Saturday 27 June 2015

உளவுகள் பகுதி ஒன்பது - ஒழுகலில் உறுதி படல்


ஒழுக்கத்தை கடைபிடிப்பது தான் ஒழுகல்.. ஒழுக்கத்தை போதிக்கும் எதுவும் இன்று எவரையும் கவருவது இல்லை.. புகை பிடித்தால் உடல் நலனுக்கு கேடு, குடி குடியை கெடுக்கும் போன்ற அரசே போதிக்கும் போதனைகள் என்ன பலன் தந்தது ? ஒழுக்கம் என்ற சொல்லை போல் எரிச்சலூட்டும் சொல் இன்றைய இளம் தலை முறைக்கு வேறு எதுவும் இருக்க முடியாது... ஒருவனை பலவந்தமாக ஒழுக்கத்திற்கு இழுக்க இழுக்க அவனுக்குள் ஒழுக்கமின்மைகான தேடுதல் அதிகமாகி கொண்டே போகிறது.. முடிவில் அவன் ஒரு தீவிரவாதி ஆகிறான்.. தன் மனம் போன போக்கிற்கு எந்த ஒரு இடையூறும் நெருங்காத, தீவிர வாத தன்மையின் சூழலுக்கு போகிறான். இப்பொழுது இதுவரை அடக்கப்பட்ட அவன் மற்றவர்களை பலாத்காரத்தால் அடக்க முயற்சி செய்கிறான்.. ஒழுக்கம் இல்லையேல் உயர்வு இல்லை என்ற நிலையில் ஒழுக்கத்தை போதிக்கும் நிலை அறியாது மனித இனம் இன்று தடுமாறுகிறது.. 
ஒழுகல் என்பதை பிரித்தால் ஒ+ழ்+உ +கல்..இதில் கல் என்றால் பயிலல் என அறிந்ததே.. ஒழு என்பது ஒன்றித்து (ஒ) பூரணமாய் (ழ்) இயங்குதல் (இ) என்பதாகும்.. ஒழுகல் என்பது, ஒன்றில் ஈடுபடும் போதும், வேறு ஒன்றின் இடையூறுகளின் பாதிப்பு இல்லாமல் ஒருமையுடன் பூரணமாக இயங்குவதை கற்றல் என்பதாகும்.. ஒழுகலை எங்கே கற்பது.. அதை கற்றுக் கொடுக்கும் தகுதி எந்த மனிதருக்கும் இல்லை என்பது கசப்பான உண்மை.. இறைவனோ இயற்கையின் பேர் ஒழுங்கு மூலம் ஒழுங்கினை வெளிப்படுத்துகிறான்.. ஆனால் அதை உணர்ந்து கொள்ளும் மன நிலை மனிதனுக்கு இல்லை.. ஆனால் ஒழுங்கினை கற்று தரும் நல்ல ஊடகங்கள் இன்றி மனித இனம் இன்று தடுமாறுகிறது.. மதங்கள் கற்று தரும் ஒழுக்கங்கள் அனைத்தும் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.. காரணம் ஒழுக்கத்தின் உண்மை தன்மை அவை அறிய வாய்ப்பில்லை.. ஒழுக்கத்தையே போதித்து தன்னை பலப்படுத்திக் கொள்ளும் வியாபார குருக்களின் அந்தரங்களிலிருந்து வெளிபடும் ஒழுங்கின்மை பலரையும் திகைக்க வைக்கிறது.. வள்ளலார்,வள்ளுவரை போன்றோர் 
ஓரிருவர் இருந்தாலும் ஒழுக்கப் பயிற்சிக்கான நெறிமுறைகளை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை.. 
ஒரு நல்ல உதாரணம் சொல்லுகிறேன் உற்று கவனியுங்கள்.. மனிதனுக்கு உள்ள நோய்கள் ஓர் ஒழுகின்மை.. அதை பற்றி இலட்ச கணக்கில் புத்தகங்கள் உள்ளன.. ஆனால் ஆரோக்கியம் என்பதை பற்றி நோய்கள் பற்றி கூறாமல் ஏதாவது ஒரு புத்தகம் உண்டா ? இல்லவே இல்லை.. எந்த ஒரு நோய்களும் இல்லா நிலையே ஆரோக்கியம் என்பதை புரிந்துதான் கொள்ளவேண்டும்.. புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றிற்கு நூலில் விளக்கம் தர முடியாது. அன்பு ஆரோக்கியம்,கருணை என்பதெல்லாம் ஒரு