Saturday 27 June 2015

பகுதி 20 முடிவான சிவகலப்பு சிவயோகத்தில் முடி நிலை

தூல பூதங்களான மண் நீர் மூலம் நடக்கும் திருவடி பயிற்சியில் கதிர் ஆற்றலால் மனதில் உள்ள எண்ண ஆதிக்கத்தை உணர்வாக மாற்றி காற்று ஆகாயத்தை பலப்படுத்தும் திருவடி பயிற்சியும், சூட்சும பூதங்களான ஆகாயம்,காற்று மூலம் நடக்கும் நாத பயிற்சியில் காற்றின் இயக்க அதிர்வால் மனதில் உணர்வை பெருக்கி தேகத்தை பலப்படுத்தும் நாத பயிற்சியும் அறிந்தோம்.. திருவடி பயிற்சி ஒளி ஆகவும் நாதம் ஒலி ஆகவும் சம்பந்தப்பட்டு இருக்கிறது.. இவை இரண்டும் ஒளி ஒலி ஆன பயிற்சியாக உள்ளது.. இவை இரண்டும் பயிலுகின்ற போது எண்ணத்தின் துணையின்றி உணர்வின் துணையாலே நடைபெறுவதே இவ்விரு பயிற்சியின் மிக பெரிய தனி சிறப்பு.. பல பயிற்சிகளை கற்றவர்கள் இதை பயிலும் பொழுது மிக சலிப்பு கொள்வார்கள்.. இதில் எந்த நுணுக்கமும் இல்லையால் மனதில் உள்ள எண்ணங்களுக்கு இரை கிடைக்காது.. மனதில் உள்ள உணர்வை மட்டுமே தூண்டி எண்ணங்களை சுருக்கும் ஒலி,ஒளி பயிற்சிகள் முதலில் சலிப்பின் உச்சத்துக்கு அழைத்து செல்வதாலும், நுணுக்கங்கள்
அற்ற மிக தெளிவான ஒன்றாக இருப்பதாலும்,இந்த பயிற்சிகளை இன்றைய குருமார்கள் சொல்லி தர மாட்டார்கள்.. ஆன்மீக வியாபாரம் அடியோடு கெட்டு விடும்.. எண்ணங்களை பலப்படுத்தி, தேகத்தையும் புத்தியையும் பலவீன படுத்தும் நுணுக்கங்கள் நிறைந்து விழிப்பு நிலையை அடியோடு சாய்க்கும் பயிற்சிகள் மட்டுமே கற்று தருவார்கள்.. 
அப்பயிற்சிகளை பல மணி நேரம் பல வாரங்கள் பல மாதங்கள் பல வருடங்கள் செய்யலாம்.. ஏனெனில் எழும் எண்ணங்களின் கற்பனை வாழ்வு தரும் அற்ப சுகங்கள் அதில் அநேகம் அநேகம்.. அதையே பேர் அனுபவமாக கொண்டு வாழ்நாளை விரயம் ஆக்குவார்கள்.. ஒலி ஒளி பயிற்சிகள், சார்ந்து இருக்கும் நிலையை விட்டு தன் பலத்தை பெருக்கி, தன்னை பலர் சார செய்யும் சத்திய நிலைகள்.. 
ஏன் இந்த இரண்டு பயிற்சிகள், ஒன்று போதாதா என்ற கேள்வி எழலாம்.. இரண்டு இருந்தாலே எண்ணங்கள் வந்து விடுமே !! அதற்கு தான் சித்தர்கள் ஒன்றை கண்டு பிடித்தார்கள்.. கட் செவி என்ற ஒன்று.. கண் செவி இரண்டும் இணையும் நிலை.. பிரிக்கவே முடியாத ஒரு இரசாயன கலப்பு.. சிவனும் சக்தியும்
இணைந்த நித்ய இணைப்பு.. பினியல் சுரப்பியும் பிட்யூட்டரி சுரப்பியும் இணைந்து அமுத நீர் சுரக்கும் ஏக சுரப்பி ஆகும் இணைப்பு.. 'சி' என்ற மனமும் 'வ' என்ற புத்தியும் இணைந்த சிவ கலப்பு.. இந்த சிவ கலப்பு தான் முடிவான முடி நிலை.. வேறு ஒன்றும் புறம்பாய் இல்லை.. 
