Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினொன்று


தன்மை பெறல் திண்மை பெறல்
*************************************************
வாசி யோகப் பயிற்சியாளர்கள் மிக கவனிக்க வேண்டியது, பயிலும் பொழுது,
தன்மை பெறும் வண்ணம் கற்க வேண்டும்.. கவர்ச்சி ஒன்றே கவனத்தை ஈர்க்கும் இன்றைய நிலையில் பயிற்சியாளர்கள் வாசியோக பயிற்சிக்கு பல உறுதி மொழிகளை அள்ளி வீசி கவரவே பார்ப்பார்கள்.. அதில் குறை ஒன்றும் இல்லை.. இல்லையேல் மனிதன் வாசியோகத்திற்கு திரும்பி கூட பார்க்க மாட்டான்.. அப்படி கவரப்பட்ட மனிதன் முடியாத கற்பனை இலக்குகளை வைத்து பழகி வருகிறான்.. அதில் காட்டும் மித மிஞ்சிய வேகம் அவனுடைய இயல்பான,தன்மையான வேகத்தை கெடுத்து, நிலை தடுமாற வைத்து தேக மன நிலையில் குறையை ஏற்படுத்துகின்றது.. தன் இயல்பிலே தன்மையிலே இருக்கின்ற பேராற்றலை நினைவு படுத்தி, அதன் மூலம் வல்லவன் ஆகும் வித்தையை கற்று தர வேண்டிய வாசியோகம், இன்று மித மிஞ்சிய வேகம் கொடுத்து, தன் தன்மை இயல்பை 
கெடுத்து, தன்னுள் புதைந்துள்ள சக்திகளை அடைய விடாமல் தடுக்கும் அவநிலை தருகிறது.. கற்று கொடுப்பதில் குறை இல்லாவிட்டாலும் கற்றுக் கொடுக்கும் முறையில் கற்பவனின் மன நிலை அறிந்து கற்று கொடுப்பதில்லை.. 
அதனால் விபரீதம் நிகழ்கிறது..
பெரும் பாலோர் நினைப்பது போல கற்க வேண்டியது வெளியில் மட்டுமே உள்ளது என்பது ஒரளவுக்கு தான் உண்மை.. ஆனால் கற்கும் தகுதி ஒன்று உள்ளதே.. அது முழுமையாக மனிதன் உள்ளே உள்ளதை மறக்கலாகாது... அந்த தகுதி பெறாமல் கற்க வேண்டியதை கற்கவே முடியாது.. தகுதியே முதல் இடம்.. அப்படி இல்லை என்றால் ஆடு மாடுகளை கூட பள்ளியில் சேர்க்கலாமே ! முதலில் தன்னுடைய தன்மையை தெரிந்து மேம்படுத்தி தகுதி பெருக்கும் அடைவது முதல் கடமை ஆகிறது.. தன்னுடைய தன்மை எங்கே அறிவது.. அறியும் இடம் தன்னுடைய இருப்பு தன்மைதான்.. தன்னில் தானாய் இருக்கும் நிலைதான்.. காரணப் பொருளாய் நிறைந்துள்ள மகா ஆற்றலை வெளிபடுத்துபவனே நிறைநிலை மனிதன்.. உள் ஆற்றலுக்கு முன் வெளி ஆற்றல் ஒரு மலைக்கு முன்னால் தூசியை போன்றது.. வெளி ஆற்றல் ஒன்றையே அடைய துடிக்கும் மனிதன் தன் கவனம் அனைத்தையும் வெளி ஆற்றலிலேயே செலுத்தி,செலுத்தி தன்னுடைய விதிக்கப்பட்ட உள் ஆற்றலையும் இழந்து, நடை பிணம் ஆகிறான்.. நாதம் முழுமையாக உள் ஆற்றலை நோக்கி நகர்ந்து இருப்பு தன்மையில் செயல் பட தொடங்கும்.. சற்று பேரறிவின் துணை வேண்டும்.. அந்த அறிவு குறைவாக உள்ளவர்களுக்கு வாசி பயிற்சி உதவும்.. இருப்பு தன்மை நோக்கி நகர வில்லை யென்றால் வாசி மிக கேடு தரும்.. வாசிக்கான முக்கிய உளவே மூச்சு தான். அது ஒருவன் இருப்பு தன்மையிலும் இருக்கிறது.. வெளியே உலக பொருள்களிலும் உள்ளது.. அது உள் இருப்பில் மையம் கொண்டால், பேராற்றல் பெறலாம்.. வெளியே இருந்தால் கேடே விளையும்.. ஒவ்வொரு நொடியிலும் மூச்சு தன்மை இருப்பு தன்மையை தொடுகிறதா என்பதை விழிப்பு நிலையில் கவனிக்கவும்.. இருப்பு தன்மையிலே தங்குவதில் உறுதி பட பட ஒன்று வளர்ந்து கொண்டே வரும்.. அது தான் திண்மை என்ற தகுதி.. வள்ளுவார் என்ன சொல்லுகிறார் என்று பார்போம்
''எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்''.
திண்மை பெற்றவரே திண்ணியர்.. திண்மை பெற பெற செயல் திறன் கூடும்.. அதிக திண்மை பெற்றவர்கள் ஒரு காரியத்தை வேண்டிய காலத்திற்குள் முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.. திண்மை இல்லாத கடவுள் எல்லாம் முடிந்து காலம் தாழ்ந்து வரும் வருகையால் என்ன பலன் ?.. எண்ணிய தருணம் எண்ணிய மாத்திரத்தில் எண்ணிய இடத்தில் எண்ணிய வண்ணம் எண்ணிய செயலை செய்யும் திண்மை பெற்றவன் தான் நிறைநிலை மனிதன்.. இருப்பு தன்மையிலே திண்மை பெறும் கல்வி தான் உண்மை கல்வி.. உலக அராஜகங்களுக்கு புலம்பி கொண்டே காலம் விரையும் செய்யும் மனித குலம் தன் பலவீனத்தை உணர வில்லை.. அந்த கால விரையத்தில் பத்தில் ஒரு பங்கு நேரம் இருப்பு தன்மையில் திண்மை பெறுவதற்கு செலவழித்தாலே போதும் மனித நிலை அளவற்ற முன்னேற்றம் அடையும்.. அந்த இருப்பு தன்மையில் அன்பு என்ற மகா சக்தி மூலம் மனிதன் அராஜகத்தை எளிதாக வெல்லும் போது மட்டுமே உலகம் உண்மையான ஆன்மிகத்திற்கு திரும்பும்.. இறைவன் வருவதற்கு முன்னால் நிறை நிலை மனிதன் வருவான்.. ஏனெனில் மனிதன் இறைவன் தந்த உளவுகளை புரிந்து கொள்ளும் மனதளவில் ஆற்றலை பெற்று விட்டான்... இருப்பு தன்மையின் நுணுக்கத்தை அறியும் புத்தி கூர்மை அடைந்து விட்டான்.. இறைவனுக்கு தொல்லை தராமல் தானே இறைவன் தந்த உளவால் இறைவன் செயலை அவன் அருளால் தானே செய்வான்.. இந்த உலகில் தர்மத்தை நிலை நாட்டுவான்.. திண்மை பெறுவதையே எண்ணமாக கொண்டு ஒரு நிறை நிலை மனிதன் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டு தானே உருவாக வேண்டும் என முனைவோமாக..

No comments:

Post a Comment