Saturday 27 June 2015

உளவுகள் பகுதி ஆறு - இயங்காதவனுக்கு இறுதி இறப்பே


தலைப்பு பகுதி சற்று பயமுறுத்தலுமாக,அமங்களமாக இருந்தாலும் உண்மைக்கும் உறுத்தலுக்கும் அது உதவுகின்றது.. ஆதி தொடங்கி,அந்தம் வரை என்றும் நிலையாய் இருக்கும் பிரபஞ்ச பேரறிவின் ஒரு தூண்டல் இயக்கம் செயல்பட அந்த இயக்கத்திற்கு இயங்கி பல உயிர்களின் தோற்றம் எவ்வுலகிலும் வந்தது என்பதை நாம் அறிந்ததே.. தோன்றிய அவ்வுயிர்கள் மற்ற சார்புகளை இயக்கத் தொடங்கிறது.. ஒவ்வொரும் உயிரும் இயக்கத் தொடங்கியதால் வல்லான் வகுத்ததே வாய்கால் என ஆதிக்க உணர்வும், ஆதிக்க உணர்வுகளுக்கு இடையே போராட்டங்களும் தோன்றின.. தோன்றிய அந்த ஆதிக்க உணர்வு மட்டும் மறையவே இல்லை.. தொடர் நிலை ஆகிவிட்டன.. போராட்டங்கள் மட்டும் அதன் மூல சக்தியாகிய கடவுளை போல நித்திய தன்மை அடைந்து விட்டன போலும்.. ஆனால் போராடியவன் மட்டும் நிலையாமை என்ற மரணத்தை அடைந்து விட்டான்.. என்ன விசித்திரம்.. இவ்வுலகில் போராளிகள் இல்லாவிட்டாலும், இவ்வுலகம் என்றுமே ஒரு போர் களம் தான்.. இந்த போர் களத்தில் தான் நித்திய வாழ்வு வாழும் நோக்கத்தில் ஒவ்வொரு உயிரும் பிறப்பு எடுக்கிறது.. நோக்கம் நிறைவேறுகிறதா என்பது வேறு விசயம்.. மடிந்து போகாமல், முடிந்த, நிலைத்த நிலைக்கே செல்ல தனிபெரும் கருணை மட்டுமே உடைய இறைவன் தன் நிலைத்த தன்மையின் சாயலை சாய் தரிசனமாக ஒவ்வொரு மனிதனின் தலைநடு பகுதியில் தந்து பதித்து வைத்து இருக்கிறான்..அவனே நம் பதியான இறைவன்.. தலையில் பதித்ததில் தலைபடாமல் (செயல் படாமல்) தரைக்கு அடியில் இடம் தேடி மாய்கிறான்.. சாய் என்பதை பிரித்தால் 'ச்' + ஆய் என பிரியும்.. 'ச்' என்ற சொல் நிகழ் காலத்தை குறிக்கும்.. சாய் என்பது நிகழ் கால மாய் (ஆய்) இருப்பது என்பதாகும்.. நிகழ் காலத்தில் இருப்பவனுக்கு இறந்த காலம் கிடையாது.. நிகழில் இருப்பவனுக்கு இறப்பே கிடையாது.. சிவன் என்பவன் என்றும் நிகழில் (நிகழ் காலத்தில்) இருந்து இறப்பை அழித்து நித்தியத்தில் உள்ளவன்.. அதனால் அவனை (இறப்பை) அழிக்கும் கடவுளாக கொள்வர்.. சிவம் நிலை என்பது நிகழில் நித்தியத்தில் உள்ள மார்க்கம் என்பது.. சிவ கலப்பு என்பது நிகழில் நித்தியத்தில் கலக்கும் முயற்சி ஆகும்.. 'ச்சு' என்று ஆழமாக தும்பும் போது அந்த வினாடியில் எந்த எண்ணங்களும் இல்லாமல் பூரண செயல் வடிவாய் இருப்பதை 'ச்' என்ற எழுத்து குறிக்கிறது.. 'க்' என்ற இறை ஆற்றலிலே 'ங்' நிலையிலே வடிவம் எடுத்த குழந்தை 'ங்கா' 'ங்கா' உயிர் குரல் எழுப்பி 'ச்' என்ற நிகழ் நிலைக்கு வருகிறது.. 