Saturday 27 June 2015

உளவுகள் பகுதி ஏழு - நாதத்தில் இயங்குதல்


மனிதன் அனிச்சையாக இயங்கி கொண்டு தான் இருக்கிறான். அப்படி இயங்கவில்லை யெனில் ஆற்றல் அற்றவனாய் செயல் இழந்து போவான்.. தேவையான ஆற்றல் அவன் இயங்குதலில் தானாகவே கிடக்கிறது.. ஆனால் ஒர் பேரியக்கத்திற்கான பேராற்றல் கிடைக்க தன் புத்தியின் மூலமே பெறமுடியும்.. மனிதன் புத்தியின் மூலம் பெற தொடங்கும் போது அது இச்சையான செயலான புத்தி ஆகிறது.. அனிச்சையில் இயங்கும் மனிதர்கள் அனைவரும் பெற்ற ஆற்றல்களில் வித்தியாசம் அதிகம் இருக்காது.. பெரும்பாலும் அனிச்சையான இயங்குதல் தூக்கத்தில் மட்டுமே நடை பெறுகிறது.. அளப்பறிய ஆற்றல் பெற்று பேரியக்கம் நடத்துவதற்கான வல்லமை பெற வேண்டும் எனில் இச்சையான இயங்குதலில் பழக வேண்டும்.. இச்சை என்பதனின் அழகான தமிழ் சொல் விழிப்பு என்பதாகும்.. விழிப்பிலே இயங்கும் பயிற்சியினை பார்க்கலாம்.. விழிப்பில் மட்டுமே மாறுபட்ட அளவற்ற ஆற்றலை பெற முடியும்..
இயக்கும் பிரபஞ்ச பேராற்றலின் தூண்டல் சதா காலமும் இரவு பகல் என்று பாராமல் நடந்து கொண்டே உள்ள நிலையில் அந்த இயக்கத்திற்கு இயங்க ஒவ்வொரு தேக திசுக்கள் தன் இயக்கும் தன்மையை விடுத்து தயார் நிலையில் இருக்கும் போது அந்த பேராற்றலுக்கு இயங்க தொடங்கி சக்தியை உள்வாங்க தொடங்குகிறது.. இதனால் தேக திசுக்கள் வலிமை அடைவதோடு மட்டும் அல்ல திசு உற்பத்தியும் பெருகிறது.. தேக வலிமையோடு மற்ற பஞ்ச பூதங்களும் வலிமை அடைகிறது.. நல்ல உணவாலேயோ,நல்ல மூலிகை மருந்துகளாலேயோ,அடைவதை காட்டிலும் பல ஆயிரம் மடங்கு அடையலாம் என்பது பயிற்சியின் மூலம் உண்மை வெளிபடும்.. இந்த பிரபஞ்ச இயக்கம் எவ்வாறு 
உணர்வது ?.. அதுதான் இறைவனின் பெருங்கருணையான பிரபஞ்ச சக்தி இயக்கமான நாதம் தான்.. நாதமே தான்.. நாதம் மட்டுமே தான்.. நாதம் ஒரு பரிசுத்த இயக்க சக்தி.. அந்த சக்திக்கு அதி மிஞ்சிய நிலையில் ஒருமனிதன் இயங்க தொடங்கி விட்டால் நாத இயக்க சக்தியிலிருந்து அளப்பரிய ஆற்றலை பெறலாம்.. இயங்குதல் ஒரு மிக பெரிய கல்வியை கற்றுக் கொடுக்கும் குருவாகவும் நாதம் உள்ளது .. மற்றபடி உலகியல் குருக்களால் முடியவே முடியாது.. பெரும்பாலோர் இயக்குபவனாக ஒருவனை ஆக்கி சக்தி அற்ற நிலைக்கே அழைத்துசெல்வார்கள்.. வசீகர புத்திமதிகளும்,சொல்வித்தைகளும், பேச்சு சமர்த்தியங்களும் வீர, வேடிக்கை,சிரிப்பு வசனங்களும்,ஒருவனை இயக்குபவனாகவே மாற்றி நாசத்திற்கு அழைத்து செல்லும்.. நாதத்திற்கு அழைத்து செல்ல பட மாட்டார்கள்,, நாதத்தை பற்றி பேசுவார்கள்.. நாதத்தில் இயங்குதல் என்பது அன்னவருக்கு தெரியாது.. இயங்காத நிலையில் நாதம் உதவாது..
தூக்கத்தில் நாம் இயங்கும் தன்மையில் உள்ளோம்.. அது அனிச்சை செயலாக உள்ளதால் நம் விழிப்பு நிலைக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.. அதி விழிப்பு நிலையில் உள்ள இயங்கும் தன்மையில் மட்டுமே அளப்பறிய ஆற்றலை பெறமுடியும் என்பதை நன்கு அறிந்ததே.. இதிலிருந்து என்ன தெரிகிறது.. தூக்கத்தில் விழிப்பு நிலை பெற வேண்டும் என்ற கட்டாயம் ஒன்று நமக்கு புலனாகிறது.. இதை தான் சித்தர்கள் தூங்காமல் தூங்கும் நிலை ஒன்றை கண்டு பிடித்தார்கள்.. இப்பொழுது தூங்குவதற்கு முன் கட்டிலை ஒரு இறைவன் சன்னிதானமாக நினைத்துக் கொண்டு தூங்கும் அறையை சுத்தப்படுத்தி ஒரு கோவிலாக நினைத்துக் கொண்டு அமைதியாக கால்களை நன்கு