Saturday 27 June 2015

உளவுகள் பகுதி ஒன்று- நீங்கா நிலையில் நீடித்தல்


எந்த ஒரு பயிற்சியும் ஒரு குறிப்பிட்ட திறனும், அந்த அந்த திறனுக்கு ஏற்றால் போல்
அந்த திறனில் நீடிக்கும் போதிய கால அளவும் இருந்தால் மட்டுமே அந்த பயிற்சி சித்தி பெறமுடியும்.. சித்தி என்பது சி+தி எனலாம்.. தி என்பது த்+இ என பிரிந்து முழுமையில் இருத்தலை குறிக்கும்.. 'சி' என்ற மனம் என்ற பூதத்தில் நெருப்பு ஆற்றல் பூரணமாகும் அளவிற்கு அடைவதே சித்தி பெறுதல் என்றாகிறது.. ஒரு பானை தண்ணீரை ஒரு மெழுகு வத்தி சூட்டில் எப்போது கொதிக்க வைப்பது ? கட்டைகளில் வைத்து எரித்தால் ஒரு மணி நேரத்தில் கொதிக்க வைக்கலாம்.. கட்டைகள் குறைவாக இருந்தால் அதிக நேரம் எடுக்கும்.. எதுவும் நீங்காத உஷ்ணத்தில் ஒரு மணி நேரமோ அதற்கு மேலோ நீடித்தால் மட்டுமே கொதி நிலையை அடைய முடியும்.. நமது பயிற்சிகளும் நீங்கா நிலையில் தோய்வு அடையா நிலையில் நீடித்தால் மட்டுமே கொதி நிலை என்ற சித்தி பெற முடியும்.. பயிற்சியில் திறன் என்ற திறமையும், கால நீடிப்பும் இணைந்தால் மட்டுமே சித்தி சாத்திய மாகும்.. காட்டு தீ போன்று பெரும் நெருப்பிலே, வேண்டிய கால நீடிப்பு இல்லையேல் கொதிநிலை கிடைக்காது.. மெழுகு வத்தி சூட்டில் நூறு ஆண்டுகள் ஆனாலும் கொதி நிலை கிடைக்காது.. கரையான் புற்று தேகம் முழுமையும் சூழ தவம் இருப்பவர்கள்,மெழுகுவத்தி சூட்டில் தவம் செய்பவர்கள்.. சாதாரண கண்ணப்பர் ஏழே நாட்களில் சிவதரிசனம் கண்டவர்.. அவர் காட்டு தீ போன்ற பெரும் நெருப்பிலே தவம் கண்டு சித்தி அடைந்தவர்.. வீரம் தீரம் இரண்டும் மிக முக்கியம்.. எந்த ஒரு பயிற்சியிலும் குறைபாடு இல்லை.. அது நல்லதா இது நல்லதா என குழம்ப வேண்டாம்.. எல்லாம் சிறந்ததே.. அதில் மர்மமாக புதைந்துள்ள வீரமும் தீரமும் பெருக்கம் அடையவில்லை என்றால் சிவனிடமே யோக பயிற்சி கற்றாலும் பலன் தராது, சித்தி கிடைக்காது.. அப்படி புதைந்துள்ள மர்மங்களோடு இணைவதே மர்ம யோகம்.. மர்ம யோகம் ஒரு காரண யோகம்.. ஏனையவை காரியப் பயிற்சிகள்.. காரியப் பட்டதே தோற்றத்திற்கு வரும்.. காரண பயிற்சிகள் மர்மமாக மறைந்தே இருக்கும்.. காரண பயிற்சிகள் நித்தியத்தை உருவாக்கும்.. காரிய பயிற்சிகள் அநித்தியத்திற்கு வழி வகுக்கும்.. மர்ம யோகியான நிறைநிலை மனிதன் நித்திய ஆற்றலும் நீடித்த திறனும் உடையவன்.. மற்ற யோகிகள்,தவசிகள், முனிவர்கள் போல், இருந்து மறைந்து காணாமல் போனவர்கள் போல் அல்ல.. மர்ம யோகம் வெளிப் படுத்தும் வீரமும் தீரமும் என்றும் மறவாது இருக்க வேண்டுகின்றனன்.. எதாவது புரிய வில்லை யென்றால் தயங்காது கேள்விகள் கேட்டால் தவறாமல் பதில் கிடைக்கும்.. சித்தி அடைவதற்கான வீரமும் தீரமும் பெருக்கம் அடைவதற்கான ஒரு எளிய பயிற்சியை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.. ஒரு எளிய பயிற்சியாயினும் அது கண்ணப்பரை போன்றோர் காட்டு தீயில் புகுந்ததை போலாகும்.. அச்சம் கொள்ள தேவை இல்லை.. காரணம், காரண பயிற்சிகள் அனைத்தும் தண் கனலையே தரும்.. வெங்கனலில் வீணாய் போவதற்கு அங்கு இடமே இல்லை.. மூல சூடு தேக சூடு, மூளை சூடு போன்றவைகளுக்கு இடமே இல்லை.. பஞ்ச பூத தன்மைகளை அறிந்து செயல் பட்டாலே போதும்..அவ்வளவே !!

No comments:

Post a Comment