Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி ஒன்பது


அக்னி கலையில் மதியான சந்திர கலை
************************************************************
சந்திர கலையும் சூரிய கலையும் இணைந்து அக்னி கலையாக மாறி இருப்பதையும் அது புருவ மத்தியை மையமாக 
கொண்டு இயங்குவதாகவும் சொல்லாத வாசியோக குருமார்களே இருக்கமாட்டார்கள்.. சரி இப்போது மூச்சு உள்வாங்கும் போது சூரிய கலையோடு சேர்ந்த சந்திர கலை வெற்றிடத்தை,அதாவது பிரபஞ்ச சக்தியை மட்டுமே உள்வாங்க தொடங்கும் என சென்ற பகுதியில் பார்த்தோம்.. அப்படியானால் சுவாசத்தில் காற்று உட்செல்லாதா என கேட்கலாம்.. சந்திர கலையும் சூரிய கலையும் பூரணமாக இணையும் பொழுது,சந்திர கலை பூரணமாக வெற்றிட சக்தியை உள்வாங்க தொடங்கும்.. அந்த நிலையில் தான் சுவாசம், நடை பெறாது... வாசம் என்ற வாசி மட்டுமே நடை பெறும்.. காற்று மூக்கு நாசியின் வழியின் வழியாக உள்ளே செல்லாது என்பது சுவாசகாரர்களான சாதாரண மனிதர்களுக்கு மிக மிக 
வியப்பான விசயம் தான்.. எண்ணங்களை மட்டுமே வெளியே தள்ளும் சூரிய கலை, சூரிய கலை உள் வாங்கிய பிரபஞ்ச சக்தியை ஒரு போதும் வெளி தள்ளாது.. இந்த நிலையில் என்ன நடக்கிறது என்று யோசித்து பார்த்தால் சந்திர கலை விண் சக்தியாகிய பிரபஞ்ச சக்தியை சதா காலமும் உள் வாங்கும் பணியை செய்து கொண்டு இருக்கும்.. சூரிய கலையின் செயல்பாடு எதுவும் இருக்காது.. வரவு ஒன்று மட்டுமே.. செலவு என்பதே இல்லை.. இந்த நிலையில் சக்தி பெருக்கம் ஏறுமுனையாக என்றும் இருக்கும்.. அளவற்ற ஆற்றல் தானாகவே வரும்.. பூரண அக்னி கலையில் மட்டுமே இது நடை பெறும்.. பூரண அக்னி கலை நடைபெறுவதற்கான பயிற்சி சூரிய கலையில் பூரண கவனம் வைப்பதாகும்.. 
அக்னி கலையில் சந்திர கலை பூரண முழு நிலவான மதியாக இருக்கும்.. இந்த மதி தான் விதியை வெல்லும் ஆற்றல் உள்ளது.. எனெனில் விதி வழி செயல்பாடான 
ஜென்ம ஜென்மான எண்ண ஆதிக்கம் இந்த அக்னி கலையில் செயல் பட முடியாததால்,அவற்றின் வழி வரும் ஊழ் 
வினைகள் தகர்த்து எறியப் படும்.. அக்னி கலையில் மதியின் ஆதிக்கமே ஓங்கி இருப்பதால் விதி ஆதிக்கம் ஒடுங்கி 
விடும்.. நாள் எல்லாம் பௌர்ணமியே.. அரசன் கேட்ட கேள்விக்கு அபிராமி பட்டர் அமாவாசை திதியை பௌர்ணமி திதி என சொன்னது அக்னி கலையில் செயல் பட்ட சந்திர கலையின் மதி நிலையே.. சத்தியம் தவறாத அந்த மதி அன்றைய விதியான அமாவாசை திதியை வென்று பூரண பௌர்ணமியை காட்டியது எல்லோரும் அறிந்ததே.. விதிக்கப் பட்ட விதிகளில் நடமாடும் மனித இனத்தை மதிக்கப் படும் மதி நிலையில் நிறுத்தி நிமிர செய்வது, அக்னி கலையில் மதியான சந்திர கலையே.. விஞ்ஞானிகள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் பொழுது அவர்கள் அறியாமலேயே அக்னி கலைக்கு சென்று விடுகிறார்கள். அங்கே ஆகாய பேரறிவு தன் பிரபஞ்ச உண்மைகளை ஒதாத கல்வியின் மூலம் வெளிப்படுத்துகிறது.. அவ்வாறே விஞ்ஞானிகள் அற்புதங்களை கண்டு பிடிக்கிறார்கள்.. ஆனால் வாசி யோகப் 
