Saturday 27 June 2015

பகுதி 16 - சிவ கலப்பு சிவ யோகத்தில் நாத வித்தை நாடல்

நுண் நிலை ( சூட்சும ) பஞ்சபூதங்களை வலிமை படுத்தி அதன் வழியாக பருநிலை (ஸ்தூல) பஞ்ச பூதங்களை மேன்மை படுத்தும் பயிற்சி தான் கதிர் ஆற்றல் அல்லது ஒளி மையமான திருவடி பயிற்சி.. இப்பொழுது பருநிலை பஞ்ச பூதங்களை வலிமைபடுத்தி அதன் வழியாக நுண்நிலை பஞ்சபூதங்களை மேன்மை படுத்தும் பயிற்சிதான் நாதம் அல்லது ஒலி மையமான நாத வித்தை என்ற பயிற்சி.. வடகரை சிவானந்த பரமஹம்சரின் அமைப்பை சார்ந்த நாத வித்யாத்திகள் இப்பயிற்சியிலே நாட்டம் மிக கொண்டவர்கள்.. இவர்கள் திருவடி
பயிற்சியில் நாட்டம் இன்மையால் இப்பிறவியிலே அடைய வேண்டியதை அடையாமல் நுண் நிலை பூதங்களில் வலிமை பெற பேரின்பத்தில் வாழ ஜீவ சமாதி என்ற நிலையை அடைகிறார்கள்.. திருவடி பயிற்சியின்மையால் சித்த சக்தியை பெற தவறி தேக இயக்கத்தை இழந்து ஜீவசமாதியில் ஒடுங்கி நிறை நிலை மனித தன்மையை இழக்கின்றனர்.. ஆரம்ப நிலையில் மிக தேவையானது இப்பயிற்சி.. ஆனால் அது கொடுக்கும் பேரின்பத்தில் தன்னை இழந்து விடக்கூடாது.. இது நுண்நிலை பஞ்ச பூதங்களை மேன்மை படுத்துவதால் நாத வித்தை பயிற்சியும் நிறைநிலை
மனிதனுக்கு அவசியமாகிறது..சற்று அறிவும் புத்தி கூர்மை குறைந்தவர்கள் இப்பயிற்சியை மேற்கொண்டால் அறிவிலும் புத்தியிலேயும் மேன்மை அடையலாம்..
பிரபஞ்ச பேரறிவு ஒரு அறிவு தூண்டல் மையமாக உள்ளது... அது ஒரு சீரான தூண்டல்.. அந்த தூண்டலினால் ஓர் ஒழுங்கான இயக்கம் தோன்றுகிறது.. எங்கெல்லாம் இயக்கம் உள்ளதோ அங்கெல்லாம் ஒரு ஒலி உண்டென்பது மாறாத விதி.. அந்த இயக்கத்தின் ஒலி தான் நாதம் என்ற வட மொழியை தழுவிய சொல்.. ஒலியின் ஒழுங்கு தன்மை மாறினால் அது ஓசை என்று பெயர்.. ஓசை ஒலியை நோக்கி நகரும் போது அது இசை ஆகிறது.. இசையால் இறைவனை அடையலாம் என்பது உண்மை தான்.. ஆனால் இன்றைய இசை
இசையாக இல்லை.. பெரும் ஓசையாகவே உள்ளது.. ஓசையில் தேக திசுக்கள் மடிகின்றன அல்லது தளர்வு அடைகின்றன.. இசையில் தேக திசுக்கள் கிளர்ச்சியும் உற்சாகம் அடைகின்றன.. ஆனால் ஒலி என்ற நாதத்தில் தேக திசுக்கள் திசு பிளவு ஏற்பட்டு திசுக்கள் எண்ணிக்கை வளர்ச்சி அடைகின்றன.. ஒரு மனிதன் தேக வலிமை, வேண்டிய அளவிற்கு பெற நாதத்தில் பயிற்சி தேவை.. அதில் மித மிஞ்சிய தேர்ச்சி பெற ஆகாயத்தின் அம்சமான பேரறிவின் துணை தேவை படுவதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.. பகுதி 14 ல் கை விரல் வளர்ந்ததை போல் நாதத்திலும் விரல் வளரும் அதிசயத்தை பார்க்கலாம்.. நாதத்தின் மிக பெரிய இயல்பே அதன் ஒழுங்கு தன்மையே.. ஓர் ஒழுங்கு
