Saturday 27 June 2015

முயற்சி ஒன்று இருத்தலில் நாதம்


இருத்தலுக்கும் (BEING) செய்தலுக்கும் (DOING) இடையே மிக பெரிய வித்தியாசம் உள்ளது.. ஒன்றுக்கு ஒன்று எதிர் மறையானது.. இதுவரை செய்தல் என்ற பயிற்சியை மட்டுமே கண்ட மனித குலம், இருத்தல் என்றதில் துணிய வில்லை.. இருத்தல் என்பது முயற்சி-- காரணநிலை--- முயற்சியை பிரித்தால் 'ம்' + உயற்சி ஆகி இணையும் தன்மையில் உயர்வு காண்பதாகும்.. பிரபஞ்ச சக்தியோடு இணையும் உயர்வால் அளப்பறிய ஆற்றல் வரவு கிடைக்கும்.. பயிற்சி என்பது ஒன்றை படைப்பதற்கான,அடைவதற்கான செயல்பாடு ஆகும்.. எண்ணங்களின் துணையோடு செயல் படும் பொழுது ஆற்றல் செலவு ஆகிறது.. வழக்கத்தில் தியானத்தில் இருத்தல் செய்தல் என இரு நிலைகளில் நடக்கின்றன.. ஆனால் இருத்தலை மையமாக கொண்ட தியானத்தை பெரும்பாலும் எவரும் செய்வதில்லை..தியானம், செய்தல் என்பதை மையமாக கொண்டு தவறாக நடைபெறுவதால்,தியானத்திற்கு பின் ஒருவகை சோர்வு தென்படும்.. ஏனெனில் சக்தி விரையம்,செய்தல் ஆன அந்த தியானத்தில் நடக்கிறது.. சரி இருத்தலுக்கான தியான முயற்சி ஏது? சற்று கவனமாக படியுங்கள்..
ஒவ்வொரு மனிதனும் நிறைநிலை மனிதன் ஆவதற்கான உளவு ஒன்றோடு இணைத்தே படைக்கப்பட்டு இருக்கிறான்.. அது தலை நடு பகுதியில் இரு காதுகளுக்கு இடையில் செவி என்ற அமைப்பில் சதா ஆற்றல் அலைகளாக ஒலித்துக் கொண்டு இருக்கும் நாதம் என்ற ஒலியே.. ஒலியை பிரித்தால் ஒ+ல்+இ எனலாம்.. அதாவது ஒன்றி (ஒ) பிரிவே இல்லாமல் லயப்பட்டு (ல்) இருக்கும் (இ) நிலையே.. இது முக்கியமாக உணர்வாக இருப்பதால்,இந்த ஒலி என்ற நாதத்தில் எந்த எண்ணமும் எழ வாய்ப்பு இல்லை.. உணர்வும் எண்ணமும் ஏற்கனவே நன்கு அறிந்ததே.. ஐயம் இருப்பின் முன் பகுதிகளை மீண்டும் படிக்கலாம்.. இந்த நாதத்தோடு இணைய, இணைய, சுத்த உணர்வு மேலும் மேலும் தூண்டப்படும்.. சக்தி விரையமாக்கும் எண்ண அலைகள் தடுக்கப்பட்டு உணர்வாக பரிமாற்றம் அடைந்து சக்தி வரவை பெருக்கும்.. ஒலி என்றாலே ஒன்றே ஒன்றான நாதம் தான்.. ஏனைய அனைத்தும் ஓசை ஆகும்.. ஒலி சக்தி வரவுக்கும், ஒசை சக்தி செலவுக்கும், காரணமாகும்.. நாதத்தை போல் ஒன்று பிரபஞ்சத்தில் ஒழுங்கு தன்மை உடைய எதுவும் இல்லை.. நாதம் என்ற பேர் ஒழுங்கில் இருக்கும் போது, எல்லா தேக மன உயிர் முரண்பாடுகள் வலுவிழந்து மறைந்து போகும் அதிசயத்தை பார்க்கலாம்.. ஆனாலும் இந்த எதிர் பார்ப்பே ஓர்
