Sunday 28 June 2015

வாசி யோக இரகசியங்கள் பகுதி எட்டு


அதி வலு ஊட்டும் அக்னி கலை
**********************************************
இலட்சிய எண்ணங்களுக்கு சூரிய கலையால் வலு ஊட்டி ஏனைய எண்ண ஆதிக்கத்திலிருந்து விடு பட்டு, இலட்சியத்தை நோக்கிய தடையற்ற பயணம் பற்றி பார்த்தோம்.. நிறை நிலை மனித நிலை,கடவுள் நிலை போன்றவை மிக உயர்ந்த இலட்சியம்.. அப்படி மிக பெரிய இலட்சிய எண்ணங்களுக்கு அதி வலு ஊட்டும் உளவு ஒன்று தேவை படுகிறது.. என்னவென்று பார்ப்போம்.. சந்திர கலை என்பது உள் மூச்சு, எண்ணங்களின் உதயம், எண்ணங்களின் ஆதிக்கம்.. சார்புகளை மட்டும் பிரதிபலித்து தன்னை இழந்த ஒன்று.. அது சுத்த மனம் என்ற பாத்திரத்தில் அசுத்த எண்ணங்களால் நிரப்பப் பட்ட ஒன்று.. நிரம்பி நிரம்பி இருக்கவே விரும்பும்,, அதில் எதை ஊற்றினாலும் தங்காது,கீழே வழிந்து விடும்.. இலட்சிய எண்ணங்களுக்கு அங்கு இடம் இல்லை..இடமும் கொடுக்காது.. சூரிய கலை என்பது ஒரு காலி பாத்திரம் போல.. ஆனால் அது வெற்றிடமாக இருக்கவே விரும்பும் தனக்குள் எதாவது நிரம்பியதை வெளியேற்ற முனையும்.. தன் இயல்பான வெற்றிடத்தை தக்க வைத்து கொள்ள முனையும்.. சந்திர கலை தன்னை நிரப்பிக்கொள்ள முனையும் போது, சூரிய கலை தன்னை வெற்றிடமாக்க முனையும்..
சற்று நில்லுங்கள்.. நிதானமாக இதை கவனியுங்கள்.. சந்திர கலையும் சூரிய கலையும் இணையும் பொழுது, வெற்றிடமான ஒன்றையே நிரப்பி வைத்துக் கொள்ளும் ஒரு தன்மை வெளிப்படுகிறது அல்லவா ? புரியவில்லையென்றால் மீண்டும் மீண்டும் படிக்கவும்.. சூரியனின் வெற்றிடமாக இருக்கும் முனைப்பும் சந்திரன் வேறு வழி இன்றி அந்த வெற்றிடத்தையே நிரப்பிக்கொள்ளும் முனைப்பும் கலந்த ஒன்று உருவாகிறது.. அதுதான் அக்னி கலை.. 12 உயிர் எழுதுகளும் 18 மெய் எழுத்துக்களும் இருக்க இவைகளோடு கலவாத தனி எழுத்தான ஆயுத எழுத்து ஃ (அக்) இருப்பதை போல், சந்திரனும் சூரியனும் இணைந்த நிலையில் அந்த தனி நித்திய (னி என்ற நி) நிலையான அக்னி கலை உருவாகிறது.. கலை என்பது வேறு ஒன்றும் இல்லை க்+ அலை என பிரிந்து கடவுள் இயக்கமாக ( அலை) குறிக்கிறது.. சுத்த நிலையான இந்த அக்னி கலையில் அசுத்த எண்ணங்களுக்கு துளி அளவும் இடமே இல்லை.. இடமும் தரவே தராது.. அசுத்த எண்ணங்கள் சூரிய கலையில் இருந்து தங்கி இருக்க முடியாமல் வெளியேறி விடும்.. சந்திர கலையில் அசுத்த எண்ணங்களே தங்கி நிறைந்து இருக்கும்.. நல்ல,சுத்த எண்ணங்களுக்கு மாதத்தில் ஒருநாள் கலங்கமில்லாத நாள் ஆன பௌர்ணமி போல் எப்பொழுதாவது இடம் கொடுக்கும்.. கவனிக்க வேண்டிய மிக பெரிய ஒன்று எது எனில் சுத்த இலட்சிய எண்ணங்கள் இந்த அக்னி கலையிலும் சூரிய கலையிலும், தங்கி இருக்கும் தகுதியை பெறுகிறது.. நிரப்பும் தன்மையாலே சந்திர கலையான மூச்சு காற்றை உள்வாங்களிலும், வெளியேற்றும் தன்மையாலே சூரிய கலையான மூச்சு காற்றை வெளி விடலிலும் செயல் படுகிறது.. 
இரண்டும் சேர்ந்த கலையான அக்னி கலையில் வெற்றிடத்தையே நிரப்பும் தன்மையையே கொண்டுள்ளது.. வெற்றிடம் என்பது ஒரு புரியாத புதிராக இருக்கிறதோ ? வெற்றிடத்தை எப்படி சந்திர கலை நிரப்ப முடியும் ? முதலில் வெற்றிடம் என்பது 'வ்' என்ற விண் சக்தியை ஏற்றுக் கொண்ட இடம் என்பதாகும்..
