Sunday 28 June 2015

வாசியோக இரகசியம் பகுதி பணிரெண்டு


இருப்பு உற்ற நிலைக்கு எதிரான பொறுப்பு அற்ற செயல்
**********************************************************************************
இருப்பு தன்மையை மையமாக வைத்தே அனைத்து யோகங்களும் கற்று தர பட வேண்டும்.. அங்கே மட்டுமே எந்த குறுகீடு இன்றி கிடைக்கும் பேராற்றல் சுழலும் வாசியால் மட்டுமே அடைய முடியும்.. சுற்றும் வாசியை நற் கதி என்பர்.. நற்கதியில் இருத்தல் வாசி பயிற்சியாளர்களின் முக்கிய பயிற்சி.. ஆனால் பல வாசி பயிற்சி கொடுப்பவர்கள் அதோ கதி என்ற மோசமான பின் விளைவுகளை தரும் பயிற்சியினை கற்று கொடுத்து ஒருவனுடைய மனதை எந்த எண்ணங்களும் எண்ணாத வலுவற்ற நிலையினை கொடுப்பார்கள்.. மூலை சலவை செய்யப்படும்... இந்த நிலைக்கு பின், குருவின் படத்தையோ தன் உருவத்தையோ பல மணி நேரம் பார்க்கும் படியான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.. அவ்வளவு தான் பயிற்சியாளன் மனம் எல்லாம் குருவாகவே நிறைந்து நிற்கும்.. அதில் இருந்து மீள அந்த ஜென்மம் பற்றாது.. குரு பக்தி ஓங்கி நிற்க பயிற்சியினை முழுவதும் மறந்து போய் குரு புகழ் பாடும் பணி ஒன்றே செய்து கொண்டு இருப்பர்..
நம் நாட்டில் மட்டுமே இறைவனைக் காட்டிலும் குருவின் உருவ திணிப்பை சூட்சமமாக ஏற்படுத்தி, குரு புகழை பாடும் படியாக மனிதனின் மன நிலையை கெடுத்து, குருவின் புகழ்பாடும் எந்திரமாக மாற்றப் படுகிறான்.. முக்கியமாக கல்கி பகவான், நித்தியானந்தர் அமைப்புகளில் இந்த கொடுமைகளுக்கு அளவே இல்லை.. இதை கவனிக்க எவருக்கும் நேரம் இல்லை புத்தியும் இல்லை.. மற்ற அமைப்புகளில் இந்த கொடுமை முடிந்த அளவு நடை பெறுகிறது.. குரு புகழை பாடுவதை விட்டு விட்டு குரு கற்றுதரும் பயிற்சியினை யாரும் புகழுவது இல்லை.. வியாபார நோக்கில் நடைபெறும் இந்த குரு புகழ்ச்சி கூத்து பல பின் விளைவுகளை ஏற்படுத்தி பல போலி குருமார்கள் உருவாக ஊக்கம் தருகிறது.. மூல சலவை செயல்களை சற்று புத்தியோடு ஆராய்ந்து அந்த மாதிரியான இடங்களை தவிர்க்க வேண்டும்.. உண்மை குருமார்கள் சுற்றி மிக மிக குறைவாகவே இருப்பார்கள்.. திருமூலரின் குருவான நந்தி தேவருக்கு நான்கே சீடர்கள் தானாம்.. பல கோடிகளை சேர்த்து வைத்திருக்கும் போலி குருமார்களுக்கு எத்தனை சீடர்கள் என அறிவீர்கள்.. அதில் பெரும் பாலும் மூளை சலவை செய்யப் பட்டவர்களே.. தான் பரம்பரையாக பூஜை செய்துவரும் தெய்வங்களின் படங்களை எடுத்து எறிந்து விட்டு குருவின் படத்தை மாட்டும் மூளை சலவை செய்யப் பட்டவர்கள் அநேகம்.. இவையெல்லாம் சொல்லுவதற்கான பின்னணி இருக்கிறது..