'ச்' இல்லையேல் நிகழ் நிலைக்கு வராமல் இறந்த நிலையில் குழந்தை வடிவம் இருக்கும்.. அப்படி குழந்தை நிகழ் நிலைக்கு வருவதற்கு அதன் தலை நடு பகுதி நிகழ்நிலை தூண்டல் மையமான நாதம் என்ற இறை அமைப்பு தான்.. மனிதன் பிறப்பதும் வாழ்வில் நீடிப்பதும் இந்த நாத இணைப்பால் தான்.. ஆன்மீக ஆய்வாளர்களின் மிக பெரிய கண்டுபிடிப்பு எண்ணங்கள் இறந்த காலத்தை தொடர்பாக வைத்துக்கொண்டிருப்பது என்பது தான்.. கடந்த செயல்கள் அதாவது இறந்த கால செயல்களை மட்டுமே எண்ணிக் கொண்டு இருப்பது தான் எண்ணங்கள்.. அந்த எண்ணங்களின் ஆதிக்கத்தால் சிறுக சிறுக மனிதன் நாத இணைப்பை இழந்து இறந்த காலமாகி விடுகிறான் முடிவில்.. இந்நிலை நீங்கவே, நீங்கா நாத இணைப்பிற்கான முயற்சியை சிவ கலப்பு சிவ யோகம் எடுத்துரைக்கிறது.. 
வெறும் சுரிதி பெட்டியிலிருந்து வரும் ஓசை போன்றதொரு ஒலியில் அத்தனை ஆற்றல்களா? அந்த ஒலி மட்டுமே உள்ளிருந்து ஓங்கும் ஒரே ஒலி. ஏனையவை யாவும் ஒலி அல்ல ஓசை என்பதை முன்பே அறிந்ததே.. ஓசை என்பது வெளியிலிருந்து உள்ளே ஒடுங்கும் ஓசைகள்... ஒடுங்குவதும் ஓங்குவதுமான செயல் பாடுகளின் வித்தியாசத்தை அறிய வேண்டும்.. ஒடுங்குவதில் ஓசையின் அலைகள் நம் திசுக்களை தாக்கி அவற்றை பாதிக்கும்.. பேரிடி போன்ற மிக பலத்த ஒசை மரணத்தை உண்டாக்கும் என்பதை அறிந்ததே.. ஆனால் உள் இருந்து ஓங்கும் ஒரே ஒலியான நாதம் நம் தேக திசுக்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி தேக திசு உற்பத்திக்கு மிகவும் உதவுகிறது.. நாத ஒலி ஒங்கல் குறைய குறைய திசுக்களின் உற்பத்தி குறைந்து குறைந்து முடிவில் தேகத்திற்கு மரணம் வருகிறது.. இந்த கருத்தை மையமாக வைத்து Resonance music
என்ற நிகழ்சிகளை வெளி நாடுகளில் பிரபல படுத்தி வருகிறார்கள்.. அவைகளால் ஒரு பலனும் இல்லை.. அவை உள்ளிருந்து ஓங்க எதுவும் செய்யாது.. நாத ஒலி தவிர இந்த பிர பஞ்சத்தில் எதுவும் இல்லை.. இல்லவே இல்லை..
அந்த நாதஒலி இயக்கத்தை அனுமதித்தால் மட்டுமே நம் தேக திசுக்கள் இயங்கி திசு உற்பத்தி நடக்கும்.. அனுமதி மறுப்பது எது? நம் எண்ண ஆதிக்கங்களே.. உற்று கவனித்து பார்க்கையில் ஒவ்வொரு எண்ணமும் ஒரு ஒசையோடு கலந்தே வருகிறது.. அந்த ஓசைகள் நாத ஒலிக்கு எதிர் செயல்கள் செய்து ஓங்குதலுக்கு தடையாக ஒடுங்குதலை செய்து தேகத்தை பாதிக்கிறது..நாத ஒலிக்கு தேக திசுக்கள் இயங்குவதையே இயங்குதல் என்பது.. இந்த இயங்குதலில் நுழையவும் இயங்குதலில் ஓங்கலுமான முயற்சியினை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.. இன்று அவ்வளவே..

No comments:

Post a Comment