எங்கும் நீக்கமற பரந்துள்ள விண் என்ற ஆகாயம் என்ற கடவுள் சக்தி அதை வேதங்களும்,புராணங்களும்,சாஸ்திரங்களும் சொல்ல, வெற்றிடம் என்பதை ஒன்றுமே இல்லாத இடம் என்பதை ஏற்க முடியாது.. புனித பிரபஞ்ச சக்தியை தான் வேறு வழி இன்றி சந்திரன் நிரப்பிக் கொள்கிறது.. அப்படியானால் சூரியன் வெளியேற்றுவதை எதை ? உருவ வடிவான எண்ணங்களை மட்டுமே..
சற்று உற்று கவனியுங்கள்.. எந்த ஒரு எண்ணமும் எண்ணுகின்ற பொழுது அது எதாவது சார்புகளின் வடிவத்தையே ஏந்தி நிற்கும்.. வடிவத்தின் வெளிச்சத்தை ஏந்தி நிற்பது தான் எண்ணம்.. அதை தான் சூரிய கலை வெளியேற்றுகிறது.. விண் சக்தியான வெற்றிடத்தை வெளியேற்ற எதனாலேயே முடியாது.. கடவுளாலேயே முடியாது.. காரணம் கடவுளே விண் சக்தியான வெற்றிடமாக உள்ளார்..
இப்படி பட்ட அக்னி கலையில் நமது இலட்சிய எண்ணத்தை நிறுத்துகின்ற பொழுது ஆதிக்க எண்ணங்களின் குறுகீடு இல்லாமல்,விண் என்ற அளவில்லாத கடவுள் சக்தியால் பூரண 
வலு ஏற்றப் படுகிறது.. அக்னியில் வழு ஏற்றப்பட்ட அந்த இலட்சிய எண்ணம், அரிச்சந்திரனின் எதனாலும் அசைக்கப்படாத உறுதி பாடு அடைகிறது.. இதை நினைவு படுத்தவே எல்லா மயானங்களிலும் அரிச்சந்திரன் கல் இருக்கும்.. இதை வணங்காமல் பிணம் மயானத்தின் உள்ளே செல்லாது.. நாம் உயிரோடு இருக்கும் பொழுதே அத்தகைய உறுதிப் பாட்டை நமது இலட்சிய எண்ணங்களுக்கு அக்னி கலையில் அதி வலு ஏற்றி வாழ்வில் செம்மை படவேண்டும்.. 
சரி அக்னி கலைக்கு எப்படி செல்வது.. அதுதானே மிக முக்கியம்.. விண் என்ற பேரறிவின் துணை தேவை படுகிறது.. என்றும் நீங்கா அனுபவ அறிவின் பலமே பேரறிவு.. ஒன்றை அனுபவிக்கின்றோம்.. அது விரைவில் அனுபவ அறிவை விட்டு நீங்கி போய் மறந்து போய் எண்ணம் என்ற ஏக்க அறிவாக நம்மை ஒட்டிக் கொண்டு இருக்கிறது.. அது மீண்டும் அனுபவித்த அந்த ஒன்றை அனுபவிக்க துடிக்கிறது.. இப்படியான முன் அன்பவித்த மறந்த ஏக்க எண்ணங்கள் நடுவில் நமது இலட்சிய எண்ணம் தலை தூக்க முடியாது.. அந்த மாதிரியான ஏக்க எண்ணங்களுக்கு இடம் தராத அக்னி கலை இப்பொழுது நிகழ் கால இலட்சிய எண்ணத்திற்கு மிக வலு ஊட்டி எனைய ஏக்க எண்ணங்களை ஆதிக்கத்தை தகர்த்து உதவுகிறது.. இப்பொழுது சூரிய கலையில் மூச்சு வெளி விடுகின்ற பொழுது, ஏக்க எண்ண தளர்வுக்கு நடுவே ஓங்க முயலும் வெற்றிடத்தை நம் பேரறிவின் அனுபவ அறிவால் அறிய முயல முயல ஏற்படும் வெற்றிட பெருக்கமே அக்னி கலையின் வளர்ச்சி.. அப்படி பேரறிவு அனுபவ படும் போது, மூச்சை வெளிவிடும் நேரத்தை அதிகப் படுத்த வேண்டிய அவசியம் வருகிறது.. இதையே வாசியோக பயிற்சியாளர்கள் மூச்சு கும்பக பயிற்சி சொல்லி கொடுத்து வெளி விடும் நேரத்தை அதிக படுத்துகிறார்கள்.. வெற்றிட அனுபவ அறிவு ஏற்படாத வெறும் மூச்சின் கும்பக சிரமத்தில் அறிவு ஈடு படுவதால் வெற்றிட அறிவு அனுபவ வாய்ப்பு கிடைக்காது, அக்னி கலையும் ஏற்படாது.. வெறும் தேக பயிற்சி போல் ஆகி விடுகிறது.. சூரிய கலையில் பலம் பெற்ற இலட்சிய எண்ணம் அடுத்த வரும் சந்திர கலையில் ஆதிக்க எண்ணங்களினால் தாக்கப் படும் பொழுது, சூரிய கலையில் பெற்ற பலத்தில் கொஞ்சம் இழக்க நேரிடுகிறது.. ஆனால் அக்னி பலத்தில் அந்த வாய்ப்பு இல்லை ஆதலால் இலட்சிய எண்ணம் அதி வலு அடைகிறது.. அக்னி கலை சற்று உற்று கவனித்து பெருக்கி கொள்ளவேண்டியது அவசியமாகிறது.. இன்று அவ்வளவே..

1 comment:

  1. நான் புரிந்து கொண்டது, தேவையான நல்ல எண்ணங்களை மூச்சு வெளிவிடும் போது கொண்டு செல்ல வேண்டும்

    ReplyDelete