Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினான்கு


கதிர் இயக்கம் அடைய பணிவும் இயங்கும் தன்மையும்
***********************************************************************************
எல்லை இல்லா வானமும்,விண்ணும், அதில் உள்ள பேர் அற்புதங்களும், பிரகாசிக்கும் சூரியனின் ஒளி பிழம்பும், நம்மை ஈர்க்க முடிவதில்லை.. பக்கத்து வீட்டுகாரரின் வசதி மாற்றங்கள், நகை உடை மாற்றங்களை கண்டு, தூக்கத்திலும் நினைக்கும் மனித சமுதாயத்தின் நிலை என்ன?.. விண்ணில் பறக்கும் பயணிகள் விமானத்தை உளவு பார்த்து சுட்டு வீழ்த்தி வேடிக்கை பார்க்கும் மனித இனம், தன் தேகத்தில் உளவு பார்த்து, தன் நோயை தீர்க்காமல் மடிவது எதனால் ?.. மாட்டு சாணத்திலிருந்து மறு நாளே வெளி கிளம்பும் ஒரு புழுவின் நிலை என்ன? இப்படி சம்பந்தம் இல்லா கேள்விகளை வாழ்நாள் முழுமைக்கும் அடுக்கி கொண்டே போகும் மனிதன் பிரபஞ்ச ஆற்றலை மட்டும் விசாரிக்கும் மனம் இல்லை.. எல்லையில்லா வானத்தை பார்த்து வியக்கும் புதுமை இல்லை..
கேள்விகள் ஒழிந்து பதில் ஒன்றே நிற்கும் நிலை அடையும் நிலைதான் ஞானம் அல்லது பூரண தெளிவு அடையும் நிலை..
கடவுளின் கதிர் இயக்கம் என்பதே அந்த பதில். கதிர் என்ற சொல்லை பிரித்தால் 'க்' + அதிர் ஆக கொள்ளலாம்.. 'க்' என்ற கடவுளின் அதிர் அலைகள் பிரபஞ்ச முற்றும் பரவி உள்ளது.. இதன் வேகம் ஒரு யூகமாக பிரபஞ்சத்தையே பல ஆயிரம் தடவை சுற்றி வந்தாலும் அது எடுத்துக்கொள்ளும் நேரம் பூஜ்ஜிய விநாடியே.. அப்படியானால் அதன் வேகத்தை யூகிக்கவும் முடியாது.. அப்படியான ஒரு கதிர் இயக்கம் இந்த பிரபஞ்ச முழுமையும் நடந்து கொண்டு இருக்கிறது.. அந்த இயக்கத்தை யார் ஒருவர் உள் வாங்குகிறார்களோ அவர்கள் மட்டுமே பிறவி எடுக்க முடியும்.. உள் வாங்கும் திறனாலே பல்வேறு உயிர் தோற்றங்கள் வருகின்றன.. மனிதனுக்கு மனிதன் வித்தியாசப் படுவது இந்த கதிர் இயக்கத்தை உள் வாங்கும் திறமையாலே..
இந்த உள்வாங்கும் திறமை எப்பொழுது வரும்.. ஒரு மனிதன் இயங்கும் தன்மையில் இருக்கும் பொழுது மட்டுமே.. இதை அழகான தமிழில் பணிவு என்று சொல்லுகிறார்கள்.. இந்த பணிவு என்பது அடிமைத்தனம் என்று ஒரு போதும் துளியும் பொருள் கொள்ளாது.. பணிவை பற்றி பேசுபவர்களையும் பணிவோடு இருப்பவர்களையும் சமுதாயம் மதிப்பதில்லை என்பது பெருமளவு உண்மை.. அதற்கு காரணம் உண்டு.. அந்த பணிவினை கதிர் ஆற்றலுக்கு உள் வாங்கவோ, இயங்கவோ தொடங்கி விட்டால், உலகமே அவனுக்கு பணிய வேண்டிய நிலைக்கும், பணிந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கும், உயரத் தொடங்குவான்.. பணிவு என்ற பாதை மனிதனுக்கு இன்னும் புரியவே இல்லை.. அதனை கதிர் ஆற்றலுக்கு பயன் படும் முறையும் அறிந்து கொள்ள வில்லை..
மிக விலை உயர்ந்த செல் போனை கண்டபடி உபயோகித்து அதனுடைய மென் பொருள் (software) இயக்கம் கெட்டு சரியான செயல் இயக்க முடியாத நிலையில் அதனை default mode, Factory setting ல் உள்ள வசதியை உபயோகித்து பழைய நிலைக்கு வருவது போல மனிதன் தன் வாழ்நாளில் செய்த முறை யற்ற செயல்களால் முடங்கியோ முடங்க கூடிய நிலையிலோ மீண்டு தன் பழைய நிலைக்கு திரும்ப முடியாத ஊகத்தை அறியாதவனாய் இருக்கிறான்.. அவனுடைய factory setting என்னவென்று தெரியவில்லை.. அது கதிர் இயக்கமே என்பதையும் அதை அடைய இயங்கும் திறனும், பணிவின் மேன்மையும் அறிய நாட்டம் கொள்ளாது இருக்கிறான்.. சாகும் நிலையிலும் கதிர் இயக்கத்திற்கு பணிவதால் தன் இயல் நிலையான இளமையும் ஆரோக்கியமும் பெறும் வல்லமை பெறுகிறான்..
கதிர் இயக்கத்தை உள் வாங்குவது எவ்வாறு?.. ரேடியோ நிலையத்தில் பாடும் மனித குரலை எவ்வாறு மின் காந்த அலைகள் மூலம் உலக முழுமைக்கும் எடுத்து செல்லப் படுகிறதோ அதே போல் கதிர் அலைகளை உள் வாங்கி பேராற்றல் பெற சுத்த மனம் என்ற ஊடகம் தேவை படுகிறது.. அந்த சுத்த மனத்தை அசுத்த மனம் ஆக்கி அந்த அசுத்த மனதில் பல்வேறு எண்ணங்கள் ஊடூருவ ஒரு சுலப தன்மையான பலவீனத்தை ஏற்படுத்தி மனிதனை மேலும் தன்னை சிதைக்கவே இன்றைய யோகப் பயிற்சிகள் கற்று கொடுக்கப் படுகின்றன.. சில வாசியோகப் பயிற்சிக்கு பின் நல்ல தூக்கம் கெட்டவர்கள் பலர்.. சுத்த மனம் ஆவதற்கான பயிற்சிகள் நடை பெறுவதில்லை.. மனதில் பல் வகையான எண்ண ஆதிக்கங்களின் குறுக்கீடால் சோர்வும் அசதியுமே மிஞ்சுகிறது.. கதிர் இயக்கத்திற்கு ஒரு மனிதன் இயங்கும் பொழுது எந்த ஒரு செயலையும் செய்யாமல் பயிற்சியும் செய்யாமல் தன் இயல் நிலையான நோயற்ற ஆரோக்கிய நிலைக்கு வருகிறான்.. இதனை பணிவு இயங்குதல் என்ற கருத்தினை புரிந்தால் மட்டுமே உண்மை விளங்கும்.. இல்லையேல் தர்க்கமும், விவாதமும், முரண்பாடுதான் நிற்கும்.. சொன்னவன் பித்தனாக்கப் படுவான்.. அவ்வளவே

No comments:

Post a Comment