பயிற்சியில் ஒவ்வொரும் தன்னை ஒரு விஞ்ஞானி ஆகும் தகுதியை பெறுகிறார்கள்.. தன்னையும் பிரபஞ்சத்தையும் 
அறியும் ஆற்றலை பெறுகிறார்கள்.. ஆரியபட்டரை போன்று பிரபஞ்ச ஆற்றலை அளக்கும் தகுதி, பேரறிவும் புத்தியும் 
உலாவும் இந்த அக்னி கலையில் இருப்பவர்களுக்கே சாத்தியமாகும்.. சந்திர கலையில் (மதி அல்ல) செயல் படும் 
சகுனியின் அளவற்ற சூழ்ச்சிகள் எல்லாம் அக்னி கலையில் இருக்கும் கண்ணனிடம் துளியும் செல்லுபடியாகவில்லை..
உலக சூழ்ச்சிகள் எல்லாம் அக்னியின் முன்னால் தாழ்ச்சி அடைவது உறுதி.. 
அக்னி கலையில் மூச்சின் தன்மை எவ்வாறு இருக்கும் ? இதுவரை வெளிக்காற்றில் சுவாசத்தில் அற்ப பிரபஞ்ச சக்தியை மட்டும் பெற்று வந்த மனிதன் இப்பொழுது தன் உள் வாசியில் பூரண பிரபஞ்ச சக்தியை பெறும் வல்லமை பெறும் பேராற்றல் உடையவனாகிறான்.. வாசியில் இருக்கும் மனிதனுக்கு வெளிகாற்றை சுவாசிக்கும் உணர்வு இருக்காது.. மூக்கின் வழியாகவும் சுவாசம் நடப்பதாகவும் தெரியாது.. உள்ளே சுவாசம் நடப்பது போல் தோன்றும்.. அது இயல்பாக இருக்கும்.. ஆனால் உள் சுவாசத்தை சுட்டி காண்பித்து ஒரு செயற்கையான சுவாசத்தை பயில வாசி யோகிகள் தவறான கல்வியால் முனைவார்கள்.. அது பகுதி ஒன்று இரண்டில் 
சொன்னது போல மூச்சோடு உடன்பாடு உடைய உறவு கொள்ளாமல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.. எந்த 
வாசியோகப் பயிற்சி நிலைகளிலும் உடன் பாடு உடைய உறவு கெடாத நிலையில் இருப்பதை விழிப்பு நிலையில் 
கவனித்து கொண்டே வந்தால் எந்த பின் விளைவுகளும் இருக்காது.. அக்னி கலையில் ஒருவன் மன நிலை எப்படி 
இருக்கும் ? இது சரியான கேள்வி.. ஒருவன் மனம் ஆதிக்க எண்ணங்கள் அற்று தன்னில் தானாய் தன் இருப்பு நிலையில் சதா காலமும் பிரபஞ்ச சக்தியை உள் வாங்கலில் இருப்பான்.. பதறிய நிலையில் ஆதிக்க எண்ணங்களில் தன்னை இழந்த நிலையில் இருக்காமல் நொடிக்கு நொடி தன்னை சூழும் பிரச்சனைகளை,அபாயங்களை எதிர் கொள்ளும் விழிப்போடும், வெற்றிக் கொள்ளும் திறனோடும் இருப்பான்.. அக்னி கலை பெருக்கத்திற்கு வெளி சுவாசமான சூரிய கலையில் உடன் பாடு உடைய உறவோடு விழிப்பும் கவனித்தலும் மட்டுமே உதவும்.. இந்த பயிற்சியினை இந்த வாரத்தில் ஒரு நாளில் எதாவது ஒரு மணி நேரத்தில் ஒரு ஐந்து நிமிடம் வெளிவிடும் மூச்சில் 
உடன்பாடு உறவோடு கவனம் வைத்து என்ன அனுபவம் கிடைக்கிறது என்றால் எண்ண ஆதிக்கம் அற்ற இருப்பு தன்மை கொண்ட மனதும்,தனித்த நாத ஒலியும், பேர் அமைதியும், உடல் முழுமையான ஒரு தளர்ந்த ஒய்வு நிலையும் கிடைக்கும்.. அதை அனுபவித்த feed back எனக்கு கிடைக்குமா ? கொஞ்சம் சொல்லுங்களே பார்க்கலாம்.. இதனை சற்று உற்று கவனித்து நினைவில் கொள்ளுமாறு வேண்டுகின்றனன்.. அவ்வளவே.

No comments:

Post a Comment