Saturday 27 June 2015

பகுதி 2 - சிவ கலப்பு சிவயோகம் (அறிவு பற்றிய ஆய்வு)

சிவ கலப்பு சிவ யோகத்தில் ஆகாய பஞ்ச பூதத்தின் அறிவு என்ற நிலையினை ஆராய்ந்து தெளிய வேண்டியது மிக முக்கியம்.. அறிவு ஒன்று வந்துவிட்டால் அது ஒன்றை தூண்டிக்கொண்டே இருக்கும் அந்த தூண்டல் சக்தியின் மூலமே, விரிந்து பரந்த விண் என்னும் வெட்டவெளி ஆகாயம்..அந்த மூலசக்தியின் வரவு என்றும் எவ்விடத்தும் எப்பொழுதும் சீராக இருக்கும். சீர் நிலையே அதன் மேன்மை.. அந்த மேன்மை மிஞ்சகூடியது எதுவுமே இல்லை... அந்த மேன்மையை நோக்கிய பயணமே ஆன்மீகம் எனப்படும்.. அந்த சீர் என்ற ஸ்ரீ என்ற சீர்மை என்ற நிலையை தான் எல்லா வளம் தரும் இலட்சுமியாக குறிப்பிடுகிறார்கள்.. பூமியின் நீர் ஆதாரத்திற்கு எப்படி பரந்த கடல் மூல ஆதாரமாக உள்ளதோ
அப்படியே அத்தனை கோள்களுக்கும் பூமி உள்பட பரந்த பிரபஞ்ச சக்தி மூல ஆதாரமாக உள்ளது.. அந்த மூலசக்தியே ஐம்பூத சக்தியாக மாறி செயல்படுகிறது... அறிவு என்ற ஆகாயமே நம்மிடம் சுத்தமனமாக உள்ளது..எந்த சக்தியும் ஓர் அதிர்வு அலைகளாகவே இருக்கும்.. அப்படியானால் சுத்த மனத்தில் உள்ள சீர்மையான மேன்மையான ஒழுங்கான பிரபஞ்ச முற்றும் இருக்கின்ற அந்த தூய அதிர்வு அலை என்ன? அதுதான் தான் நாதம்.. நல் தவம் பயின்றாடும் நாதனே என்று இறைவனை சொல்லுவார்கள்.. நாதத்தோடு இருப்பவனே நாதன்.. எல்லாம் செய்ய வல்லவனே நாதன்.. ஏனெனில் என்றும் பிரபஞ்ச அலைகளான நாதத்தோடு இருப்பதால் எல்லாம் வல்லவனாக இருக்கிறான்.. அளவற்ற சக்தியோடு இருக்கிறான்.. அப்படியானால் நாதம் இருக்கும் சுத்த மனம் உடைய நாமும் வல்லவனாக தானே இருக்க வேண்டும்?.. இருக்கவேண்டும் ஆனால் இருக்கமுடிவதில்லை.. காரணம் சுத்த மனத்தில் நாதத்திற்கு எதிராக இருக்கும் தடைகளால் பிரபஞ்ச சக்தியை சரிவர பெற முடியாத நிலையில் மனிதன் இருக்கின்றான்.. மனித தரத்திற்க்கு மட்டுமே போதிய சக்தியை பெறகூடிய அவநிலையில் உள்ளான்.. அளப்பரிய ஆற்றலை பெற முடியாமல் நாதத்திற்கு எதிரான தடைகளை சுமந்து சுமந்து அசுத்த மனத்தால் அல்லல்பட்டு கொண்டிருக்கின்றான்.. இறைவன் ஞானி மனிதன்,இவர்கள் நாத தடைகளின் வித்தியாசத்தை பொறுத்தே தம் தம் நிலையில் உள்ளார்கள்..மனிதன் நாத தடைகளை நீக்கி சுத்த மனம் பெறுவானாயின் அவனும் இறைநிலை அடையலாம்.. இறை நிலை ஒத்த நிறை மனிதன் ஆகலாம்... அந்த நாத தடைகள் என்ன என்பதை பகுதி 3 ல் விரிவாக பார்க்கலாம்..

No comments:

Post a Comment