Friday 26 June 2015

பகுதி இரண்டு:---- நாளைய நிஜம்

தோன்றா நிலையில் தோற்றுப் போன சித்தர்கள் 
********************************************************************
இந்த பகுதியை தொடங்குமுன் திரு யோக செந்தமிழ் ஒரு அருமையான கேள்வியை எழுப்பினார்.. இயற்கையாகவே எல்லோருக்கும் எழும் கேள்வி தான்.. ஆனால் முன்னே எழுந்து அதனை கேட்டதற்கு யாம் நன்றி சொல்ல வேண்டும்.. காரணம் ஒரு அருமையான பதிலை, பேரண்ட பேரறிவே, தரும் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார்.. நன்றி..
கேள்வி:-- Yoga Senthamil:--- What you are going to.tell or what you are going to explain? 
Sagakkalai bodittha Sri Ramalinga vallalar where is he? Where is all our 18 sithrgal ? Etternal living is an experience. Those who bourn.have to go one day including you and me
தமிழாக்கம்:--- யோக செந்தமிழ் :--- நீங்கள் எதை சொல்ல வருகிறீர்கள்? எதை விவரிக்க வருகிறீர்கள்? சாகாகலை போதித்த வள்ளலார் எங்கே இருக்கிறார் ? நமது 18 சித்தர்கள் எங்கே இருக்கிறார்கள் ? நித்திய வாழ்வு ஒரு அனுபவமாக இருக்கிறது...நீங்களும் நானும் உள் பட பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் போயே ( மரண மடைந்தே ) ஆக வேண்டும்...
ஒருவாறாக மனதை வென்ற நிலையில் நமது சித்தர்களும், வள்ளலாரும், பேரண்ட பேராற்றலை, மனதில் தோன்றிய ஆதிக்க எண்ணங்களில் செலவழிக்காமல், சேர்த்த பேராற்றலால், பல சித்துக்களை செய்து மகிழ்ந்தனர்.. பாமர மக்கள் அவர்களை போற்ற தொடங்கினர்.. சித்தர்கள் எவ்வாறு அந்த ஆற்றலை பெற்றார்கள் என்பதை ஆராயாமல், தானும் அவ்வாறே பாடுபட்டால் ஆகலாம் என்பதை உணராமல், அவர்களை குரு குரு என போற்றி அவர்களின் மகிமைகளை வைத்து சுலமாக ஆதாய தேடும் சோம்பல் கூட்டமாக மாறி குரு வணக்கத்தையே ஒரு உபாயமாக கொண்டு, ஆதாயத்திற்காக தொல்லை கொடுக்க தொடங்கி விட்டார்கள்.. சித்தர்கள், தாங்கள் செய்த சித்துகளாலே, பாமர மக்களால் பாதிக்கப் பட்டு, பாமர மக்களை விட்டு விலகி காடுகளில் வசிக்கத்தொடங்கினர்... எந்த ஒரு உபதேசமும் சோம்பல் கூட்டமாக இருந்த பாமர மக்களை திசை திருப்பவில்லை.. அதனால் மனித இனமே அவர்களுக்கு ஒரு வெறுப்பாய் மாறி விட்டது... அதனால் அவர்களின் மனித தேகமும் அவர்களுக்கு வெறுப்பை தந்தது.. யாம் பட்ட துன்பம் சொன்னால் கல்லும் கரையுமே என்றார் வள்ளலார்.. அப்படி துன்ப பட, தயாராக, பாமர சோம்பல் கூட்டம் தயாராக இல்லை.. மிகுந்த மனவேதனை மனிதர்களால் உண்டாகி விட்டதால் தான், தர்மசாலையை விட்டு வள்ளலார் மேட்டுகுப்பத்தில் இடம் பெயர்ந்தார்.. உயிர்த்தெழுந்த யேசு மீண்டும் மனித வர்க்கத்தோடு இணையவே இல்லை.. பண்பாடு குறைந்த அந்த கால கட்டத்தில், எழுச்சி பெற்ற சித்தர் பெருமக்கள், பாமர மக்களிடம் கொண்ட வெறுப்பின் தன்மையால் அன்பு என்ற உயரிய பண்பில் பூரணம் எய்தவில்லை.. அதனால் அன்பிலே குறைவு பட்டவர்களாக இருந்தார்கள்,,,
