Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி பத்தொன்பது


நுண் அறிவு, பரு அறிவு அடையாளம் காணல்..
**********************************************************************
வெளி மூச்சாகிய சூரிய கலையில் விழிப்பு நிலையில் மெல்ல வெளி விட்டு பழகும் பொழுது எண்ணங்கள் சிதைவு அடைந்து
அது உணர்வாய் மாறி காற்று என்ற புத்தி என்ற பூதத்தோடு கலக்கின்றது.. பழக பழக மனிதன் உணர்வு பெருக்கம் அடைந்து நுண்ணிய உணர்வுகளையும் உள்ளும் புறமும் உணரும் நிலைக்கு வருகிறான்.. வெளியே நுட்பமாக ஆராய்யும் மனிதன் ஆராயும் பொருளாய் மாறி, அதுவாகவே மாறி, தன் இருப்புதன்மை முழுவதும் அப்பொருளிடம் இழந்து தன் உணர்வுகள் அனைத்தையும் இழக்கிறான்.. ஆராய்ச்சியில் சாதித்தேன் என்ற புகழோடு தன் தேகத்தை இழந்ததோடு, தன் இருப்பு தன்மையும் இழக்கிறான்.. உணர்வுகள் அற்ற தன் இருப்பு தன்மை இயல்பாகவே அடுத்த பிறவியில் அப்பொருளாகவே பிறவி எடுக்கிறது...
அப்படியானால் விஞ்ஞானம் என்ற ஆராய்ச்சி பண்ணக்கூடாதா என்ற கேள்வி.. ஆர்யபட்டர் எந்த எந்த விஞ்ஞான ஆராய்ச்சி செய்து மிக பெரிய வான சாஸ்திரத்தை கண்டு பிடித்தார்.. தன் உள் உணர்வு பலத்தால் வெளியே இருப்பவைகளின் ஒவ்வொன்றின் செயல் பாட்டின் நுண்ணிய உணர்வுகளை உள் வாங்கும் சக்தியால் அனைத்தையும் அறியும் ஆற்றலை பெற்றார்.. தன் இருப்பு தன்மையில் உணர்வு மயமாய் இருக்கும் பொழுது, அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் இருக்கிறது என்ற விதிக்கு ஏற்ப அண்ட சராசரமும் அறியக்கூடிய நுண்ணுணர்வு மனிதன் பெறுகிறான்..
அதைவிட முக்கியமாக காலம் கடந்த உணர்வும் வருகிறது.. இறந்த கால உணர்வும் எதிர் கால உணர்வும் வருவதால் இறந்த காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பதும், எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதும் தெரியவருகிறது.. தன் தேகத்தில் என்ன என்ன மாற்றங்கள் வரும், வருகிறது என்பதை துல்லிதமாக கணக்கிடும் நுண்ணுணர்வு வருகிறது.. இந்த நுண்ணுணர்வுக்கு இணையான ஆராயக்கூடிய விஞ்ஞான கருவிகள் எதுவுமே இல்லை.. நுண்ணுணர்வு தரும் நுண்ணறிவு விட மிஞ்சிய ஒன்று உலகில் எதுவும் இல்லை..
சூரிய கலையில் மெதுவாக மூச்சை வெளி விட்டு மூச்சின் வெளி பாய்ச்சல் நீளத்தை குறைத்து, மூச்சை சற்று வேகமாக (குருவின் துணையோடு மட்டுமே) உள் வாங்கி உள் பாய்ச்சல் நீளத்தை அதிகப் படுத்தி, அதனால் ஏற்படும் சக்தி லாபத்தின் மூலம் அளவற்ற ஆற்றலை பெற முடியும் என்ற சித்தர்களின் கண்டு பிடிப்பை சென்ற பகுதியிலே பார்த்தோம்.. அப்படி பயிலும் பொழுது முக்கியமாக இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும்..
