Saturday 27 June 2015

பகுதி 7 - சிவ கலப்பு சிவ யோகத்தில் மண் என்ற வடிவ தேகமும் நீர் என்ற இயக்கமும்

சிவ கலப்பு சிவ யோகத்தில் 'ந' என்ற தேகமும் 'ம' என்ற எண்ண பதிவுகளின் ஆதிக்க இயக்கமும் ஆராய வேண்டிய திருக்கிறது.. மண் என்ற வடிவ தேகம் ஆகாய பேரறிவின் பிரபஞ்ச
சக்தியினால் ஆனது.. ஆகாயத்திலும் மண்ணிலும் ஒரே பிரபஞ்ச சக்தி இருந்தாலும் இவை இரண்டின் செயல் பாடுகள் ஒன்றுக்கு ஒன்று எதிரானது.. தேக வடிவம் ஆகாய பேரறிவின் தூண்டலால் 
புறம் என்ற வடிவ அமைப்புகளை, எதிர் கொள்ள உறவாட பெற வேண்டிய அவசியத்தால், தேக வடிவம், வடிவ அமைப்பு உடைய மண்ணில் தோன்றியது..மண் என்ற பூதம் ஒன்றே உயிர் உள்ள
உயிர் அற்ற வடிவங்களை உருவாக்கும் தகுதி பெற்றிருக்கிறது.. மண்ணில் மட்டுமே உயிர் இனங்கள் தோன்றும்.. வடிவங்களான பூமி சூரியன் மற்ற கோள்கள் எவ்வாறு தோன்றின ? பிர பஞ்ச பேராற்றல் பல பல கோடனுகோடி வருடங்களாக ஊறி வருகின்ற போது அவைகளின் அணு இறுக்கமே இந்த மண்.. மண்ணின் இறுக்கம் தளர்ந்த நிலை தான் நீர்.. நீரின் தளர்ந்த நிலைதான் மனம் .. மனதில் இந்த இறுகிய வடிவங்களும் ஆகாய மென்மை சக்திகளும் கலந்தே உள்ளதால் மனதில் மென்மைக்கும்
வன்மைக்கும் இடையே போராட்டங்கள்.. போராட்டம் இல்லா ஒத்த நிலையில் உள்ள மனமே சுத்த மனம்... சுத்த மனம், ஒத்த நிலை மனம் என்பது சுத்த சக்தியாக இருக்கின்ற பிரபஞ்ச பேரறிவுக்கு உடன்பாடான மனம்... அந்த உடன்பாட்டிலே மனம் வடிவ இறுக்கங்களை தன் கட்டுபாட்டில் வேண்டிய அளவிற்க்கு வைத்துக்கொள்கிறது.. இறுக்கத்தின் எதிர் மறை இளக்கம்..ஆகாய சக்தி இளக்கத்தின் உச்சம்.. மண் இறுக்கத்தின் உச்சம்.. இளக்கம் இன்மையால் பலவீன பட்ட ஆகாய சக்தியை, மண்ணின்
இறுக்க சக்தி, ஆகாய சக்தி மேல் ஆதிக்கம் கொள்கிறது.. அந்த ஆதிக்க சக்தியே ஆணவம்.. அது ஆகாயம் அவம் நிலை அடைந்ததை குறிக்கும்.. ஆணவகாரர்கள் பேரறிவின் துணை யின்மையால் புத்தி என்ற காற்றின் துணையும் கெட்டு அழிவை நோக்கி பயணிக்கின்றனர்.. அதே சுத்த மனத்தில் மென்மை சக்தியாகிய ஆகாய சக்தி பெருகி மண் சக்தியை ஆதிக்கம் செய்கின்ற பொழுது மண் நிலையில் ஆகாய அறிவும் காற்றின் புத்தியையும் பெற்று மண் நிலை ஆகாய புதுமையை என்ற நவநிலை பெறுகிறது.. மனம் இப்பொழுது ஆநவம் அடைகிறது.. மனம் ஆணவத்தை விட்டு ஆநவம் பெறவே மதங்கள் தோன்றின.. ஆனால் இன்றைய மதங்கள் திசை மாறி ஆணவத்தை பெருக்குவதிலே குறியாக இருந்து ஆணவத்தின் வன்மை நிலை பெருக்கி மக்களை அழிவுக்கு அழைத்து செல்கிறது..
ஆநவம் அறிவின் பெருக்கம்... ஆணவம் அறிவின் சுருக்கம்.. ஆணவம் என்பதில் 'ஆ' ஆகாயமும் 'ண்' முடிவில்லாத நிலையையும் அவம் கீழ் நிலையையும் குறிக்கும்.. மனம் என்ற பூதத்தில் தான் ஆநவம், என்ற தெய்வ நிலையும் ஆணவம் என்ற அசுர நிலையும் உருவாக கூடிய இடமாக இருப்பதால் மன
பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.. இசையில் சுரம் என்பது ஒத்த நிலை..அசுரம் என்பது முரண் நிலை... சிவகலப்பு சிவ யோகத்தில் மேல் சொன்ன வன்மை மென்மையான ஆணவம் ஆநவம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசிய மாகிறது.. ஆணவ வன்மையை அடக்க மென்மையான இறைவானால் முடியாது.. வன்மை மிகுந்த தேகத்தோடு கூடிய அவதாரம் எடுத்தால் தான் முடியும்.. வன்மை மிகுந்த மனிதன் அந்த தெய்வ நிலையாகிய மென்மையையும் பெற்று விட்டால் அவனே நிறை மனிதன்.. ஏதோ சில காரணங்களால் இறைவன் அவதாரம் எடுக்க விரும்பாத நிலையில் மனிதன் நிறைமனிதன் ஆகும் தகுதியால் தன் அவதார அற்புதங்களை செய்யவே இந்த
சிவ கலப்பு சிவ யோகத்தை அளித்துள்ளான்.. ஆகவே முன் பகுதிகளையும் பின் பகுதிகளையும் தொடர்ந்து பேரறிவின் இயல்பான விழிப்பு நிலையிலே கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்..

No comments:

Post a Comment