Saturday 27 June 2015

பகுதி 19 - சிவ கலப்பு சிவ யோகத்தில் தேக திடம் தேடல்

காயம் பொய் அல்ல, மெய் என்பதே சரி.. காயம் என்ற தேகத்திற்கு மெய் என்ற பெயரும் உண்டு.. மெய் என்றால் சத்தியம் உண்மை என்பதாகும்.. காயம் என்பதை பிரித்தால் 'க்'+ ஆயம் எனலாம்..
'க்' என்றால் கடவுள் தன்மை.. ஆயம் என்பதில் 'ஆ' ஆகாயத்தின் நிலைத்த தன்மையும், 'ய' என்பது நமசிவய என்ற ஐந்தெழுத்தில் 'ய' என்ற நித்திய பேரறிவையும் 'ம்' என்ற இணைந்த நிலையையும் குறிக்கும்.. காயம் என்பது நித்தியமான தன்மையும் அறிவும் இணைந்த கடவுள் தன்மையை கொண்டது.. உடம்பினுள் உத்தமன் கோவில் கொண்டான் என்று திருமூலர் கூறுகிறார்.. அப்படி பட்ட மெய் என்ற காயம் இழந்து போவது ஏன் ? கடவுள் உள்பட 
சித்தர்களும் முத்தர்களும் ஏன் தேகத்தை இழந்தார்கள்.. உடலை இழந்து இந்த உலகத்தில் செயலற்று போனார்களே!! தர்மம் இந்த மண்ணில் சீரழியும் பொழுது கூட வர முடிய வில்லையே !! ஏன்? ஏன்? திட தேகத்தில் ஆகாய சக்தி உணர்வாக பரவி சென்று தேகத்திற்கு உயிர் ஊட்ட முடியாது.. ஊடுறுவி சென்று தான் போக முடியும்.. அப்பொழுது இந்த தேகம் துன்பத்தை அனுபவிக்கின்றது.. துன்பத்தை அனுபவிக்கின்ற பொழுதெல்லாம் தேகம் உயிர் ஊட்டப்படுகிறது.. நடை பயிற்சிகள்,தேக அப்பியாசங்கள் தேக யோக பயிற்சிகளில் உள்ள கடுமையின் விளைவால் தேக துன்பங்களால் தேகம் வலுவடைகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.. முடிவில் தேக துன்பமே தேக வலுவிற்கு மூலம்.. இது சத்தியமான வார்த்தைகள்.. நிரூபிக்கக் கூடியவை.. 
சரி இன்பம் தேகத்திற்கு என்ன செய்கிறது என்பதை கவனிப்போம்.. பஞ்ச பூதங்களில் அளவில் வைத்து பார்த்தால் அதிக பேராற்றலை பெற்றது, மண் பூதமான தேகமே.. செயல் படாத பிரபஞ்ச சக்தி உறைந்த இடமே இந்த தேகம்.. கல் போன்ற உறைந்த தேகத்தில் நீர் பூதத்தால் ரத்தமும் நெருப்பு பூதத்தால் கனலும் காற்று பூதத்தால் சுவாசமும் ஏற்பட்டு உறைந்த தேகம் ஓரளவு கரைந்து இயங்கத் தொடங்குகிறது.. மற்ற பூதங்கள் துணையில்லாவிட்டால் உறைந்த தேகம் கல் பாறை, மண் கட்டிகள் போல் இருக்கும்.. உறைந்த தேகத்தை கரைய வைப்பது கனல் என்ற உஷ்ணமே காரணம்.. அதாவது நெருப்பு என்ற மனம்.. நெருப்பில் கனலும் வெளிச்சமும் உள்ளது. அது கனல் என்ற உணர்வும் வெளிச்சம் என்ற எண்ண வடிவமும் ஆகும்.. குழந்தையிடம் கனல் அதிகமாகவும், வெளிச்சம் குறைவாகவும் இருக்கும்.. இதனால் கரைந்த தேகம் மென்மையாக இருக்கும்.. குழந்தை வளர வளர கனல் குறைந்து எண்ணம் என்ற வெளிச்சம் அதிகமாகி தேகம் உறையத் தொடங்கி மரணம் அடைகிறது.. பிணத்தில் எந்த உணர்வும் இருக்காது எந்த கனலும் இருக்காது.. கனல் என்ற உணர்வு இல்லையேல் அறிவும் இருக்காது.. மனதில் எண்ண ஆதிக்கம் அதிகமாக அதிகமாக கனல் குறைந்து தேகம் பாதிக்கும்.. தேகம் இன்றி உலகில் உறவாட முடியாது.. தேகம் நிலை பெறவே உணர்வு ஊடூருவி தேகத்தை உயிர்பிக்கும் பொழுது தேகம் துன்பம் அடைகிறது.. தேக துன்பமே தேக வலிமை.. மிக முக்கியமான செய்தி என்னவென்றால் தேக சுகத்தில் கனல் குறைந்து தேகம் உறையத்தொடங்குகிறது.. தேக சுகத்தில் தேகம் வலிமை இழப்பது என்பது கண்கூடான விசயம்.. தேக துன்பம் தரும் தேக பயிற்சிகள் யோக பயிற்சிகள்,நடை பயிற்சிகள் எல்லாம் அறிவின் விழிப்பு நிலையில் இருந்து செய்தால்