மூளை சலவை செய்யப்பட்டவர்கள் ஒரு நாளும் தன் இருப்பு தன்மைக்கு செல்லவே முடியாது.. தனித்த தன்மையிலே
இருக்க செய்யும் அக்னி கலைக்கு மாறவே முடியாது.. குருவின் நினைவு நன்றாக பதிக்கப் பட்ட சந்திர கலை அக்னி கலையில் மதியாகும் வாய்ப்பே இல்லை.. குருவின் நினைவை முளையில் பதிப்பதற்காகவே அதோ கதியை நன்றாகவே பயன் படுத்தும் கல் நெஞ்ச அமைப்புகள் ஏராளம்.. என்ன செய்வது ? மனிதர்களின் மன வளத்தை கொள்ளை அடிக்கும் இவர்களுக்கு பாடம் புகட்ட எந்த அமைப்பும் இல்லை.. ஏனெனில் அதிகாரத்தில் உள்ளவர்களில் பெரும்பாலும் இவர்களால் மூளை சலவை செய்யப் பட்டவர்கள்.. குரு மரியாதை வைத்துக் கொள்ளலாம்.. அது வேண்டியதே.. குருவுக்கு அடிமை தனம் மிக மிக மோசமானது..
அதோ கதி என்பது மூச்சின் உடன்பாடு உடைய உறவுக்கு பங்கம் விளைவிக்கக் கூடியது.. அதோ கதியை தொடர்ந்து சற்று அழுத்தமாக செய்தால் பத்து நிமிடங்களில் மரணம் விளையும்.. ஜப்பானில் குரு மரணத்தை தாங்க முடியாத ஐநூறு சீடர்கள் ஒரே சமயத்தில் இந்த அதோ கதியின் மூலம் மரணம் அடைந்தாக கேள்வி.. நல் கதியா, அதோ கதியா என்று அறிந்து கொள்ள மூச்சின் உடன்பாடு உடைய உறவே அளவு கோல்.. நான் கேள்வி பட்ட வரை வாசி யோகத்தை கற்று கொண்டவர்களில் பல பேருக்கு துன்பமே கிடைத்து இருக்கிறது..
வாசி குரு இன்றைய நிலையில் எப்படி இருக்கிறார் என்றால் பெரும்பாலும் வாழையடி வாழை யென வந்த குருக்களிடம் ஈ அடித்தான் காபி என்று சொல்வார்களே அப்படி நெளிவு சுளிவு இல்லாமல் நுணுக்கள் அறியாமல் கற்றுக் கொண்டவர்கள் போல் தெரிகிறது.. அப்படி காபி அடித்ததை ஒப்பிப்பது போல சொல்லி கொடுப்பார்கள்.. சில புரியாத நுணுக்கங்களை உடன் சேர்த்து,கபட வியாபார யுக்திகளை கையாண்டு, சில நடைபெறாத ஆசைகளை உடன் இணைத்து மனித குலத்திற்கு கேடே விளைவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.. நல்ல குருக்களும் இருக்கவே இருக்கிறார்கள்.. அன்பே வடிவான அவர்களை காக்கா,குருவி கூட நெருங்குவதில்லை.. காரணம் ஆரோக்கியத்தை மனம் அடையாளம் கண்டு பிடிக்கத் தெரியாது நோய் குறைபாடுகளை மட்டுமே அடையாளம் காணும்.. எப்படி என்றால் மிக பெரிய வெண் திரையில் நிறைந்து நிற்கும் வெண்மையை காண தவறும் மனம் அத்திரையில் உள்ள ஒரு கரும் புள்ளியை உற்று கவனிப்பது போல் வெண் திரை போல் உள்ள நல்ல குருவை மனித குலம் அடையாளம் காணமுடியாது.. வாசியில் மோகம் கொண்டு உள்ளவர்களுக்கு சில தகவல்களை தரவே இப்பகுதியை வெளியிடுகிறோம்.. மற்ற படி யாரையும் புண் படுத்தும் நோக்கம் இல்லவே இல்லை.. அவ்வளவே.....

No comments:

Post a Comment