தன்மை முன் எந்த ஒரு முரண்பாடும் ஒழுங்கு தன்மையை நோக்கி இயங்கி ஒழுங்கிற்கு வந்து விடும்.. தேக ஒழிங்கின்மை அதாவது நோய் நொடிகள் ஒழுங்கு என்ற ஆரோக்கியத்தை நோக்கி நகர்ந்து எல்லாம் குணமாகும்.. ஒரு நிறைநிலை மனிதன் ஒழிங்கின் சீர்மையின் உச்ச நிலையில் உள்ளவன்.. அவன் சொல்லும் வார்த்தை தான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னதற்கு சமமாகும்.. சத்தியமும் நேர்மையும் அவன் வடிவம் ஆவதால் எந்த சொல்லும் மந்திரமாகும்.. ஓர் ஒழுக்கத்தின் சிறப்பு அப்படி பட்டது.. நாதம், ஒழுக்கமே வடிவானது.. ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார் வள்ளுவர்.. நான்கு வகை ஒழுக்க நெறிகளை வகுத்தார் வள்லலார்.. நாதம் என்பது என்ன ? காதில் ஒலிக்காத ஓசை ஆனால் செவியில் ஒலிக்கின்ற ஒலி.. காது வேறு செவி வேறு என்பதை அறிக.. காதில் உணரும் அத்தனையும் ஓசைதான்.. செவி என்பது இரு காதுகளுக்கும் இடையே அமைந்துள்ள ஒரு விசேச கருவி.. அதன் மூலம் மட்டுமே பிரபஞ்ச பேரறிவின் ஒழுங்கு இயக்கமான நாதம் என்ற ஒலியை உண்ர இயலும்.. அந்த ஒலியே, நாதமே, ஒழுங்கு.. ஏனைய ஓசைகள் எல்லாம் ஒழுங்கின்மையின் அடையாளம்.. பல மணி நேரம் சினிமா பாடல்களையும் பாடல் கச்சேரிகளையும் கேட்கலாம்.. ஆனால் ஐந்து நிமிடங்கள் நாத ஒலியை இன்றைய மனிதன் ஒழுங்காக செவியிலே உணரமுடியாது.. ஓசை என்பது கேட்பது.. ஒலி என்பது செவியில் உணர்வது.. உணர்வு பெருகும் போது புத்தியும் பேரறிவும் பெருகிறது.. நாதம் சிரநடு பகுதியில் கேட்பது போல தோன்றும்.. ஆனால் அது உணர்வது.. அதனால்தான் நாதத்தை உணர்வதும், அதில் நீடித்து இருப்பதும், அவ்வளவு 
கடினம்.. உணர்வை பெருக்க, பேரறிவை பெருக்க, நாதத்தை உணர்வதை போல் ஒரு பயிற்சி எதுவுமே இல்லை.. ஒரு எளிய, மிக கடினப்பயிற்சியும் அதுவே.. இரு காதுகளை மூடினால் சிர நடு பகுதியில் கேட்பது போல தோன்றும் ஒலி உணர்வே நாதம்.. நாதம் உணரவும் அதில் நீடிக்கவும் உதவும் பேரறிவை பகுதி 17 ல் பார்க்கலாம்.. மொத்தம் பகுதிகள் 20 மட்டுமே.. சிவ கலப்பு சிவ யோகம் ஒரு முடிவான ஆன்மீகம் என்பதை நம்பி ஆழமாக படியுங்கள் என்று வேண்டப் படுகின்றனன்...

No comments:

Post a Comment