Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினெட்டு


மதி வழி சந்திர கலையின் துணை
***************************************************
எண்ணங்களினால் தடுமாறி கொண்டு பித்தனாய் திரியும் மனித குலம் சக்தியின்றி, செய்வது யாது என்று அறியாது, பிரச்சனை மேல் பிரச்சனை என நிலை குழைந்து, பிரச்சனை என்ற ஒரு பெரும் மாயை சக்தியாய், ஒரு சுமையாய் அவனை அமுக்கி இருக்க, எழவே முடியாத நிலையில், சுருண்டு கிடக்கும் மனிதன் தன்னுள் இருக்கும் சூரிய கலையை அறியும் தறுவாயில், பெரும் பிரச்சனையாய் இருக்கும் வலுவான எண்ணத்தை விழிப்பு என்ற பேரறிவின் துணையோடு தன் சூரிய கலையால் சுட்டு எரித்து, தன் மேல் உள்ள பாரத்தை சிறுக சிறுக குறைத்துக் கொண்டே வருகிறான்.. பாரம் குறைந்த நிலையில் முதன் முதலாக எழுந்து நிற்கிறான்.. இந்த உலகை உற்று பார்கிறான்.. தன்னையும் பார்க்கிறான்.. தன்னுள் இருக்கும் இறைவன் கொடுத்த வரமாக மகா சக்தியை உணருகின்றான்.. அந்த சக்தியை ஒன்று திரட்டி தன் தேகத்திலும் மனதிலும் பாய்ச்சி அதனை வலுவாக்குகிறான்.. உலகை உற்று பார்த்த அவன் உலகம் அவனை நோக்கி பொறுப்புகள் என்ற பெரும் பாரங்களை சுமந்து வருவதை கவனிக்கிறான்..அவற்றை கருணையோடு வாங்கி நிறைவேற்றும் வல்லமை பெறுகிறான்..ஒரு கால கட்டத்தில் தன் வரையறுக்கப் பட்ட சக்தி நிலையை உணருகிறான்.. ஒரு நிலைக்கு மேல் தன் இயலாமையை உணருகிறான்.. தன் கருணை நிலைக்கு சவாலாக வரும் பொறுப்புகளை மேலும் மேலும் ஏற்க தகுந்த சக்தி பெருக்கத்திற்கு எண்ண வழி என தன் பேரறிவிடம் முறையிடுகிறான்.. பேரறிவு அவனுக்கு வழி காட்டுகிறது..
இறை தூண்டலோடு வேறு ஒரு தூண்டலும் தேவை படுகிறது.. ஆனால் அது இறை தூண்டலோடு கலக்கும் ஒன்றாக இருக்கவேண்டும்.. அப்படி பட்ட தூண்டலே தனக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த ஏக்க தூண்டல்.. முன் பிறவியில் பயன்படுத்தாத இறை தூண்டலின் சேமிப்பே தன்னிடம் புதைந்துள்ள இந்த ஏக்க தூண்டல்... ஜென்ம ஜென்மாக சேர்ந்து போய் மலையளவு இருக்கிறது.. இந்த ஏக்க தூண்டலை சக்தி பெருக்கத்திற்காக பயன் படுத்துவதுதான் இந்த பகுதியின் நோக்கம்... மெதுவாக சூரிய கலையில் மூச்சை வெளியே விட்டு எண்ண வடிவங்களை உடைக்க செய்து சக்தி பெருக்கத்தை அடையும் வழியினை சென்ற பகுதியில் பார்த்தோம்.. இயல்பான மனிதன் 12 அங்குலம் உள் வாங்கி 16 அங்குலம் வெளிவிட்டு 4 அங்குலம் நஷ்டம் ஆகி தன் உயிரை இழக்கிறான்.. இப்பொழுது சூரிய கலையில் மெதுவான சுவாசம் மூலம் 12 அங்குலத்திற்கு குறைவாக வெளி மூச்சு இருக்கும் போது அதற்கு தகுந்தாற் போல் சக்தி பெருக்கம் நடக்கின்றது.. அப்படி வெளி சுவாசத்தை மெதுவாக விடுவதில் ஒரு எல்லை வரைக்குமே.. இதனால் லாபமும் ஒரு எல்லை அளவே உள்ளது.. அளவற்ற பொறுப்புகளை ஏற்று சமாளிக்க அளவற்ற ஆற்றல் தேவை படுகிறதே எண்ண செய்வது என ஆகாய பூதத்தின் பேரறிவின் துணையோடு ஒன்றை கண்டு பிடித்தார்கள் சித்தர்கள்.. அது இது தான்..
