Saturday 27 June 2015

உளவுகள் பகுதி எட்டு - தளர் நிலையும், முதிர் நிலையும்


பகுதி எட்டில் எட்ட வேண்டிய முக்கிய இலக்கு ஒன்று உள்ளது.. அந்த இலக்கை இழந்தால், இழப்பு மட்டுமே.. பிரபஞ்ச பேராற்றலை அனுபவ படவில்லையென்றால் அது முதிர்ந்து இறுகி
வடிவமாக மண் (பூமி) சூரியன்,நட்சத்திர கூட்டங்களாக, கோளங்களாக மாறி விண்ணில் உலாவும்.. அவை அனுபவப் பட தயார் நிலையில் உள்ளன.. அனுபவ பட்டவுடன் அவை தன் மூல சக்தியான மிக மிக தளர்ந்த நிலையான பிரபஞ்ச ஆற்றலோடு கலந்து விடும்.. அந்த கலந்த நிலைதான் இறைநிலை கலந்த நிலை.. மேலே சொன்னவற்றை நன்கு கவனித்தால் ஏதோ ஒன்று ஏதோ ஒன்றாக மாறினால் மட்டுமே இறைநிலை அடைந்து பேராற்றல் பெற வாய்ப்பு உள்ளது என தெரிய வருகிறது.. ஆம் அந்த மாற்றம் முதிர்ந்த நிலையில் இருந்து தளர்ந்த நிலைக்கு வர வேண்டிய ஒன்று.. இப்பொழுது தளர்ந்த நிலையின் அவசியம் தெரிகிறது.. இந்த தளர்ந்த நிலைக்கான பயிலல் தான் ஆன்மீகம்.. தியானம்,meditation,யோகம்,மற்ற பயிற்ச்சிகள்,பூஜைகள், புனஸ்காரங்கள், மந்திரங்கள்,ஜபங்கள் எல்லாமே இந்த தளர்வு அடைவதற்கான வழிகள் தான்.. தளர்ந்து,தளர்ந்து மிக மிக தளர்ந்த 
நிலையில் நிற்கும் இறை ஆற்றலை அனுபவ படவே.. கலந்து இருப்பதற்கும் அனுபவ பட இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.. கலத்தல் என்பது இறை பேரின்பத்தில் மூழ்கி மறைந்தே போவது.. ஆகாயம் பூதம் தவிர ஏனைய பூதங்கள் மறைந்து போகும்.. இறை ஆற்றல் அனுபவ படுதல் என்பது, இறை ஆற்றலை வேண்டிய அளவிற்கு எடுத்து கொண்டு மற்ற பூதங்களில் நிலை நிற்பதாகும்.. தளர்வு என்பதின் முக்கியத்துவம் இப்போது நன்கு புரியும் என கருதப்படுகிறது.. தளர்வு என்பது பிரபஞ்ச ஆற்றலை பெறுவதற்கான தன்னை தயார் படுத்தும் நிலை.. தளர்ச்சி என்பது ஆற்றலை இழந்த அவல நிலை.. தளர்வு என்பதை புரிந்து கொள்ளாததால், தளர்ச்சி அடைவதற்கான எல்லா ஏற்பாடுகளும் இந்நாள் சுழலில் நடக்கிறது.. இறைவனை முதற்கொண்டு எல்லாவற்றையும் இயக்கி இயக்கி தளர்ச்சி நிலை நோக்கி நகர்ந்து நகர்ந்து மனிதன், மரணம் என்ற முடிவான முதிர்ந்த நிலை அடைகிறான்.. இயக்குதலும் மரணமும் ஒன்றுக்கு ஒன்று மிக மிக நெருக்கம்.. இயங்குதலும் இறைநிலையான சுவர்க்கமும் மிக மிக நெருக்கம்.. மண்ணின் தளர்ந்த நிலை நீர்.. நீரின் தளர்ந்த நிலை நெருப்பு.. நெருப்பின் தளர்ந்த நிலை காற்று, காற்றின் தளர்ந்த நிலை ஆகாயம்.. ஆகாயத்தின் தளர்ந்த நிலையே