இது நம் கண்ணிற்க்கு தெரியாது.. வெளிக்காட்டாது மறைந்து சதா உதவும் இந்த புத்தி இல்லையேல் ஒரு அடி கூட நாம் ரோட்டில் வண்டி ஓட்ட முடியாது.. இந்த புத்தியில் மேன்மை அடையாததால் முடிவில் மரணம்..புத்தியின் மேன்மை, விழிப்பின் செம்மையில் மட்டுமே கிடைக்கும்.. புத்திவான் பலவான்.. 30 கோடிமக்களை 3000 வெள்ளையர்கள் அடக்கி ஆண்டது இந்த புத்தியால் மட்டுமே.. இந்த புத்தியின் மேன்மை யால் இனிமேல் நிறை மனிதன் இந்த பூமியில் தர்மத்தை நிலை நிறுத்துவான்.. ஏனெனில் மற்ற பூதங்களை போல் ஆகாயம் என்ற பேரறிவிலும் காற்று என்ற புத்தியிலும் மிக பெரிய வல்லமை பெற்றவன்.. மனம் என்ற பூதத்தில் நாம் பயிற்சி தொடங்கும் பொழுது இந்த பேரறிவின்சிறப்பு
நன்கு தெரிய வரும்.. நொடிக்கு நொடி நேர் நிலை விட்டு விலகியதை சுட்டி காட்டி பயணத்தை விரைவு படுத்தும் இந்த பேர் அறிவு நிகழ் கால சிவ நிலையே.. ஏனைய அனைத்தும் இறந்த கால
எண்ணங்களால் சூழப்பட்ட சவநிலையே.. இதை என்றும் நினைவில் கொள்க..நிகழ் கால சிவ நிலையில் இருந்தால் தோல்வி என்பதே இல்லை.. இது சத்திய மானது.. மிக பெரிய மாற்றத்திற்கான சிவ கலப்பு சிவ யோக பயிற்சிகளை இனி வரும் பகுதிகளில் படிக்க தவறாதீர்கள்..

No comments:

Post a Comment