Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி ஏழு


வாசி யோகத்தில் வலு ஊட்டும் பயிற்சி
***********************************************************
மிக முக்கியமான இந்த பயிற்சியினை வாசியோகத்தில் பெரும்பாலும் சொல்லி தருவதே இல்லை.. 
சில பயிற்சிகள் எதற்கு பயன் படும் என்பதையும் சொல்லுவதில்லை.. கவனமாக படியுங்கள்.. ஒரு உயர்ந்த லட்சியம் நமக்கு படுகிறது.. ஆனால் அதற்காக பயணிக்கும் போது பல பல இடையூறுகள்.. வேறு வேறு எண்ணங்களால் திருப்பப் பட்டு லட்சியத்தை விட்டு விலகி விடுவோம்.. உயர்ந்த லட்சியம் மனதில் சதா இருக்கும்.. ஆனால் இம்மி அளவும் முன்னேற்றம் காண முடியாமல் இருக்கும்.. காரணம் என்ன? லட்சிய எண்ணம் வலு இழந்த நிலையிலும், மற்ற எண்ணங்கள் வலு உடையதாக இருக்கும்.. எண்ணிக்கையில் அதிகமான மற்ற எண்ணங்களை வலு இழக்க செய்வதை காட்டிலும் லட்சிய எண்ணத்தை வலு கூட்டுவதே மிகவும் புத்திசாலி தனம்.. அப்படிதானே !!
லட்சிய எண்ணத்தை மற்ற எண்ணங்களை காட்டிலும் வலு ஏற்றி விட்டால், மற்ற எண்ணங்களின் இடர்பாடுகள்,தொல்லைகள்,இலட்சிய எண்ணத்தை ஒன்றும் பண்ணாது.. போய் கொண்டே இருக்க வேண்டியது தான்.. இலட்சிய எண்ணத்தை மற்ற எண்ணங்களை காட்டிலும் வலு ஏற்றி விட்டால் வெற்றி தங்கு தடையின்றி நம்மை தேடி வந்தே ஆக வேண்டும்.. இதில் புரிதல் சரியாக இருக்க வேண்டும்.. வலு ஏற்றும் பயிற்சியினை பார்க்கலாம்.. நான் நாற்பது வருடங்களாக பூஜை செய்து வருகிறேன்; நான் அறுபது வருடங்களாக
யோக பயிற்சி செய்து வருகிறேன்: ஆனால் ஒரு பலனும் இல்லை.. எதற்காக பூஜையும் யோகமும் செய்கிறார்களோ அதற்கான எண்ணத்தை வலு ஊட்டப் படாததாலே மற்ற எண்ணங்களின் இடர்பாடுகளால் முன்னேற்றம் மிக மிக குறைவாகவே உள்ளது.. வாசியோகத்தில் லட்சிய எண்ணத்திற்க்கு வலு ஊட்டும் உளவு என்ன என்பதை பார்ப்போம்..
மூச்சில் இரண்டு கலைகள் உண்டு.. ஒன்று உள் வாங்கும் மூச்சு.. இதனை
சந்திர கலை என்பர்.. மற்றொன்று வெளி விடும் மூச்சு இதனை சூரிய கலை என்பர்.. வெளிவிடும் மூச்சில் அக்னி என்ற கனல் அதிகமாக இருப்பதால் அதனை சூரிய கலை என நினைவில் கொள்ளலாம்.. சூரிய கலையை வரவும் என்றும் சந்திர கலை செலவும் என்பர்.. சிலர் இதில் மாறு பட்ட கருத்தும் கொள்வர்.. வரவு செலவு என்றால் சக்தி வரவு சக்தி செலவு என்பதாகும்.. சூரிய கலையான வெளி மூச்சில் சக்தி வரவு ஆகிறது.. மூச்சை வெளி விடும் குறுகிய கால அளவில் எண்ணங்களின் ஆதிக்கம் மிக குறைவாக இருக்கும்.. இதை நம் விழிப்பு நிலையில் அறியலாம்.. இது மிக மிக முக்கியமான நேரம்.. இந்த நேரத்தில் எல்லா எண்ணங்களில் ஆதிக்கம் குறைவாக உள்ள நிலையில், நம் இலட்சிய எண்ணத்தை விழிப்பு நிலையில் திணிக்கும் பொழுது, மற்ற எண்ணங்களை காட்டிலும் நமது இலட்சிய எண்ணம்,வரவான சக்தியால் வலுவடைகிறது.. நாடி சுத்தியில் கிடைக்கும் ஒழுங்கான உள் முச்சு, வெளி மூச்சு சுவாசத்தில், வெளி மூச்சின் சமயம் நம் இலட்சிய எண்ணத்தை திணிக்கும் சமயம் சிறிது சிறிதாக இலட்சிய எண்ணம் வலு அடைந்து வலு அடைந்து, முடிவில் மற்ற எண்ணங்களை காட்டிலும் மிகுந்த வலு அடைகிறது.. பின் சொல்ல தேவை இல்லை.. வெற்றி நமக்கு சொந்தமாகிறது.. உள் வாங்கல், வெளிவிடல் மூச்சு நான்கு விநாடிகளுக்கு ஒரு முறை நடை பெறுகிறது.. அந்த ஒன்று,சக்தி வரவு தேர்ச்சி பெற்ற நாதத்தில் இலட்சிய எண்ணத்திற்கு வலு ஊட்டும் செயல் ஒரு விநாடியிலேயே பல முறை நடக்கிறது.. அதற்கு காரணம் நாதத்தில் இருக்கும் பொழுது மிக அதிக நேரம் சூரிய கலை நடக்கிறது.. யோகக் குறிப்பில் இடது மூச்சு துவாரத்தைக் காட்டிலும் வலது மூச்சு துவாரத்தில் சுலபமாக சுவாசம் சென்று வந்தால் சூரிய கலை மிகுந்து உள்ளதாகவும் மாறாக இடது துவாரத்தில் இருந்தால் சந்திர கலை மிகுந்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. நாதத்தில் சற்று அழுத்தமாக இணைந்து இருக்கும் பொழுது, சூரிய கலையே ஓடும் என்பது வியப்பான விசயம் அல்ல.. அந்த நிலையில் இலட்சிய எண்ணத்தை திணிக்கும் பொழுது இலட்சிய எண்ணம் வலு பெறுகிறது..திணித்தல் என்பது விழிப்பு நிலையில் வலுக் கட்டாயமாக எண்ணுதல் என்பதாகும்.. வாசியோகத்தில் சில அடிப்படை பயிற்ச்சியே மேல் உள்ளவை.. எது இருந்தாலும் வாசியோக பயிற்சி ஒரு குருவின் மேல் பார்வையிலே தான் கற்க வேண்டும்.. எனது கருத்துகளை மையமாக வைத்து பயிலவே கூடாது.. வாசியோக புரிதலுக்கு மட்டுமே இது பயன் படும்.. ஆனால் நாதம் குரு துணையின்றி கற்கலாம்.. இலட்சிய எண்ணத்திற்கு மேலும் வலு ஊட்டி கால விரையத்தை தவிர்க்கும் பயிற்சினை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..

No comments:

Post a Comment