மட்டுமே தேக வலிமை பெற முடியும். இல்லையேல் தேகம் வலிமை இழக்கும்.. ஏன் என்றால் விழிப்பு நிலையில் வரும் உணர்வு தேகத்தில் ஊடூறுவும் விதமாக பயிற்சிகள் அமைய வேண்டும்.. தேகம் வலு பெற விழிப்பும் பயிற்சியின் தரமும் மிக அவசியம்.. அந்த தரமே தேக திறனை கூட்டும்.. உழைப்பால்,விழிப்பு நிலை ஒன்றாமல் செய்யும் தேக அசைவுகளில் ஒரு பயனும் இல்லை. தூல தேகம் அசைவற்று நுண் தேகத்தில் செய்யும் பயிற்சிகள் விழிப்பு நிலையோடு செய்ய வேண்டியதிருப்பதால், நுண்தேக பயிற்சி, சற்று நாத திருவடி பயிற்சிக்கு பின் சுலபமாக
புரியும்.. தேக திடம் காரணப் பொருளாய் இருக்க அறிவினில் ஆனந்தம் பரவசம் என்பது காரியப்பட்டு விளங்கும்.. தேக
திடம் நீங்கில் அனைத்தும் நீங்கும்.. பரவசம்,பேரானந்தம்,நித்ய ஆனந்தம் என்றெல்லாம் மோசம் செய்வோர் பலர் இன்று
உள்ளனர்.. ஆனால் விழிப்புடன் கூடிய தேக துன்பத்தை பற்றி பேசவே மாட்டார்கள்.. பேசினால் சிஷ்யர்கள் ஓடி போய்
விடுவார்கள்.. அதனால் தேகத்தை இழக்கும் நெறிக்கே அழைத்து சென்று அனைத்தையும் இழக்க செய்து விடுவார்கள்..
நிறை நிலை மனிதன் துன்பங்களை வரவேற்கும் நிலையில் உள்ளவன்.. அவணை போல் இன்பம் பெறுபவனும், துன்பத்தை ஏற்பவனும் உலகில் எவரும் இல்லை.. இங்கே துன்பத்தை ஏற்பவன் என்பதை உற்று கவனிக்க.. அனைவருக்கும் துன்பம் தானாக வந்து சேரும்.. ஆனால் விழிப்பு நிலை காரணமாக தானாகவே ஏற்று கொள்வான்.. ஏனெனில் தேகம் திடம் கொள்ள அதை ஒரு கடமையாக நினைக்கின்றான்.. கடமை வடிவாக இருக்கின்றான்.. நாத திருவடி பயிற்சிகள் நுண் உடல் தேகத்திற்கு கடுமையான துன்பங்களை கொடுப்பதால் அது மித மிஞ்சிய தேக பலம் தருகிறது.. தேக அசைவுகளுக்கு அங்கு இடம் இல்லை.. ஏதோ சில காரணங்களால் தேகம் இழந்தாலும் பஞ்ச பூத துணையோடு பேரறிவின் துணையோடு பேராற்றலால் தன் தேக திசுக்களை உணர்வால் பெருக்கி தேகத்தை உண்டாக்கி கொள்வான்.. குணங்குடி மஸ்தான் 256 இடங்களில் பகை அரசர்களால் கொலை செய்யப்பட்டு 256 தடவை உடலை உண்டாக்கி கொண்டதாகவும் 256 அடக்கம் செய்யப்பட்ட சமாதிகள் உள்ளதாக சரித்திரம்.. சத்தியத்தை காப்பாற்ற தேகத்தால் மட்டுமே முடியும் என்பதால் தேக திடம் கொள்ள பஞ்சபூத சமசீர் ஆதிக்கத்திற்கு வேண்டிய நுணுக்கங்களை இதுவரை பதிவுகளில் அறிந்து இருந்தாலும் கடைசி பகுதியான 20 ல் சிவ கலப்பின் உச்ச நிலையை உற்று கவனித்து படிக்குமாறு வேண்டுகின்றனன்..

No comments:

Post a Comment