Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி ஆறு


பொருள் ஆக்கம் அருள் பெருக்கம்
**************************************************
சென்ற பகுதிகளில் விதிக்கப்பட்ட சக்தியையும், அதிகப்பட்ட சக்தியையும் சொல்லப் பட்டதை மீண்டும் நினைவு கூறுகிறேன்.. இந்த பிறவியில் பிரபஞ்ச பேரறிவால் கொடுக்கப்பட்ட சக்தி அளவுக்கு உட்பட்டது.. அதனால் தான் அது
விதிக்கப்பட்ட சக்தி எனப்படுகிறது.. அளவுக்கு உட்பட்ட அந்த சக்திக்கு உள்ளே தான் மனிதன் தன் பஞ்ச பூதங்களுக்குள் ஏதோ ஒன்றுக்கு அதிகமாக செலவு செய்து தனித்துவம் வாய்ந்தவனாக இருக்கிறான். ஆனால் மற்ற பஞ்ச பூதங்களில் மேன்மை அடைய முடியாமல் அவைகளில் பலம் இழந்து இருக்கிறான்.. இருந்தாலும் தான் மேன்மை அடைந்த பஞ்ச பூத ஒன்றில் அடைந்த பெருமையிலேயே காலத்தை தள்ளி கடைசியில் தன் தேக பூதத்தில் வலு இழந்து மரணம் அடைகிறான்.. அவன் அடைந்த பெருமையும்,திறமையும் அவனுடனே காணாமல் போய் விடுகிறது.. சரித்திரமாக எஞ்சி நிற்கிறது.. இந்த சரித்திரம் ஒரு போதை பொருளாக பின் வருவோர் உபயோகித்து நாசம் அடைகிறார்கள்.. இன்று ஒவ்வொரு மதத்தினரும் இந்த போதை பொருளை மிக அதிகமாக உபயோகித்து வலு இழந்து போய் அன்பு என்ற சக்தியும் இழந்து மத நல்லிணக்கமே கெட்டு போய் விட்டது..
இன்றைய குருமார்கள்,எனக்கு தெரிந்தவரை ஒருவனின் விதிக்கப் பட்ட சக்தியை ஏதோ ஒரு வகையில் மேன்மை அடைய வைத்து, பெருமை பாராட்டி பாராட்டி பெரும் தீங்கையே விளைவிக்கின்றனர்.. தற்காலிக தீர்வு ஒன்றை மட்டுமே தர முடியும்.. விதிக்கப் பட்ட சக்தி தீர்ந்து விட்டால்
தீர்வு இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும்.. ஒரு குரு ஒருவனின் நோயை குணப்படுத்துகிறார் என்றால் ஒரு பூதத்தை பலப்படுத்தி, தற்காலிக குணம் ஏற்படுத்தி, பலவீனப்பட்ட மற்ற பூதங்களால் பல வேறு நோய்களுக்கு வழி வகுக்கிறார்.. தங்கத்தை வைத்து சிலை செய்தால் சிலை உருவாகிறது.. தங்கம் காணாமல் போய் விடுகிறது.. இது தான் பொருள் ஆக்கம்.. இன்றைய பொருள் ஆக்க குரு போதனையில், ஒரு பூதத்தில் சாதனை செய்து மற்ற பூதங்களில் வேதனை அடைய செய்வது.. இது தான் உலக மகா குருக்களிடம் தொண்டர்கள் படும் வேதனை.. சாதனைக்கு பொறுப்பு ஏற்ற குரு, வேதனைக்கு அது உன் கர்ம வினை என்று தட்டி கழிப்பார்.. ஒருவனின் விதிக்கப்பட்ட சக்தியை முழுமையாக சாதனைக்கு செலவழித்த குரு, தொண்டனின் வேதனை தீர, தொண்டனிடம் வேறு சக்தியின்மையால் அவன் வேதனை தீர தடுமாறுகின்றார்.. தன் முழு சக்தியை புத்தியாக