Friday 26 June 2015

பகுதி முப்பத்தி ஒன்று :--- சித்தராவது எப்படி ?

குண்டலினி சக்தி பயணம்--- பாகம் ஐந்து
ஒரு நண்பரின் கேள்வியால் அவசர அத்தியாவசியமான பதிவு
கேள்வி :-- சுவாச ஒழுங்கின் மூலம் மூலாதாரம் மற்றும் பிடரிக்கான பாதையானது மனக்கண்ணால் (பாவனை /கற்பனை)தானே உருவாக்கப்படுகிறது.?
மிக அற்புதமான கேள்விக்கான மிக சிக்கலான பதில்...
உப்பை நிஜமாகவே சற்று வாயில் போட்டு ருசி பார்க்கிறோம்... மிகவும் கரிக்கிறது.. அந்த கரிப்பினை தாங்க முடியாமல் துப்பி விடுகிறோம்.. இது முதல் அனுபவமான நிஜ அனுபவம்.. பின் மனதால் உப்பினை வாயில் போடுவதாக நினைத்துப் பார்க்கின்றோம்... உப்பு போடாமலேயே நாக்கில் நீர் சுரக்கிறது.. ஏதோ பழைய அனுபவ தாக்கத்தால் அப்படி அனுபவப் படுவது இரண்டாம் வகை அனுபவம்.. இது நிழல் அனுபவம்... உப்பு போல கரிக்கின்ற வேறு ஒரு பொருளின் சுவைத்த அனுபவித்த ஒன்றை நினைக்க வைத்து உப்புவின் தன்மையை உணர்த்தும் போதும் நாக்கில் சிறிது நீர் ஊறலாம்... இது மாயா அனுபவம்.. இந்த மூன்று நிலைகளிலும் உப்புவின் சுவைக்கு நாக்கில் ஓரு உணர்வால் நீர் ஊறுகிறது... உள் நகைத்தல் மூலம் குண்டலினி உள் மூச்சில் சக்தி கீழிலிருந்து மேலும் வெளி மூச்சில் மேலிருந்து கீழும் ஒரு உறுத்தலான உணர்வு உணர கண்டோம்,, அது ஒரு அடையாளம் காண ஒரு மாயா அனுபவத்தை தோற்றுவிக்கப் பட்டு சற்று உணரப் பட்டது.. ஆனால் அது நிஜ அனுபவமாகாது.. ஆனால் அது போல ஒன்று.. பலத்தில் மிக மிக குறைவான ஒன்று....
சுவாச ஒழுங்கில் தலையிலும் உடலிலும் பெறப் படும் தேங்கிய உணர்வும், தேடும் உணர்வும் ( spot feeling and moving or seeking feeling ) ஏற்படுவது நிஜ அனுபவமான முதல் வகை அனுபவம்.. தேங்கிய உணர்வு என்பது பெறப்பட்ட ஆற்றல் ஒரு இடத்தில் சேர்ந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தேங்கிய நிலையில் இருப்பது.. தேடும் உணர்வு என்பது தேங்கிய உணர்வு ஏதாவது ஒரு இடத்திற்கு குறிக்கோள் அற்று நகர்ந்து செல்வது.. அப்படி பட்ட தேடும் உணர்வைதான் முறையாகப் பயன் படுத்தி மூலாதாரத்திலிருந்து பிடறி நோக்கி பயணப் பட வைப்பதால் மிகுந்த பலனை பெற முடிகிறது..
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் அதிகப்பட்ட ஆற்றலால் பிடறிக்கும் மூலாதாரத்திற்கும் இடையே நடை பெறுவது நிஜ அனுபவம்.. அது சுவாச ஒழுங்கோடு இணைந்தே நடைபெறும்.. சுவாச ஒழுங்கோடு உடன் இருக்கும் விழிப்பு நிலையே. அந்த குண்டலினி சக்தியை நடத்தும்.. அது நிஜ அனுபவ உணர்வாக இருக்கும்.. சுவாச ஒழுங்கு கெட்டநிலையில் ஒழுங்கின்மை நிலையில் அது மனதால் நடத்தப் பட்டு அது நிழல் அனுபவமாக இரண்டாம் வகை அனுபவமாக இருக்கும்.. எந்த சுவாச ஒழுங்கு பயிற்சியை போதுமான அளவு செய்யாமல், படித்ததையும் கேட்டதையும் வைத்து கற்பனையிலும், மனோபாவத்திலும் செய்தால் அது மாயா அனுபவமான மூன்றாம் வகை சேர்ந்ததாகும்.. அதனால் மிகுந்த அளவு ஏற்படும் கால விரையத்தால், சலிப்பு அடைந்த மனதால் பயிற்சி துண்டிக்கப்படும்..
இந்த குண்டலினி பயணத்தை பயணிப்பவர்கள் தாங்கள் உணர்வது நிஜ அனுபவமா அல்லது நிழல் அனுபவமா அல்லது மாயா அனுபவமா என்பதை தங்கள் விழிப்பு நிலையால் மட்டுமே அறிந்து எச்சரிக்கையுடன் பயிற்சியை மேற் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.. சுவாச ஒழுங்கின் மூலமாகவே மட்டும் பெறப் படும் நிஜ அனுபவம் தடை படுமானால் மீண்டும் விழிப்பு நிலையால் சுவாச ஒழுங்கிற்கு வந்து பின் குண்டலினி பயிற்சி பயில வேண்டும்.. அப்படி பயில வில்லை என்றால் விரக்தி ஏற்பட்டு பயிற்சியில் நிரந்தர பிளவு அல்லது தொடர்பு அறுந்த நிலை உருவாகும்.. பின் மீண்டும் ஒட்டவே ஒட்டாது... மனம் அதற்கு ஆயிரம் காரணங்களை கூறி வாழ் நாள் முழுமைக்கும் தடை விதித்து கொண்டே இருக்கும்.. விழிப்பு நிலையான அக குருவின் துணை நீங்கிய சமயம் அனைத்தும் பாழாகி விடும்.. இந்த பகுதியில் அனைத்து இடைஞ்சலுக்கான தீர்வு கூறப் பட்டு உள்ளது.. ஒரு அன்பர் எழுப்பிய கேள்வியால் இந்த பகுதி உருவானது.. அவருக்கு அநேக நன்றிகள்...

No comments:

Post a Comment