உள் வாங்கும் மூச்சு சந்திர கலை என்பதை அறிந்தோம்.. அது 12 அங்குலம் உள் வாங்குவது நிலையாகவும் பயிற்சியின் மூலம் வெளி மூச்சு முடிந்த மட்டும் 8 அங்குலம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.. இப்போது சக்தி வரவு 4 அங்குலமாக இருக்கிறது.. சூரிய கலையில் 8 அங்குலத்திற்கும் குறைவாக மூச்சை மெதுவாக விட முடியவில்லை என கொண்டால் நாம் ஒரு வரையறுக்கப் பட்ட 4 அங்குல இலாபம் தான் அடையமுடியும்.. இப்பொழுது அதிக சக்தி வேண்டும் எனில் சந்திர கலையான உள் வாங்கும் மூச்சை 12 அங்குலத்திலிருந்து 16 அங்குலமாக உயர்த்தி இலாபத்தை 8 அங்குலமாக்க முடியும் அல்லவா ? இந்த யுக்தி எப்படி கண்டு பிடித்தார்கள் எனில் மரண காலத்தில் ஆத்மாவின் அம்சமாகிய உயிர் கடைசி நேரத்தில் அதிகமாக மூச்சை உள்வாங்கி உயிரை காப்பாற்றும் கடைசி முயற்சி செய்கிறது.. மரணத்திற்கு முன் சில நிமிடங்கள் ஒரு மனிதன் மூச்சை வேகமாக உள் வாங்குவான்... மூச்சு வெளியிடுவது மிக மிக குறைவாகவே இருக்கும்.. கடைசியில் அதிக பட்ச இலாபத்தை தேடி உயிர் பிழைக்க மனிதன் ஆன்மா மூலம் போராடுவான்.. நன்றாக இருக்கும் காலத்தில் ஆன்மா தொடர்பு பலப்படுத்தாமல் இருந்ததால், ஆன்மா தொடர்பின் குறைப்பாட்டால் போதிய சக்தியை பெற முடியாமல் உயிர் இழக்கின்றான்..
இப்பொழுது நாம் என்ன அறிகிறோம்.. சந்திர கலையில் மூச்சின் வேகத்தை அதிகப் படுத்தி 12 அங்குலத்தை நீடித்து 14,15,16 என தொடர்ந்து முன்னேறி இலாபத்தை பெருக்கும் வழியினை அறிகிறோம்.. எந்த காரணத்தைக் கொண்டும் உள் வாங்கும் மூச்சை குறைக்கவோ வெளி விடும் மூச்சை அதிகப் படுத்தவோ கூடாது.. கூடவே கூடாது.. மூச்சில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு மயக்கம் சோர்வு போன்றவை ஏற்படும்..அப்படி அதில் அதிக நேரம் நீடித்தால் மரணம் கூட நேரிடலாம்.. அதனால் தான் சந்திர கலையில் பயிலும் பயிற்சியினை தகுந்த குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.. ஆனால் சில குருக்கள் பெரும் லாபம் அடைய கருணையே இல்லாமல் நாச கதியை கற்று தந்து அவனுடைய ஆன்மாவிலே ஏதோ கற்பக தருவாய் அமர்ந்து, மதி மயங்கிய சீடர்களையே கற்பக தருவாக்கி அவர்களுடைய பணம், தேக உழைப்பு, மன பலம் எல்லாவற்றையும் பிடுங்கி கொள்ளும் ஆன்மா கொலை காரர்களாக உள்ளனர்.. இனிமேல் ஆயிர கணக்கில் பணம் கொடுத்து அவர்களின் வகுப்பில் கலந்து கொள்ளும் போது நான் சொன்ன அதோகதி யுக்தியை கையாளுகிறார்களா என கவனியுங்கள்.. அப்படியே நிச்சயமாக இருக்கும்..
நீங்கள் சூரிய கலை பயிற்சியோடு நின்று விட்டால் நல்லது.. அதில் அதிக பட்ச பலன் அடைந்த பிறகே சந்திரகலையை அதிக உள்வாங்கும் பயிற்சினை செய்யவேண்டும்.. அப்பொழுது நீங்கள் முறையோடு செய்யும் யுக்தி தானே தெரிய வரும்.. இதை மதி வழி சந்திர கலை பயிற்சி என சொல்லலாம்.. இப்பயிற்சியில் கலைகள் கூடிய சந்திர கலை பூரண மதியாகும் என்பதை முன் பகுதிகளில் சொல்லி இருக்கிறேன்.. இந்த மதி வழி சந்திர கலை பயிற்சியில் என்ன என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்..