ஆக்கிக் கொண்ட குரு தன் சக்தியை தொண்டனுக்கு கொடுக்க இயலாது.. எந்த தன் சக்தியையும் தொண்டனுக்கு கொடுக்க குருவால் முடியாது.. தன் புத்தியால் தொண்டனின் விதிக்கப் பட்ட சக்தியை ஒரு பூதத்தில் கூட்டிவைக்கவே முடியும். சக்தி என்ற பார்வையில் இதுவும் பொருள் ஆக்கமே.. ஆகாய பூதத்தில் சில உணர்வு அனுபவமாக சில சுகங்களை காண்பிக்கும் புத்திதிறன் உள்ள குருமார்கள் பேரின்பம் பேரின்பம் என பறைசாற்றி தன் தொண்டர்களின் வாழ்நாளை வீண் ஆக்கும் கொடுமை என்ன வென்று சொல்வது.. கள் உண்ட போதை போல் கலங்கி யிருக்கும் அந்த தொண்டன் கல்லை போலவே செயலற்று இருப்பான்.. பின் ஏன் இவ்வளவு வளமான இந்தியாவில் இவ்வளவு வறுமை இருக்காது ?.. எல்லாம் நம் குருமார்களின் மருள் கருணை தான்.. மருள் என்பதை கவனிக்கவும்.. விதிக்கப் பட்ட சக்தியையும் பொருள் ஆக்கத்தையும் வேண்டிய அளவிற்கு சொல்லி ஆகிவிட்டது..
விதிக்கப்பட்ட சக்தியிலிருந்து அதிகப்பட்ட சக்திக்கு செல்ல வேண்டிய அவசியம் ஒவ்வொரு சாதகனுக்கு கண்டிப்பாக தேவை படுகிறது.. பளு தூக்குபவன் மன தெளிவு குறைவாக இருப்பதும். மன தெளிவு உள்ளவன் பளு தூக்க முடியாத நிலையில் இருப்பதும், பளு தூக்குபவன்(weight lifter) ஒரு டாக்டராக இல்லாமல் இருப்பதும், ஒரு டாக்டர் பளு தூக்க முடியாத நிலையில் இருப்பதும், எல்லாம் விதிக்கப் பட்ட சக்தி குள்ளேயே இருப்பதால் தான்.. அளவற்ற அதிகப்பட்ட சக்தி கிடைத்துவிட்டால் இந்த பிரச்சனை இல்லை.. சிவ யோக சிவகலப்பு என்ற கருத்தும் அதன் நாத திருவடி பயிற்சிகளும்,அடுத்த படியான முறையான வாசியோகமும் தரும் அளவற்ற அதிகப்பட்ட ஆற்றலில் தான் நிறை நிலை மனிதன் உருவாகி இந்த உலகிற்கு உண்மையான தீர்வு தருகிறான்... மற்ற யாவராலும் இறைவன் உட்பட முடியாது.. இறைவன் வந்தாலும் நிறைநிலை மனிதனாக வந்தால் மட்டுமே முடியும்.. அதிகப் பட்ட சக்தி பெறுவதற்கான மிக பெரிய உளவு, பிரபஞ்ச சக்தியை உணர்ந்து அதோடு தொடர்ந்து, இணைந்து, கலந்து நிற்பதை அறிவது தான்.. வேறு வழியே இல்லை.. பிரபஞ்ச சக்தியான அருளோடு கலந்து அருள் பெருக்கமாக அதிகப்பட்ட சக்தியை பெறுவதை தவிர வேறு ஒரு வழி இல்லை.. பொருள் ஆக்க போதனைகளின் பிடியிலிருந்து விடுபட்டு அருள் பெருக்க உளவிற்கு வந்தால் ஒழிய வேறு வழி உண்டாயெனில் இல்லவே இல்லை.. சற்று புரிந்து கொள்ள முனையுமாறு வேண்டுகின்றனன்.

2 comments:

  1. புரிந்த மாதிரியும் இருக்கிறது புரியாத மாதிரியும் இருக்கிறது

    ReplyDelete
  2. அருமையான கருத்துக்கள்.
    வாழ்க! வளர்க!!

    ReplyDelete