Friday 26 June 2015

பகுதி பணிரெண்டு :---- நாளைய நிஜம்

ஆயுள் வரை அவல நிலை
மனிதனுக்கு மட்டுமே தன் பரிணாம வளர்ச்சியிலே உயர்வதற்கு ஏற்றால் போல் அவனுடைய மனம் என்ற நெருப்பு பூதம் அமைந்துள்ளது.. ஏனைய எந்த ஜீவராசிகளுக்கும் அந்த அமைப்பு இல்லை.. ஆனாலும் மனிதன் தனக்கு வாய்த்த வாய்ப்பினை பயன்படுத்த தவறி விடுகிறான்.. அப்படி தவறி விட்டவன் ஏமாற்றம் அடைகிறான்.. ஏமாந்த மனிதன் தன் தவறை மறைப்பதற்காக தான் சென்ற பாதையே மிக உயர்வான பாதையென்று, மிகை படுத்தி பேசி விட்ட காரணத்தினால், பின் தொடர்ந்த அப்பாவி மனிதர்களும், அவ்வாறே ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர்.. பரிணாம வளர்ச்சிக்கான எந்த ஒரு முன்னேற்றமும் அடைய முடியாமல் தவிக்கின்றனர்.. விலங்கு இனத்திலிருந்து வேறுபட்டு இயற்கையாகவே வழங்கப்பட்ட மனம் என்ற பூதத்தை மேலும் மேலும் வலிமை படுத்தவே முனைகின்றன.. அதனால் மனம் என்ற பூதத்தில் சிக்குண்டவர்களாக சிறை பிடிக்கப் பட்டவர்கள் போல் ஆகி விட்டனர்.. அதற்கு மேல் பரிணாம வளர்ச்சிக்கு உதவக்கூடிய புத்தி,அறிவினை பெருக்கக்கூடிய எந்த வழியும், புலப்படாமல் இருப்பதற்கு காரணம், மனம் கற்றுக் கொடுத்த வழிகளில் சிக்கிக் கொண்டதினால் தான்... எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற புத்தி பலத்தையும், தேர்ந்தெடுத்தில் சரியான வழியில் சென்று அதில் பூரண பயன் தூய்ப்பு பெறும் அறிவு பலத்தையும், பெற முடியாமல் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தடைப் பட்டு விட்டது..
எந்த போதனையும், மனதை பலப்படுத்த வில்லையென்றால், மனிதன் ஏற்றுக்கொள்வதில்லை...
இது தான் மிக பெரிய சிக்கல்.. மனதை தாண்டிய புத்தி, அறிவினை, தூண்டும் பயிற்சிகளை பின் பற்றி பரிணாம வளர்ச்சிக்கு உதவும் பாதைகள், மனதிற்கு உணவு அளிக்காததால், அவைகள் கவர்ச்சிகரமாக இல்லை.. மனமும் ஏற்றுக்கொள்வதில்லை.. இதிலிருந்து மீள மனிதன் தனக்குள் புதைந்து இருக்கும் புத்தி அறிவினை கொஞ்சம் தட்டி எழுப்பி மனம் தாண்டிய பரிணாம வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து, பயில முனைய தொடங்கும் பொழுது, பலம் வாய்ந்த மனத்தின் குறுக்கீடுகள் காரணமாக, அந்த பயிற்சிகள் தடைப் பட தொடங்கி விடுகிறது.. அல்லது அந்த பயிற்சிகள் திசை மாறி போய் மீண்டும் மனதையே பலப்படுத்தக் கூடிய பயிற்சியாக மாறி விடுகிறது... மீண்டும் தோல்வி.. திசை மாறிய அந்த பயிற்சியே, முறையான பயிற்சி என அங்கிகாரம் அடைந்து, தொடர்ந்து பல பிரபல குருமார்களால் போதிக்கப் படும் பொழுது, அந்த முறையற்ற பயிற்சியே, சட்டமாக அதிகார பூர்வமாக மாறி, உண்மையான பயிற்சிகளுக்கு விரோதி ஆகிவிடுகின்றன.. அந்த விரோதம் நாளுக்கு நாள் வலுவடைந்து இன்று உண்மையான பயிற்சிகள் நடை பெற முடியாமல் போய் விட்டன...
சித்தர்களால் மலைகாடுகளில் இரகசியமாக இருந்து உருவாக்கியத்தின் காரணம், இந்த பொய் பயிற்சியாளர்களின் விரோத போக்கே.. அவர்கள் சித்தர்களின் மெய் பயிற்சியினை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.. இந்த பயிற்சியின் மூலம் ஒரு மனிதன் தன்னை விட புத்திசாலி அறிவாளி ஆகிவிட்டால் எங்கே தன் ஆதிக்கம் இழந்து போய் விடுமோ என்ற சுயநலத்தில் எந்த வகை ஆனாலும் மெய் பயிற்சியினை அழிக்கவே விரும்பி செயல் பட தொடங்குவார்கள்.. இன்று எல்லா மதங்களிலும், இறை நிலையை அடைய முடியாத பொய் பயிற்சியாளர்களின் ஆதிக்கமே உள்ளது.. இந்த பொய்யை மாற்ற வேண்டும் என்றால் மனித குலமே அழிந்து விடும் அளவிற்கு நிலைமை மிக மோசமாக உள்ளது.. அப்படியானால் இன்றைய மனித நிலை என்ன ?
ஆயுள் வரை அவல நிலை தான்
ஆனாலும் ஒரே ஒரு வழி மட்டும் இறைவன் என்றுமே திறந்து வைத்திருக்கின்றான்.. அது தான் சிவ நிலை சிவ யோகம்.. அது நிகழ் கால தொடர்பு நிலை.. காலத்தில் கட்டுப் பட்ட பொய் பயிற்சியாளர்கள், காலம் கடந்து செயல் படும் இந்த சிவநிலை சிவயோக பயிற்சிக்கு நுழையவே முடியாது.. பொய் பயிற்சியாளர்கள் நுழைய முடியாத இடம் இது ஒன்று தான்.. ஆகவே தான் இந்த இடம் ஒரு மர்மமாகவே இருக்கும்.. இந்த யோகமும் மர்மயோகமாகவே இருக்கும்.. இறைவனும் இந்த சிவநிலையில் தான் இருக்கிறான்.. இந்த மர்ம இடத்தில் மர்ம யோகம் பயிலுகின்ற போது, அங்கே இருக்கும் இறைவன் துணை நமக்கு பூரணமாக கிடைக்கின்ற பொழுது, பரிணாம வளர்ச்சியின் உச்ச நிலையாகிய நிறைநிலை மனித வளர்ச்சி எளிதாக கிடைக்கிறது.. அப்படி இந்த யோகத்தை பயிலுகின்ற பொழுது பயிற்சி கொடுப்பவனும் தன்னை மறைத்து கொள்ளுவதால் அவனும் மர்ம யோகியாகவே இருக்கின்றான்.. ஆக மொத்தத்தில் மர்மமான முறையில், மர்மமான இடத்தில் சுய நல மனம் ஆதிக்கவாதிகள் அடையாளம் கண்டு கொள்ள முடியாத மன வெளிச்சம் இல்லாத இருப்பு என்ற இருட்டு நிலையில், கற்பவன் கற்பிப்பவன் என்ற பேதங்கள் அற்ற அன்பு என்ற இறை நிலைக்கு முன்பே நாம் மர்ம யோகம் பயிலகின்ற பொழுது நிறைநிலை மனிதன் என்ற பரி பூரண பரிணாம வளர்ச்சிக்கு செல்லுவது நாளைய நிஜம்..

No comments:

Post a Comment