1) யாதார்த்தமாக மூச்சை உள்வாங்குவது சந்திர கலை மூச்சு என்றும், அதிக படி ஆற்றலை பெற, மதியோடு அதிகமாக உள் வாங்கும் மூச்சை மதி வழி சந்திர கலை மூச்சு என கொள்க..
2) சூரிய கலையில் மெதுவாக மூச்சை விடும் பொழுது எண்ணங்கள் ஒன்று ஒன்றாக கரையத்தொடங்குகிறது.. இந்த நிலையில் சந்திர கலையில் பழக்கப் பட்ட சூரிய கலையின் குறைக்கப் பட்ட வேகத்திற்கு ஏற்றால் போல் சந்திர கலையும் மிக குறைவாக இயங்க தொடங்க ஒரு வகையான சோர்வு காரணமாக தூக்கம் வர தொடங்கும்..
3) வாசியோக பயிற்சி பண்ணுகிறவர்கள் தியானம் பண்ணுகிறவர்கள் அனைவரும், விரைவில் தூங்க தொடங்குவது இதனால் தான்.. அதிகமான உள் வாங்கும் மூச்சினால் அதிக எண்ணங்கள் எழத்தொடங்கி தூக்கம் கெடும்.. ஆகவே நாம் சூரிய கலையை மெதுவாக விடும் பொழுது, சற்று, மிக எச்சரிக்கையாக் உள்வாங்கும் மூச்சை கொஞ்சம் வேகமாக இழுக்க தூக்கம் தொலையும்.. சூரிய கலை பயிற்சி பண்ணுகிறவர்கள் ஆரம்பத்தில் தூக்கம் தொலைப்பதற்காக வேண்டி மதி வழி சந்திர கலை பயிற்சி பண்ணலாம்.. அதற்கு மேல் பக்குவம் அடையும் வரை உள் வாங்கும் மூச்சை வேகப்படுத்தக் கூடாது.. எச்சரிக்கை:-- அப்படி கூடவே கூடாது..
4) வெளி மூச்சை வெளியே விடும் போது முடிந்த அளவு மெல்ல விடலாம்.. அதில் தவறு எதுவும் நடக்காது.. எண்ணங்களின் வடிவம் கரைந்து உணர்வு என்ற புத்தி ஆற்றல் பெருகவே செய்யும்...
5) மிக முக்கியமாக உள் மூச்சை மதி வழி சந்திர கலையில் உள் வாங்கும் போது, அதிக எண்ணங்கள் உள் புகுந்து சூரிய கலையில் வடிவம் சிதைந்து அதிக உணர்வு வர தொடங்கும்.. ஒரு பிரச்சனை குறித்து சிந்தனை செய்பவர்கள், பெருமூச்சு இழுத்து மிக மெதுவாக விடுவதை காணலாம்.. புத்திக்கான ஆற்றலை பெறுவதற்காக அவ்வாறு தனக்கு தெரியாமலே செய்வார்கள்..
எச்சரிக்கை:-- சூரிய கலையில் மெதுவாக மூச்சை வெளிவிடும் பயிற்சியினை முதலில் அரை மணி முதல் ஒரு மணி நேரம்
வரை செய்யுங்கள்.. செய்த பிறகு தூங்க போகக் கூடாது.. ஏனெனில் சக்தி பெருக்கத்தால் தூக்கம் வராது.. ஒரு வேலைக்கு முன்னால் இதை செய்தால் மிக நல்லது.. அந்த வேலை செய்யும் பொழுதே அதில் திறமை பெருகுவதையும் ஆற்றல் கூடுவதால் உடலில் சுறு சுறுப்பு எந்த அளவு கூடி இருக்கிறது என கவனியுங்கள்.. நல்ல விளைவுகள் இருந்தால் பயிற்சி நேரத்தை கூட்டிக்கொள்ளலாம்,, காலையில் செய்தால் நன்று.. ஆரம்பத்தில் இரவு பயிற்சி வேண்டாம்..
மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, பயிற்சியின் போது எண்ண வடிவங்கள் உடைந்து, சில நொடிகளில் ஏற்படும் பேரமைதியில் நீங்கள் மட்டுமே தனித்திருக்கும் நிலையினை உணரும் விழிப்பு நிலை கிடைக்கிறதா என்பதே.. ஏனெனில் அதுவே சர்வ வல்லமை வாய்ந்த பேரறிவின் அம்சமான இறை நிலையின் இருப்பு தன்மையும், அதில் கலந்து இருக்கும் உங்களின் இருப்பு தன்மையும் ஆகும்.. சற்று விழிப்போடு செயல் ஆற்றின் பின் நாம் வாழ்வோம் வளமுடன்..

No comments:

Post a Comment