ஒழுங்கின்மையை ஏற்படுத்தும்.. இதுதான் சொல்லவும் முடியவில்லை,சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை என்ற நிலை.. 
இரு காதுகளுக்கு நடுவில் தலைநடு பகுதியில் மனம் வைத்த அந்த தருணமே,ஒலிக்க தொடங்குகின்ற அந்த நாதத்தில் சதா காலமும் இருக்க முனைய வேண்டும்.. அதிசயம் என்னவென்றால் நாதத்தோடு இணைந்து இருக்கும் பொழுது வழக்கமாக செய்யும் பணிகள் எதுவும் பாதிக்காது.. மாறாக நாதத்தால் ஏற்பட்ட விழிப்பு நிலை பெருக்கத்தால் செய்யும் எல்லா பணிகளும் நாதத்தின் ஒழுங்கு தன்மையால் சீர் படும்,செம்மை ஆகும்.. நாதம் உணர முடியவில்லை யென்றால் இரு காதுகளை கட்டை விரலால் அழுத்தி மூட, உணரும் நாதத்தை பிடித்து கொள்ளலாம்.. ஓரிரு நாளில் காதுகளை மூடாமலேயே உணர தொடங்கலாம்.. இப்பொழுது உணர தொடங்கி, தொடரும், தருணம் முதல், எல்லா சிக்கல்களும் தொடங்க ஆரம்பிக்கின்றன.. ஒழுகற்ற எண்ண அலைகள்,நாத இணைப்பை துண்டிக்க துண்டிக்க முயலும்.. ஆனால் நாத என்ற ஒழுங்கு பாதையில் கெடுப்பதற்கு ஓடுகின்ற எண்ண அலைகள் ஒழுங்கு பாதை வழியேதான் பின் தொடர வேண்டும்.. ஒழுங்கற்ற எண்ண அலைகள் ஒழுங்கு பாதையில் ஓடி ஓடி ஒழுங்கு தன்மையை பெறுகிறது.. இதுதான் நாதத்தில் இணைகின்ற போது நடக்கின்ற பெரிய மர்மம்,இரகசியம்.. இசை கச்சேரியில் ஒரு ஓரமாக வாசித்து கொண்டிருக்கும் சுரிதி பெட்டியில் எழுந்து வரும் ஒலியின் ஒழுங்கு தன்மையை மையப்படுத்தி ஏனைய இசைகருவிகள் இசைப்பது போலவே நாதத்தை மையப்படுத்தி இயங்குகின்ற எண்ண அலைகள் ஓர் இனிமையான ஒழுங்கு தன்மை அடைகின்றன.. அதில் ஒழுங்கற்ற தேக மன உயிர் நோய்கள் நாத ஒழுங்கு தன்மையால் குணமாகின்றன.. நரை, திரை, மூப்பு, சாக்காடு என்ற முரண் பாடுகளும் குணம் அடைகின்றன.. நாத இணைப்பில் இருந்தால் அது வாழ்தல்.. நீங்கினால் அது வீழ்தல்.. வாழ்தலும் வீழ்தலும் நம் கைகளில்.. சுரிதி பெட்டியை எவரும் வாசிக்கலாம்.. நாத வாசிப்பை எவரும் கேட்கலாம்.. கர்ணனுக்கு சில உயிர் கவசங்கள் பிறப்போடு உடன் வந்தது போல நம்மோடு உடன் வந்தது இந்த நாதம்.. இதன் இணைப்பை இழந்தால் உயிரை இழந்தது போல.. ம்ம் அப்படி தானே நடக்கிறது !! மேலும் நாத இணைப்பின் மேன்மையை அடுத்த பகுதியில் அறியலாம்.. அதனால் தூண்டல் தன்மை அதிகமாகி நாத இணைப்பை நாடும் நாட்டம் அதிகமாகும்.. அவ்வளவே..

No comments:

Post a Comment