உணர்வு பூரணமான நிலைக்கு மிக சரியான விளக்கம் தர முடியாது.. அதே போல் தான் ஒழுக்கம்.. அது ஒரு உணர்வு மயமானது.. ஒழுக்கம் ஒரு உணர்வால் இயங்க வேண்டிய ஒன்று.. இங்கே இயங்குதல் என்பதை சென்ற பகுதியின் மூலம் தெளிவாக அறியலாம்.. இன்றைய மதங்களின் போதனை மூலம் ஒழுக்கத்தை இயக்க நினைத்தால் முரண் பாடே வரும்.. ஒழுக்கம் இயங்குதலுக்கு உட்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆகிறது.. அது உணர்வோடு கலக்க வேண்டும்.. 
இந்த பிரபஞ்சத்தில் ஒழுக்கத்தை பயில்விக்கும் ஒன்றே ஒன்று உண்டு என்றால் அது இறைவனால் வழங்கப்பட்ட நாதம் தான்.. எப்படி தேகத்தில் ஆரோக்கியம் மர்மமான 
முறையில் உணரப்படுகிறதோ, அதே போல் நாத இணைப்பில் நாம் இருக்கும் பொழுது ஒழுக்க சீலர்களாக நாம் மாறும் அதிசயம் மர்மமான ஒன்று.. அது மர்மயோகமாக உள்ளது.. மர்ம யோகம் என்பது காரணயோகம்.. அதற்கு விளக்கம் காணவே முடியாது என்பதால் தான் மர்ம யோகமாக உள்ளது.. காரியப்பட்ட யோகங்கள் யாரும் கற்று தரலாம்.. ஆனால் தகுந்த பலன் கிடைப்பது என்பது கேள்வி குறியே.. காரண யோகங்கள் கடவுள் கொடுத்த காரியப்பட்ட உளவுகள் ஒன்றின் மூலமே பயில முடியும்.. தயவு செய்து இந்த உண்மையை நிதானமாக படித்து உணருமாறு வேண்டுகிறேன்.. நாதத்தை போன்ற ஒரு ஒழுங்கு தன்மை வேறு எங்கும் எதிலும் காண முடியாது என்பதை அறிந்ததே.. அதன் இணைப்பு ஒரு ஒழுங்கு என்ற உணர்வாக நம்மில் வளர வளர நாதம் போன்றே நீங்காத தன்மையாக உறுதி அடைகிறது.. மிக திறம் பட செயல் ஆற்ற ஒழுக்கம் மிகமிக தேவை என்பதால் அது உயினும் மேலாக கருதப்படும் என்கிறார் வள்ளுவர்.. இவருக்கு நாதத்தை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது என்று அலுப்பு அடைவர்கள் இருக்கலாம்.. இந்த பெரிய உண்மையை சொல்லிகொண்டே இருந்தால் அலுப்பு அடைந்து சிஷ்யர்கள் தன்னைவிட்டு விலகிவிடுவார்கள் என்ற நோக்கில் தான் இதை தெரிந்த குருமார்கள் இதை பற்றி மிக மிக குறைவாகவே பேசுவார்கள்.. பெரும் பாலும் வியாபார நோக்கில் நாதம் மறைக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.. சற்று சிக்கலான விசயம்.. விழிப்புடன் படிக்குமாறு வேண்டுகின்றனன்..
சுருக்கம்:- ஒழுக்கம் என்பது ஒருமையுடன் பூரணமாக இயங்க பயிலுவது.. போதிக்கப்படும் ஒழுக்கம் முரண் அடைகிறது.. ஒழுக்கம் கற்க உலகில் எந்த ஊடகமும் இல்லை.. மத ஒழுக்கம் எதிர் மறை விளைவுகளை தருகிறது.. ஆரோக்கியத்தை விளக்க எப்படி முடியாதோ காரணயோகமாக அமைந்துள்ள ஒழுக்கத்தையும் விளக்கவோ போதிக்கவோ முடியாது.. இறைவனால் வழங்கப் பட்ட உளவுகளால் மட்டுமே ஒழுக்கத்தை பெற முடியும்.. செயல் திரனுக்கு ஒழுக்கம் ஒன்றே உதவும்.. ஒழுக்கத்திற்கு நாதம் ஒன்றுதான் துணைபுரியும்..
அவ்வளவே

No comments:

Post a Comment