Saturday 27 June 2015

உளவுகள் பகுதி மூன்று - இறைவனால் இயலாத காரியம்


அத்தனை மகா சக்திகளை பெற்ற இறைவனால் இயலாத காரியம் ஒன்று உளதா என்று கேள்வி பட்ட நிமிடமே, சிவ சிவ, ராம ராம, அல்லா அல்லா,O my God, என்று கன்னத்திலும், வாயிலும் நெஞ்சிலும் அடித்து கொள்ளும் இறை அன்பர்களுக்கு ஒரு கசப்பான உண்மையான, சத்தியமான செய்தி என்னவெனில், ஆம் இறைவானால் முடியாத காரியம் ஒன்று இருக்கிறது என்பதுதான்.. இந்த உண்மையை உணராமல் ஆன்மீகமே இல்லை.. இயலாத இறைவனை உணராத ஆன்மீகம் ஆன்மீகமே அல்ல.. அல்லவே அல்ல.. 
இப்பொழுது உண்மையை ஆராய்வோம்.. சற்று கவனமாக படிக்குமாறு வேண்டுகின்றனன்.. தனிபெரும் கருணையாக இருக்கும் இறைவன் தன் பேராற்றலை கொடுக்க மட்டுமே தெரியும்.. அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவ்வளவே.. எவ்வுயிர்கள் ஏதேது வேண்டினும் அவ்வுயிர்களுக்கு கருணை மட்டும் காட்டுவான். கருணை என்பது கொடுப்பது மட்டுமே.. பெரிய சிக்கல் என்னவென்றால் கொடுத்ததை திரும்ப பெற முடியாது.. தலையில் கை வைத்தால் சுட்டெரிக்கும் வரம் ஒரு அசூரனுக்கு கொடுத்து விட்டு அந்த வரத்தை திரும்ப பெற முடியாமல் சிவன் பட்ட பாட்டை அனைவரும் அறிந்ததே.. சிவனுக்கு ஏன் இந்த அவல நிலை.. கருணை ஒன்று மட்டுமே அவன் செயல்பாடாய் இருப்பதால் கொடுத்ததை வாங்கமுடியாது.. இதற்கு கொடுக்கும் பண்பான கருணையே இறைவனுக்கு இடையூறாக இருக்கிறது.. இப்பொழுது இயலாத ஒன்று இறைவனுக்கு வந்து விட்டதா..? மேலும் ஒன்றை பார்க்கலாம்.. பிரபஞ்ச முழுமையும் இயக்கி கொண்டு இருக்கும் இறைவனுக்கு இயலாத இயக்கம், தான் கொடுத்ததை வாங்கமுடியாது.. கொடுத்ததை திரும்ப வாங்க முடியவில்லை என்றால் இறைவனால் இந்த உலகில் தர்மத்தை நிலை நாட்ட முடியாது.. இறைவனிடம் அதிக கருணையை பெற்றவர்கள் அதிக ஆற்றலை பெற்றவர்களாக இருப்பார்கள்.. அதிக ஆற்றல் பெற்று இருந்தாலும் இறைவன் பண்பான கருணை ஈகை தன்மையை பெறாதவர்களாக இருப்பார்கள்.. இதனால் குறைந்த ஆற்றல் உடையவர்களை ஆதிக்கம் செலுத்தவே முனைவர்.. இங்கே தான் தர்மம் அழிகிறது.. தான் கொடுத்த ஆற்றலை ஆதிக்கவாத தீவீரவாதிகளிடமிருந்து, திரும்ப பெற முடியாத நிலையால், தர்மத்தை நிலைநாட்ட முடியாத நிலையில் இருக்கிறான் இறைவன்..
இறைவன் அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவான்,என ஆன்மீக வாதிகள் வாதிடலாம்.. அதற்கும் இறைவனுக்கு முடியாத காரியமே.. எல்லாவற்றையும் இயக்க தெரிந்த இறைவனுக்கு இயங்க தெரியாது.. இயக்குதல் வேறு, இயங்குதல் வேறு.. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.. இயங்குவதற்கு ஒர் இயக்கம் தேவை.. இயக்கம் மட்டுமே அறிந்த இறைவனுக்கு அவனை இயக்க அவனுக்கும் மேல் வேறு ஒரு இயக்க சக்தி இல்லையாதலால் அவனுக்கு இயங்க தெரியாது.. தனக்கு புறம்பாய் ஒரு அவதாரம் எடுக்கையில் அந்த அவதாரம் தன் மூலசக்திக்கு முழுமையாக இயங்க தெரிந்து இருக்க வேண்டும்.. இயங்க தெரியாத காரணத்தினால் இறைவன் அவதாரம் எடுக்க முடியாது.. முடியவே முடியாது..
பின் யார் இந்த அவதார புருசர்கள்.? அவர்கள் நிச்சயமாக இறைவனாக இருக்கமுடியாது.. அவர்கள் நிச்சயமாக சத்தியமாக நிறைநிலை மனித தன்மை உடையவர்களே.. அவர்களின் பூரண இயங்கும் தன்மையால், இயக்கும் இறைவனின் பேராற்றலை பெற்று அற்புதங்களை செய்தார்கள்.. மனிதன் மட்டுமே பஞ்ச பூத சம ஆதிக்கம் பெற்று இறைநிலைக்கு தன் பூரண இயங்கும் தன்மையால் நிறைநிலை மனிதன் ஆகிறான்... அந்த நிறை நிலை மனிதன் மட்டுமே இந்த உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் வல்லமை உடையவனாக இருக்கிறான்.. இறைவனால் இயலவே இயலாது.. தன் பொறுப்பை தட்டி கழிக்கவும்,சோர்ந்த,பயந்த மனிதன் வீரம் இழந்த நிலையில், இறைவனை எதிர் பார்த்து ஏமாந்து கொண்டு இருக்கிறான்.. பூரண இயங்கும் தன்மை அறியாத காரணத்தினால் மரணத்தை நோக்கி ஓடி ஓடி செயலற்று போய் அழிகின்றான்.. நிறைநிலை மனிதன் ஆகி தன்னையும் தன்னை சார்ந்தரையும் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.. எல்லோரும் உயிர் பெற்று எழவும் உயிர் காக்கவும் நிறைமனிதனுக்கு ஆன உளவுகளை ஒரு கடமையாக சொல்லி வருகிறேன்.. உலக நன்மை பொருட்டு சொல்லும் இவ்வுளவுகளை மற்றவர்களிடம் பகிர்வதற்கான பணியினை செய்தீர்களானால் உண்மையான் இறை பணி இதுவன்றோ.?. மிக உன்னத ஆன்மிக உளவான இயங்குதல் என்ற நிலைபாட்டை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.. இன்று இம்மட்டும் இவ்வளவே.. மற்றவை உங்கள் கைகளில்..

No comments:

Post a Comment