ஆன்மா.. ஆன்மாவின் தளர்ந்த நிலையே மூல ஆற்றலான அருள்.. இது சத்தியமான சித்தர்களின் வெளிப்பாடு.. இதில் முதிர்ந்த பூதம் மாற்றம் அடைய தளர்வு நிலை எவ்வளவு அவசியம் என்பது தெளிவாகிறது.. நிறை நிலை மனிதன் முதிர் நிலைக்கும் தளர் நிலைக்கும் நொடியில் மாறும் வல்லமை உடையவன்.. ஏதோ ஒரு பூதநிலையில் சிக்கி ஆற்றலை இழப்பதும், வாழ்வை இழப்பதும் அவன் நிலையல்ல.. சூழ்நிலைக்கு ஏற்றால் போல் தர்மத்தை நிலை நாட்ட, வல்லான் ஆகிறான்.. 
சதா தளர்ந்த நிலைக்கான பயிலல் பயில வேண்டும்.. நாத இணைப்பு தளர்நிலையை விரைவு படுத்துவதற்கான ஒரு மிக பெரிய உளவு.. அன்றாடம் செயல் பாடுகளில் ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் தளர் நிலைக்காக நாத இணைப்பில் இருக்க பயில வேண்டும்.. ஒரு நிமிடம் கிடைத்தால் கூட அதை விரயமாக்கக்கூடாது.. பஸ், இரயில், விமானம்,டிக்கெட் எடுப்பது போன்றவைக்கு காத்திருக்கும் நேரத்தை உபயோகப்படுத்த வேண்டும்.. விழிப்பு நிலையில் இது போன்று இருக்கும் பொழுது பகல் நேரங்களிலேயே பயில பல மணி நேரம் நமக்கு கிடைக்கிறது.. 
அடுத்து தளர்வடைவதிலே திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.. முன் பகுதிகளில் அதன் முக்கியத்துவத்தை நிறையவே சொல்லப்பட்டு இருக்கிறது.. அந்த திறன் இன்றி பஞ்ச பூதங்களில் இடை மாற்றம் உடனுக்கு உடன் நிகழ்த்த வாய்ப்பு இல்லை.. எதன் ஒன்றின் நிலையும் அதில் அடையும் திறனும் மிக மிக முக்கியம்.. தர்மம் அழிவதற்கான அறிகுறிகள் அநேகம் தெரிகின்றன.. ஆகவே நிறைநிலை மனிதன் வரவு அவசியமாகிறது.. விவேகானந்தர் சொன்னது போல் வீர ஆன்மிகம் விழைய, விழிக,எழுக,குறியை அடையும் வரை நில்லற்க என்பதை நினைவில் நாம் கொண்டு என்றும் மறவாதிருப்போம்.. வெற்றி, வீர ஆன்மீகத்திற்கே.. சிவகலப்பு சிவ யோகத்தில் பஞ்சபூத சமசீர் ஆதிக்கம் பெற்று தர்மம் காக்க நிறைநிலை மனிதன் ஆவதே, என்றும், எப்பொழும், எவ்விடத்தும்,எக்கணமும், குறிகோளாக கொள்வோம்..
சுருக்கம்:- தளர் நிலை விண்ணை நோக்கிய பயணம்.. முதிர் நிலை மண்ணை நோக்கிய பயணம்.. நாத இணைப்பு தளர் நிலையின் மிக உகந்த உளவு,, தளர் நிலை பயணமே ஆன்மீகம்.. தளர் முதிர் நிலைக்கான மாற்றத்தின் திறனுக்கு சிவகலப்பு சிவ யோகமே.. ஒவ்வொரு நொடியும் பயிலவதற்கு உகந்த நிலையே.. வீர ஆன்மீகத்தில் விரைவும் திறனும் அடையலாம்.. விரைவு,விரையம் இரண்டின் இயல்பு அறிந்து செயல் பட வேண்டும்.. 
இன்று அவ்வளவே..

No comments:

Post a Comment