நீட்டி படுக்கவும்.. இறைவனை அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டு தலை நடு பகுதியிலே ஒலிக்கும் நாதத்தோடு இணைத்துக் கொள்ளவும்.. எந்த காரணம் கொண்டும் அந்த இணைப்பை துண்டிக்க விடக் கூடாது.. இப்பொழுது மெல்ல மெல்ல தேகம் இறுகிய நிலையில் இருந்து தளர்த நிலைக்கு வர தொடங்கும்.. இறுகிய நிலை என்பது இயக்கத்திற்கான தேகம்.. தளர்ந்த நிலை என்பது இயங்க தயாராகும் தேகம்.. தளர தளர மிக எச்சரிக்கையாக நாத ஒலி இணைப்போடு இருக்க வேண்டும்.. ஒரு குறிபிட்ட தளர்ந்த நிலையில் நாத ஒலி இணைப்போடு இருக்கும் பொழுது அந்த நாத அதிர்வு அலைக்கள் ஓர் அணுத்துவ ரீதியான ஒரு உணர்வினை தேகம் முழுமைக்கும் பரவ செய்யும்.. இதை ஆங்கிலத்தில் Eufeeling என்று சொல்லுவார்கள்.. இதை தான் இதில் தான் தேகம் இயங்கும் தன்மைக்கு வந்து விட்டது எனலாம்.. இந்த அணுத்துவ உணர்வில் இருந்தாலே அரை மணி நேரத்திலேயே தேகத்தில் பத்து பாட்டில்கள் இரத்தம் ஏற்றியதை போல் ஒரு சுக உணர்வு கிடைக்கும்.. இது ஆரம்பத்தில் சில தோல்விகளை கொடுத்தாலும், முயன்றால் எளிதில் கைகூடும்..
அடுத்தாக இரண்டாவது பயிற்சி.. இது சற்று தாமதமாக சித்தி ஆனாலும் எளிதாக கைகூடும்.. அமைதியாக உட்காருங்கள்.. மூச்சை ஆழமாக இழுத்து விடவும்.. மூச்சை உள் இழுக்கும் போது தேகம் ஓர் இறுக்கமான ஒரு இயக்க நிலையில் இருக்கும்.. மூச்சை வெளியே விடும் பொழுது,தேகம் ஒரு தளர்வான ஒரு இயங்கும் தன்மையை நோக்கி நகரும்.. மூச்சை வெளிவிடும் போது அதி விழிப்பு நிலையில் இந்த தளர்ந்த நிலையை மேலும் மேலும் தளர வைக்க முனைய வேண்டும்.. பாதி தூக்க நிலையில் தேகம் எந்த 
தளர்ந்த நிலையில் வருகின்றதோ அந்த தளர்ந்த நிலைக்கு வர முயல வேண்டும்.. இந்நிலையில் தலைநடு பகுதியிலே
ஒலிக்கும் நாத இணைப்போடு இருக்க இருக்க மேலே சொன்ன அணுத்துவ உணர்வுக்கு செல்லலாம்.. அந்த அணுத்துவ உணர்வே quantum energy என்றும் ஆணுத்துவ ஆற்றல் என்றும் சொல்லப் படுகிறது.. அணுத்துவ ஆற்றல் என்பது தேகத்தில் கலந்து கொள்வதற்கு ஏற்ற பிரபஞ்ச பேராற்றல்... அதிலே குறிப்பிட்ட அளவான ஆற்றல் மட்டும் அல்லாது அளவற்ற ஆற்றலை பெறலாம்.. வாழ்வில் கடினப்பட்டு சோர்ந்து ஏமாந்து போன மனித குலம் இப்படி ஓர் நேர் சுலப வழியை நம்பாது.. எனினும் என் கடமைக்கு சொல்லுகிறேன்.. நாதம் என்பது கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம்.. அதில் அலட்சியம் இலட்சியத்தியத்தை கெடுக்கும்.. இந்த நடு இரவு நேரத்தில் பொறாமை கொண்ட தேவர்களும் அசுரர்களும் தூங்கி கொண்டு இருக்கும் நேரம் தான் சரியான நேரம் என நான் நடு இரவில் இதை பதிவு செய்கிறேன்.அதுவும் சரியான பாது காப்பின் கீழ்.. நீங்கள் சிரிப்பது எனக்கு தெரிகிறது.. இது பிரம்ம ரகசியம் போன்றது.. அதற்கு எவ்வளவு இடையூறுகள் வரும் என்பதை புராணங்களை படித்து பார்த்தால் நன்கு விளங்கும்.. எப்படியோ பதிவாகிவிட்டது.. மற்றவை உங்கள் கைகளில்..

3 comments:

  1. உளவுகள் பகுதி ஏழு - நாதத்தில் இயங்குதல்
    It is very interesting. I want to understand and practice .Kindly advise and guide me. May God bless you

    GANESAN R
    Email.ganesarbi4@gmail.com

    ReplyDelete
  2. நீங்கள் சொல்லும் நாதம் இரவு நேரத்தில் கேட்கும் ரிங்காரம் போல் என் காதில் கேட்கிறது அதைத்தான் குறிப்பிடுகிறீர்களா?

    ReplyDelete