Saturday 27 June 2015

பகுதி 4 - சிவ கலப்பு சிவயோகத்தில் பஞ்ச பூதங்களில் சமசீர் ஆதிக்கம்

சிவ கலப்பு சிவயோகத்தில் நிறை மனித நிலை அடைவதே நோக்கம்.. நிறை மனித நிலை என்பது என்ன? நிறை மனிதன் என்பவனிடம், மனிதனிடம் இல்லாத தெய்வீக பலமும் தெய்வத்திடம் இல்லாத தேகபலமும் இருக்கும்.. கடவுளிடம் அதீத சக்தி இருந்தும் அதை உடனே செயல் படுத்துவதற்கு இந்த மண் அல்லது தேகம் என்ற பூத நிலைக்கு ஏற்ற மனித உடல் இல்லை... அதீத சக்தி இருந்தும் செயல் படுத்த தேகம் இன்மையால் பல சமயங்களில் இயலாமையில் இருக்கிறான்..சில விநாடிகளில் நடக்கும் பேர் அழிவுகள் தீவிர வாத தன்மையால் தினமும் நடக்கும் உயிர் பலிகள்,தினமும் நடக்கும் பெரும் விபத்துகள் அதில் பாதிக்கப்படும் ஆயிரம் ஆயிரம் அப்பாவிகள் இறைவன் இருக்கின்றான இருக்கின்றான என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு எழுப்பும் கூக்குரல்கள், இவை எல்லாம் இறைவனின் இயலாமைக்கு சாட்சிகளாக இருக்கின்றன.. இறைவனுடைய இயலாமையை மனிதன் பயத்தின் காரணமாக இதுவரை சிந்திக்கவே இல்லை.. நமசிவய என்ற பஞ்ச பூதங்களில்
ந என்ற தேகம் நிலை பஞ்ச பூதத்திலும் ம என்ற நீர் நிலை இயக்க பஞ்ச பூதத்திலும் விலகி நின்ற இறைவன் அந்த இரு பஞ்ச பூதத்தில் வலுவிழந்து நிற்கின்றான்.. மனிதன் ந ம என்ற இரு நிலைகளில் வலுவுடன் இருந்தாலும் வ என்ற உடனே பரவி நிற்கும் காற்று என்ற பஞ்ச பூதத்திலும் எங்கும் வியாபித்து உள்ளதை உள்ளவாறு காணும் அறிவு என்ற ஆகாய பஞ்சபூதத்திலும் அறவே பலம் இன்றி இருக்கின்றான்.. மனிதன் செயல் வடிவில் ஓம் நம நம என்று இருக்கிறான் இறைவனோ
ஓம் வய வய என்று இருகின்றான்.. இடைபட்ட 'சி' என்ற மனம் என்ற பஞ்ச பூதத்தை பிறகு ஆராய்வோம்.. 'சி' என்ற மனம் என்ற பஞ்ச பூதம் தான் சிவ கலப்பு சிவ யோகத்தின் கதாநாயகன்..
செயல் வடிவில் ஓம் நமசிவய என்ற பூரண சமசீர் பஞ்ச பூத ஆதிக்கத்தில் இருப்பவன் தான் இந்த நிறை மனிதன்..ஏழாம் அறிவு என்ற திரை படத்தில் வரும் தன் தேக தெய்வ சக்தியால் ஒரு கிராம மக்களை காப்பாற்றும் போதி தர்மனை காட்டிலும் பல் ஆயிரம் மடங்கு வேகமும் தர்ம சிந்தனை கொண்டவன் தான் இந்த நிறை மனிதன்.. அது நடந்த உண்மை.. நிறை மனிதன் செயல் பாடு இனி நடக்க போகும் உண்மை.. நிறை மனித உளவுகள் வர தொடங்கும் நிலையில் இதன் முன் பகுதிகளை கவனத்தில் வைத்தால் தான் மற்றவை விளங்கும்.. இறைவனை பற்றி கருத்தில் முரண் பாடு தோன்றின் சற்று பொறுமை காணுமாறு வேண்டுகிறேன்...

No comments:

Post a Comment