Saturday 27 June 2015

பகுதி 18 - சிவ கலப்பு சிவ யோகத்தில் அறிவு தூண்டலை வகைப்படுத்தும் புத்தியின் கூர்மை சக்தி

எங்கும் வியாபித்து உள்ள பேரறிவின் பேராற்றலை வகை படுத்த ஓர் இயக்கம் வேண்டுமே!!
அது புத்தி என்ற இயக்கம்... எந்த ஒரு பெரும் சக்தியையும் வகைபடுத்தும் ஒரு அமைப்பு இல்லையெனில் பெரும்
ஆபத்தே விளையும்.. இராவணன் பேராற்றல் மிகுந்தவன்.. ஆனால் அந்த ஆற்றலை வகை படுத்த தெரியாமல் அழிந்தான்.. வகைபடுத்த வல்ல விவேகம் புத்தியும் கொண்ட விபீசனன் ராவணனை விட்டு விலகியது இராவணன் அழிவுக்கு காரணமாகும்.. அப்படி பேராற்றலை வகைப் படுத்தும் அமைப்பே புத்தி என்ற காற்று என்ற பூதம்.. காற்று மூச்சாய் நொடிக்கு நொடி தேக ஆற்றலை வகை படுத்தவில்லை யென்றால் மண் என்ற தேகம் சில நிமிடங்களில் நிலை குழைந்து விடும்.. எங்கும் ஊடுருவும் தன்மையால் காற்று கூர்மை சக்தி உடையது.. கூர்மை என்பது குவிந்து விரைந்து எழுந்து ஒரு மையத்தில் செயலாற்றும் தன்மை உடையது என்று பொருள்.. கூர்மை திறன் இல்லையெனில்
ஆகாய அறிவு இருந்தும் பயன் இல்லை.. அறிவும் விழிப்பும் வேண்டும்... அதே போல் அறிவு திறனும் விழிப்பு திறனும் வேண்டும்.. திறன் என்று சொல்லக்கூடியது தான் கூர்மையும், திறமையும்.. புத்தி திறன் மேம்பட என்ன வழி ? ஒலி 
ஒளி பயிற்சியில் மட்டுமே புத்தி திறன் மேன்மை அடைய வழி உண்டு.. நாதத்தில் உணர்வு பெற்று பயிற்சி பெறும் பொழுது, எண்ணம் ஆதிக்கம் பெற்ற மனம் நாதத்திலிருந்து விலகத் துடிக்கும்.. அப்பொழுது நாதத்தில் தொடர்ந்து இருக்கவும், நாதத்தோடு இணைந்து தொடர்ந்து இருக்கவும் உதவுவது விழிப்பு ஆற்றலே.. அதுவே புத்தி கூர்மை புத்தி திறன் என்பதுவும்.. ஆற்றல், திறன்,கூர்மை என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.. விழிப்பு நிலைக்கும் விழிப்பு திறனுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும்.. விழிப்பின் நிலை நிலையானது... ஆனால் திறனோ மாறும் தன்மை உடையது.. அந்த திறன் தான் புத்தி... புத்தி மனிதனுக்கு மனிதன் மாறும்.. ஆனால் பேரறிவு எல்லா உயிருக்கும் நிலையானது.. எல்லாருக்கும் ஒரே அளவில் கிடைக்கக்கூடியது.. மனம் காலத்தில் கட்டுப்பட்டது.. காலத்தில் பயணப்படுவது.. ஆகவே தான் காலத்தை வெல்லக் கூடிய ஒன்றே அதர்மத்தை வெல்ல விரைவு என்ற நொடிக்கும் பலமடங்கு குறைவான நேரத்திற்கான ஒரு திறன் தேவை படுகிறது.. அது எல்லையில்லாத ஒன்றின் அம்சமாக இருந்தால் மட்டுமே பொருந்தும்.. எல்லையில்லா ஒன்றுக்கு காலம் இல்லை என்பது அசைக்க முடியாத உண்மை.. காலம் இல்லாதது ஒன்று உண்டு என்றால் அது விழிப்பு திறன் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்..? அதுதான் புத்தி.. சன நேரத்தில் செயல் படும் புத்தி காலத்தை வென்றது.. அதனால் தான் பேரறிவை சார்ந்த புத்தி என்ற பூதம் இருக்கவேண்டிய அவசியம் வந்தது.. காலத்தை வென்ற பேரறிவு தானாக செயல் படாமல் புத்தியின் மூலமே செயல் படும்.. பேரறிவின் இயக்கஒழுங்கான நாதத்தில் பொருந்த, பொருந்த, விழிப்பு திறன் ஆன புத்தி பெருகும்.. புத்தியில் செய்வது அனைத்தும் சீரானதாகவே இருக்கும்.. காலத்தால் கட்டு பட்ட புத்தியில் விழிப்பு திறன் அல்லது புத்தி திறன் குறைவாகவே இருக்கும்.. அதனால் காலம் தாழ்த்தியே, பிரச்சனைகளை அணுகும்.. அதற்குள் எல்லாம் முடிந்து விடும்.. காலம் கடந்து வரும் புத்தியினால் பயன் ஒன்றும் இல்லை.. இந்த புத்தி இருந்தும் அந்த நேரம் இந்த புத்தி தோன்ற வில்லையே என்று வருத்தப்பட்ட நிகழ்வுகள் பல பல.. ஆகவே அறிவு இருந்தால் மட்டும் போதாது.. புத்தியின் திறனும், கூர்மையும் அவசியம் தேவை... புத்தி திறன் காலத்தை வெல்லும் தகுதியை பெறும் தகுதியை உடையது.. நிறைநிலை மனிதன் நொடியில் எதையும் சாதிக்க வல்லவன்.. அவன் காலத்தை வெல்லும் புத்தி திறன் உள்ளவன்... மனம் நாதத்தில் இணையும் பொழுது அது எண்ண ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு செயல் வேகமும் விரைவும் கொள்கிறது.. புத்தியின் விவேகத்தை விரைவில் ஏற்று செயல்பாட்டிற்கு வருகிறது.. வழக்கமான காரியங்களை மனமே செய்வதால் மனமே புத்தியாக செயல்பட்டு எதையும் திறன்பட செய்கிறது.. இவையெல்லாம் நாதத்தின் துணையால் எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நிலையால் மனத்திற்கு சாத்தியமாகிறது.. ஆக புத்தி என்பது முரண் பாடுகளை சரியான நேரத்தில் சரியான முறையில் தீர்த்து வைக்கும் திறன் கொண்டது எனலாம்.. காலத்தை பிளந்து நாத ஒலியோடு இசையத் தொடங்கும் பொழுதும் அப்படி இசைவதில் மேன்மை அடையும் பொழுது புத்தி திறன்,விழிப்பு திறன் மேலும் மேலும் அதிகரிக்கின்றது.. நாதமும் திருவடி பயிற்சியும் இரு கண்கள் போல.. மனம் எண்ண ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு உணர்வு பெறுகின்ற பொழுது அது புத்தியின் தன்மை அடைகிறது என்பதை மறக்கக்கூடாது. நிறை நிலை மனித தன்மை அடைய முடியாத ஒன்று அல்ல என்பதை சிவகலப்பு சிவ யோகத்தை உற்று உற்று படிக்க தெளிவாகும்..

No comments:

Post a Comment