இந்த நிலையில் மனம் வென்ற நிலை விட்டு, மனம் கடந்த பேரின்ப நிலைக்கு சென்று விட்டார்கள்.. அங்கே, பாமர மக்களிடம் அன்பு குறைந்த காரணத்தால், யாருக்காக இந்த தேகம் என்ற மனநிலை தலை தூக்கியதாலும். மோன நிலையான பேரின்ப நிலையில் சிக்குண்டதாலும், தன் தேகத்தை இழக்க தயாராகி, அவ்வண்ணமே தேகத்தை இழந்து மறைந்து போனார்கள்.. இன்று அவர்களின் தேக வடிவம் இல்லாது போனது இதுவே காரணம்.. தோன்றா நிலையாகிய பேரறிவு பெற்றும், தோற்றுப் போய் ஏமாந்து போய் விட்டார்கள் நமது சித்தர் பெரு மக்கள்....
ஒன்றை பெற்று ஒன்றை இழந்தார்கள்
******************************************************
ஆம்.. பஞ்ச பூதங்களில் யாரும் அடையாத பேரண்ட பேரறிவினை பெற்றும், பாமர மக்களிடம் வைத்த அன்பு குறைவினால், தன் அடித்தள பூதமாகிய தேகம் என்ற மண் பூதத்தை இழந்து, ஒருங்கிணைந்த பஞ்ச பூத கூட்டில் குறைவு ஏற்பட்டதால், நமது சித்தர் பெருமக்கள் குறை நிலை மனிதன் ஆனார்கள்... நிறை நிலை மனிதன் ஆகி விட தவறி விட்டார்கள்.. இதனை முன்பே எமது பதிவுகளில் தெளிவாக சொல்லி ஆகி விட்டது.. இந்த குறை பாட்டை நீக்கவே, பஞ்ச பூத கூட்டு ஏற்பட்டு வற்றாத, குறையாத, பொங்கி வழியும், அன்பால், ஒரு நிறைநிலை மனிதன் உருவாகி உலகில் அதர்மம் அழியவும், தர்மம் நிலைநாட்டவும், ஏற்படுத்தப் பட்ட பேரன்பு முயற்சியை தான், யாம் மேற்கொண்டுள்ளோம்.. வெற்றி தோல்வி கணக்கு அன்பிற்கு இல்லை.. அன்பு வடிவான தாய் ஊனமுற்ற குழந்தையாய் இருந்தாலும் வெற்றி தோல்வி கணக்குகளை பார்க்காது தன் குழந்தையை வளர்ப்பது போல, யாமும் அவ்வாறே முயலுகின்றோம்.. நிறை நிலை மனிதன் உருவாவது நாளைய நிஜம் என்ற நம்பிக்கை ஒரு குருட்டு நம்பிக்கை அல்ல.. அதற்கான தகுந்த உளவுகளை தர பிரபஞ்சமே தயாராகி விட்டதால், நிறை நிலை மனிதன் உருவாவது நாளைய நிஜம் என்பது நிச்சயம்.... இன்றைய இளைஞர்கள் பண்பிலே பெரிய மாற்றங்களை காணும் பொழுது, சென்ற பிறவியிலே விட்டுப் போன கடமையை செய்ய, துணிவும் வீரமும் மேலோங்க, எழுந்த வந்த சித்தர்களே என முடிவுக்கு வந்தமையால், என் பங்கிற்கு, எமது முயற்சியிலும் மிக பெரிய ஊக்கம் எழுந்துள்ளது.. நல்ல சூழ்நிலையை எல்லோரும் பகிர்ந்து கொள்வோம்... அன்பு மேலோங்க, விட்ட பணியை தொடர்ந்து மேற்கொண்டு, நிறை மனிதர்களாகி, அதனை நாளைய நிஜம் ஆக்குவோம்.... வாழ்வோம் வளமுடன்....

No comments:

Post a Comment