ஒலி ஒளி பயிற்சியின் இணைப்பே கட் செவி பயிற்சி.. ஒலி ஆன நாத பயிற்சியின் போது ஒளி ஆன திருவடி பயிற்சி தோன்றும்.. மாறாக ஒளியான திருவடி பயிற்சியின் போது ஒலியான நாத பயிற்சி தோன்றும்.. இவ்விரண்டால் எண்ணம் உருவாகி பயிற்சி கெடாமல் இருக்க இடையில் ஒரு உன்னதமான
ஒன்று தோன்றும்.. அதுதான் விழிப்பு என்ற நிலை.. என்றும் நிலையான நிலை.. என்ன முடிவு, இவ்வளவு சுவை இல்லாமல் போய் விட்டதே என்று நினைக்கத் தோன்றும்.. காரணம் 'விழிப்பு' என்பதை சரியாக புரிந்து கொள்ளாமையே!! விழிப்பை பிரித்தால் 'வி' என்பது விண் என்ற ஆகாயத்தையும் 'பு' என்பது புவி என்ற பூமி என்ற மண்ணையும், 'ழி' என்பது முழுமையில் இருப்பதையும் 'ப்' என்பது உயிர் மரணக்குழியில் இருந்து எழுந்து நிற்பதையும் குறிக்கும்.. 15 ஆம் நாள் சந்திரன் தேய் பிறையாய் இருந்தது முழுமை அடைந்தது போல் 18 மெய் எழுத்துகளில் 15 ஆம் எழுத்தான 'ழ்' என்ற மெய் எழுத்து முழுமையை குறிக்கும்.. 'ப்' வடிவம் மரணகுழி போன்றிருப்பதை குறிக்க மேல் உள்ள புள்ளி எழுச்சியை குறிக்கிறது.. இப்பொழுது விழிப்பு என்பதுவிண்ணையும் மண்ணையும் இணைத்து மரணமில்லா முழுமை யான பூரண வாழ்கை அதாவது நிறைநிலை வாழ்க்கையை குறிக்கும்.. அந்த வாழ்கை வாழும் நிறைநிலை மனிதன் விண் மண் சக்திகளையும் இடைபட்ட காற்று நெருப்பு நீரின் சக்திகளையும் பெற்று தன் விழிப்பு சக்தியின் மூலம் சமசீர் பஞ்சபூத ஆதிக்கத்தை உடையவனாக உள்ளான்.. சிவன் கழுத்தில் பாம்பு ஏன்? முதலில் பாம்பிற்கு ஒலியையும் ஒளியையும் சேர்ந்தே உணர கண் என்ற ஒரு உறுப்புதான் உள்ளது என்பதை அறிந்ததே.. பாம்பை போல மற்ற சில ஜீவராசிகள் இருந்தாலும் பாம்பின் விஷம் அறிந்ததே... விஷப்பாம்பை கழுத்தில் இருக்கும் பொழுது ஒருவன் எப்படி எச்சரிக்கையாக இருப்பான் என்பதை வெளிப்படுத்தவே சிவன் கழுத்தில் பாம்பு.. விழிப்பு நிலையில் கண் செவி மட்டும் இணையாது... பஞ்ச பூதங்களும் இணைந்து செயலாற்றும் பொழுது வல்லமை பெறுவதில் அளவே இல்லை.. சிவ கலப்பின் காரியபட்ட செம்பொருளான 'விழிப்பு' நிலையின் உயர்வினை உற்று உற்று படித்து நிறை நிலை மனித நிலையை அடைய வேண்டி, கடைசி பகுதியோடு சிவ கலப்பு சிவ யோகத்தை, நிறை செய்து முடிக்கின்றனன்...

No comments:

Post a Comment