Friday 26 June 2015

பகுதி முப்பத்தி ஒன்பது :-- சித்தராவது எப்படி ?

அமைதி அல்லது ஓய்வின் உன்னத நிலை...
ஓய்வின் உன்னதத்தை தெரியாதவர்கள், ஆன்மீகத்தில் ஓரளவுக்கு மேல் துளியும் முன்னேற முடியாது.. அந்த ஓரளவுக்கு முன்னேறியவர்கள் தான் இந்த உலகம் கண்ட சில உத்தமர்கள்.. ஆனால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்று கனவு கண்டார்களோ, அவற்றை துளியும் அடையாமல் சென்று விட்டனர்.. ஒரு குறிப்பிட்ட அளவே தன்னை அறியாமல் எதோ ஒரு பிரபஞ்ச உந்துதலால் அடைந்தார்களே தவிர, தாங்கள் உயர்ந்த நிலையை விழிப்பு நிலையால் உணர முடியாமல், அதில் உள்ள நுணுக்கங்களை அறிய முடியாத காரணத்தால், அவற்றை வெளிப்படுத்த தவறியதால், தனக்கு பின்னால் தன்னை போல் தன் சீடர்களில் ஒருவரையேனும் உருவாக்க முடிய வில்லை.. காரணம் தான் அடைந்த உயர்ந்த நிலை, தனக்கே தெரியவில்லை.. அவர்கள் தன் உயர்வுக்கான நுணுக்கங்களை, முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.. தானே அனிச்சையாக குருவாகி முடிவில் அழிந்தார்களே தவிர தனக்குள் இருக்கும் அக குருவை பயன் படுத்தி அக்குருவின் மூலம், மேல் நுணுக்கத்தை அறிய தவறி விட்டார்கள்..
ஓய்வு என்பது இறைவனின் வரபிரசாதம்.. இறைவனின் வடிவே ஓய்வு தான்.. மரணம் ஒரு ஓய்வு தான்.. சிவனே மரண தேவதை...ஆனால் அதையும் தாண்டிய ஒரு ஓய்வு நிறை நிலை மனிதனுக்கு தேவை.. அதனை பின்பு பார்ப்போம்..ஆனால் இதற்கு முரணாகத் தான் கடவுளை நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.. இதுவே கடவுளுக்கு எதிரான செயல்.. அத்தனை மதங்களும் இந்த ஒரு விசயத்தில் தோற்று போய் விட்டன.. சிவனை யோக நிலையில் மிகுந்த ஆழ்ந்த நிலையில் காண்பவர்கள், அவர்கள் இயக்க நிலையில் உலகத்தையே புரட்டி போடுவார் என்று எதிர் பார்ப்பது முரண் ஆனது.. எவர் ஒருவர் அவருடைய ஆழ்ந்த அமைதியை, உள் வாங்கி இசைந்து வாழ்வதின் மூலம். பிரபஞ்ச ஆற்றலை பெறுகின்றார்களோ, அவர்கள் மட்டுமே சிவன் அருளை பெற்றவர்களாவார்கள்..
சிவனோ அல்லது உலகம் கற்பித்துக் கொண்ட வேறு இறைவனோ, உலகத்தில் இயங்கி எந்த ஒரு காரியத்தை செய்ய இயலாது.. இது ஒரு முற்றிலும் முரணான சொல்லாக இருக்கலாம்.. எல்லோரும் கொதிப்பு அடையலாம்.. ஆனால் இறைவன் நடத்துகின்ற உண்மை திரு விளையாடலோ வேறு விதமாக உள்ளது.. எல்லாம் செயல் பாடுகளும் இறைவனின் பேரமைதியை உள்வாங்கிய ஒன்றால் பிரபஞ்ச ஆற்றலை இசைந்து வாழ்ந்து அந்த ஆற்றலை பெறக்கூடிய விதத்தில் மட்டுமே எதுவும் நடைபெறுகிறது.. இறைவனை ஓய்வின் அடையாளமாகவே எந்த மதங்களும் மறை முகமாக வைத்துக் கொண்டு இருக்கிறது.. புத்தருடைய தியான உருவம் சிவலிங்கம் ஏசுவின் சிலுவையில் செயலற்ற நிலை, இஸ்லாமியர்களின் சமாதி அமைப்பின் வழி பாட்டு நிலை போன்ற பல உதாரணங்களை காட்டலாம்..
முடிவில் இறைவன் நிலையே ஓய்வு அல்லது அமைதி ஆகும்.. அது பிரபஞ்ச ஆற்றலை அளவற்ற நிலையில் இசைந்து வாழ்ந்து உள் வாங்கும் நிலையில் உள்ளது.. அமைதியை மையப்படுத்தி பேராற்றலை உள் வாங்கும் திறமை ஒன்றால் மட்டுமே உலகில் உத்தமர்கள் தோன்ற முடியும்.. இறைவனை அமைதியின் வடிவாய் மட்டுமே காண வேண்டும் என்பதே சரியான முறை.. ஆனால் இதற்கு புறம்பாகவே எல்லாம் நடக்கிறது.. அன்பே சிவம் என்பது காரியப்பட்ட ஒன்று.. ஆனால் அமைதியே சிவம் என்பது காரணப்பட்ட ஒன்று.. காரணப்பட்டு ஒன்று பலப் படாமல் காரியப் பட்ட ஒன்று நிகழாது.. அமைதியே சிவம் என்பதிலிருந்து தான் அன்பே சிவம் தோன்றி உலகம் காரியப் படுகிறது..
இந்த அமைதி அல்லது ஓய்வு இரண்டு நிலையில் உள்ளது.. ஒன்று, ஏற்பட்ட ஓய்வு.. மற்றொன்று ஏற்படுத்திய ஓய்வு..
ஏற்பட்ட ஒய்வு ஒன்றையே, கண்டுதான் இதுவரை மகான்கள் தோன்றி இருக்கின்றார்கள்.. அதனால் தான் ஒரு வரைக்கு மேல் செல்ல முடியவில்லை.. ஆனால் ஏற்படுத்திய ஓய்வுக்கு எல்லையே இல்லை.. அதனால் பெறும் ஆற்றலுக்கும் எல்லையே இல்லை.. ஏற்படுத்திய ஓய்வு அல்லது அமைதியின் மூலம் அளவற்ற ஆற்றலை பெற்றால் மட்டுமே ஒரு நிறைநிலை மனிதன் உருவாக முடியும்.. அவன் ஒருவனே இன்றைய ஆணவ உலகத்தை திருத்த முடியும்.. வேறு இதுவரை உலகம் கண்ட, காணும் உலக குருமார்களின் போதனைகள், துளியும் உதவாது என்பது கண்கூடாக காணும் காட்சி... நிறை நிலை மனிதன் அடைவதற்கான ஒரு பெரும் அமைதி புரட்சியை தொடங்கி செயல் படுத்த ஆவன செய்வதின் மூலம் அன்புடையவர்களாக ஆவோம்...அதனால் சிவமாவோம்.. அமைதியே சிவம் என முதலில் உணர்ந்து அன்பே சிவம் என நிலைக்கு உயர்வோம்...

No comments:

Post a Comment