எச்சரிக்கை :--- சூரிய கலை மதி வழி சந்திர கலையில் ஏற்படும் அளவற்ற ஆற்றலை மேலேற்றி விழிப்பு நிலைக்கு அழைத்து செல்ல வேண்டும்.. அதாவது சூரிய கலையில் வெளி மூச்சின் சமயம் நமது இருப்பு தன்மையின் ஓரிரு விநாடிகளில் ஏற்படும் அனுபவத்தை மனம் கவனித்தால் மட்டுமே நுண்ணறிவு ஏற்படும்.. இல்லையேல் பரு அறிவு மட்டுமே ஏற்படும்.. பரு அறிவு என்பது வெளி பொருள்களில் நாடும் நாட்டமே.. வெளி நாட்டம் அதிகமாக தொடங்கும்.. அலேக்ஸாண்டரை போல உலகை வெல்லும் எண்ணமே உருவாகும்.. கிருஷ்னரை போல, கிருஸ்துவை போல நுண்ணறிவு கிடைக்காது.. ஆகவே சூரிய கலையில் 
வாசி பயிலும் பொழுது, மனம் இருப்பு தன்மை மட்டுமே இருக்க வேண்டும்.. ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் பின் மனம் இருப்பு தன்மையின் மகிமையை உணர தொடங்கி விட்டால், அதை பற்றிக் கொள்ளும்.. நுண்ணறிவு பருஅறிவாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நன்றாக கவனியுங்கள் மேற் சொன்ன பயிற்சியினை நாதஸ்வர வித்துவான் வாசிக்கும் பொழுது அதைதான் செய்கிறார்கள்.. ஆனால் அவர்கள் மனம் இருப்பு தன்மையில் லயித்து இருக்க வாய்ப்பே இல்லை.. அவர்களுக்கு பரு அறிவே பெருத்து இருக்கும்.. வாழ்க்கையில் சாதாரண மனித தரத்துடன் தான் இருப்பார்கள்.. ஆகையால் தான் மனம் என்ற கனல் ஆற்றல், இந்த பயிற்சியின் சமயம் கனலை காற்று என்ற நுண்ணறிவாகவும், நீர் என்ற பரு அறிவாகவும் மாற்றும் தன்மை உடையது.. ஒரு உணவினை உண்ணும் பொழுது, நுண்ணறிவாளர்கள் மிகுந்த கவனத்துடனும் அதிக உணர்வோடும் உண்டு பெரிய நிறைவினை பெறுவார்கள்.. ஆனால் பரு அறிவு இதற்கு மாறானது.. ஒன்றை அடிக்கடி அனுபவித்தும் நிறைவு பெறாமல் இருப்பார்கள்.. தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்கள் இந்த பரு அறிவாளர்களே.. பரு அறிவாளர்கள் ஆயுள் காலம் குறைவாகவே இருக்கும்.. நுண்ணறிவாளர்கள் தாங்கள் இவ்வுலகில் பூரண நிறைவு பெறுவதால், தாங்கள் நினைத்த நேரத்தில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் ஆற்றலை பெறுவார்கள்.. இந்த வித்தியாசத்தை நீங்கள் உணர முடியவில்லை என்றால், எந்த பயிற்சியும் செய்ய வேண்டாம்.. எதிலும் விரைவாக நிறைவு பெற விட்டால் அது எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.. நிலைமை முற்றி மீளமுடியாள நிலைமைக்கு வருமுன்னால் முறையற்ற வாசி பயிற்சியினை தவிர்த்து விடுங்கள்.. நுண்ணறிவு பெருக பெருக அது பேரறிவு நோக்கி நகரும்.. பேரறிவாக இருப்பவன் தான் இறைவன்.. இறைநிலை தரிசனம் நுண்ணறிவாளனுக்கே.. இனிமேல் நுண்ணறிவு பெறுவோம்... இறைநிலை பெறுவோம்.. 
வாழ்வோம் வளமுடன்...

No comments:

Post a Comment